https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 12 ஏப்ரல், 2017

அடையாளமழித்தல் -3

ஶ்ரீ:

அடையாளமழித்தல்-3
இதுவும் ஒரு வித அரசியல் போல . அனைவருக்கும் தன்னை தனித்து காட்டிக்கொள்ளும் விழைவே சகலத்துறைகளிலும் பொங்கி நுரைக்கிறது. அரசியல் நாற்றமெடுத்தது என்பர் , ஆன்மீகம் அதனிலும் நொதிப்பது என்று அறியார். இது வேஷம். ஆபத்து என்னவெனில் அது பிறருக்கானது அதை அவர்களும் நம்பத்துவங்குவதே.

நான் தேடலின் பொருட்டே இதில் நுழைந்தேன். என்னை ஒரு இடத்திற்கு அழைத்துவந்து விட்டு விலகியது . இனி நீ உன்னுள் உசாவிக்கொள் என . மனம் அக ஆழத்தில் சலனமற்றதாக தோன்றினாலும் , தொடுகையில் கொந்தளிப்பானது .

மனம் மிகச்சிரியது. அதில் வன்மம் , காழ்பிற்கு இடமளித்தால் சுகப்படுவதற்கான இடமில்லாத போகும் . அகவயமான தூண்டுதல்களுக்கு நவீன இலக்கியம் மிகசிறந்ததாக தோன்றியது. அது நிகழ்ந்தது தற்செயலாக .

ஜெயமோகனின்  எழுத்துக்களை வாசிக்க துவங்கியது அப்படித்தான் . அவரை எனக்கான எழுத்தாளராக நான் உணரத்தொடங்கிய பொழுது அவரது பதிவுகள் என்னைக் மிகவும் கவர்ந்தவை . அவை பல்வகைப் பட்டவை . பெரும்பாலும் வாசகர் கடிதங்கள் அவற்றுள் , பாரமார்திகம் பற்றிய நுட்பமான சந்தேகங்கள் அதற்கு ஜெ யின் ஜாக்ரதையான , பொறுப்புணர்ந்த , ஆச்சர்யமான இந்து ஞானமரபின் கருத்துகளை பலவேறு கோணங்களில் சொல்பவை .

அவற்றில் " இந்து ஞானபரபின் ஆறு தரிசனங்கள்" மற்றும் "இன்றைய காந்தி " ஒரு மகத்தான திறப்பு . அதை அடிப்படையாக கொண்டு என் கட்டுமானத்தை மறுபடி எழுப்பத் துவங்கினேன். "வெண்முரசின் மழைபாடல் மற்றும் வண்ணக்கடல்" இவை அனைத்தையும் ஏகக்காலத்தில் வாசித்தது. எனக்குள் எழுந்து ஒரு வடிவத்தை உருவாக்கி எடுத்தவை , இதில் ஆச்சர்யம் ஒரு ஆக்கத்தில் உருவான ஒரு பிம்பத்தின் இடைவெளிகளை மற்றொரு ஆக்கம் நிர்ணயங்களாக , பல சமயம் நிரவல்களாக இருந்திருக்கின்றன.

அது பாரதவர்ஷத்தையும் அதன் தொன்மத்தையும்  ஒரு வரைபடம் போல எனக்களித்தது . என் ஆழ்மனப் படிமம் தீண்டப்பட்டது இங்குதான் என நினைக்கிறேன். அதிலிருந்து ஏதாவது ஒரு இனம்காணப்படாத ஒன்று எழுந்து வந்து கொண்டே இருக்கிறது.

எனக்கு தேவை என்ன என்கிற கேள்வி என் நிறைவின்மையிலிருந்தே எழுகிறது . இலக்கிய வாசிப்பில் அவற்றைக் கண்ணுருகிறபோது , அது என்னுடைய முளைக்காத விதைகள் இங்கு வேர்விட்டுருக்கின்றன . அப்போது மின்னலின் சொடுக்கை உணர்கிறேன் . அவற்றைப் பத்திரப்படுத்துகிறேன் . என் மற்ற சொற்களுடன் அவற்றை இனைத்து எனக்கான கருத்துகளையே , கருதுகோளையோ உருவாக்கிக் கொள்கிறேன். அது என்னை மீட்டெடுக்கிறது . கல்மேல் கல்வைத்து என்னை கட்டியெழுப்புகிறது .

அதுமுதல் என்பயணத்தின் பாதை தெளிந்து வந்ததுடன் . சிந்தனையிலும் எழுத்திலும் ஒரு பாய்ச்சலை அடைந்தேன் . எனக்கென ஒரு நடையை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கும் காலமென்றானது.

திருவாய்மொழி .அதன் மீது ஒரு இனம்புரியாத பிரேமை எனக்கு எப்போதும் உண்டு . அதன் அனைத்து  பாசுரங்களும் மிக செறிவானவை. உள்ளத்தை உருக்கி கண்களில் வெளிப்படுபவை அவற்றை வாசித்தது மனதிளகி கண்ணீர் மல்கியிருக்கிறேன் . திருவாய்மொழியின் ஸ்வபதேசத்தை அறிதலே இனி வாழ்நாள் இலக்கென இருந்து கொண்டிருக்கிறேன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்