ஶ்ரீ:
அடையாளமாதல் - 42
முதற்கோணல்
திரு.ப.சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 16
அரசியல் களம் - 16
நடந்தவற்றை எந்த சார்புமில்லாது உள்ளது உள்ளபடியே இந்தப் பதிவு எழுத முயற்சித்துள்ளேன். இது அன்று நடந்த நிகழ்வு ஏற்படுத்திய பின்விளைவுகள் ஏராளம் . அவற்றை அவதானித்தானித்து பல கோணத்தில் புரிந்து கொள்ளப்பட்ட உண்மையும், பிண்ணனிகளும் ,பிறழ்வுகளும் , வெற்றியும் தோல்விகளும் பிற்கால காங்கிரஸ் அமைப்பில் எவ்வாறு வளர்சிதைமாற்றமடைந்தது எனச் சொல்லவந்தது. பல கோணல்களுக்கு வித்திட்ட முதற்கோணல் இது ,என்பதால் என் பதிவை இங்கிருந்து துவங்குகிறேன். மேலும் 1980 பல வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் பிறிதொரு காரணம்.
இரண்டுதரப்பிலும் நிறைய நடுநிசிக் கூட்டங்கள் போடப்பட்டது . பொதுவாகவே இளைஞர்களுக்கு மத்தியில் காவல்துறை என்றாலே ஒரு வெறுபெழுவது இயற்கையானது. நியாயமான சமாதான காரணங்களைச் சொல்லி மோதலை தவிற்க முயலும் "பெருசுக்களை " காட்டிலும், அடிவாங்கிக் கொடுத்தாலும் வீதியில் இறங்கி உடன் நிற்கும் இளைஞர் அமைப்பின் மேல் அதற்கு எப்போதும் ஓரு ஈர்ப்பு . முரட்டு சுபாவம் கொண்ட இளைஞர்கள் உள்ளிழுக்கப்பட அவர்களுக்கு சாதகமான அமைப்பாக அது வளர்த்தெடுக்கப்பட்டது . தாடிவைத்த முள்முகமும் முரட்டு கதராடையும் அதன் அகில இந்திய அடையாளமாக ரசிக்கப்பட்டது.
நாள் நெருங்க நெருங்க உஷ்ணம் கூடிக் கூடி வந்தது. காங்கிரஸ் அரசியலிலும் அது அசாதாரணமான சூழ்நிலையாக கணிக்கப்பட்டது. உட்கட்சி சிக்கலை இந்த அளவிற்கு கொண்டு செல்லவேண்டுமா என யோசித்தால்,அரசியலில் பிழைத்திருப்பது அவசியமாகிறது. ஒவ்வொரு தரப்பும் அதன் உச்சகட்ட வாய்ப்புகளை நோக்கியே தன்பயணத்தை அமைப்பது தவிற்கவியலாததாகிவிடுகிறது .இதை எதர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் இரண்டு தரப்பிற்குமே முக்கியமாக பட்டது ஒரு பெரிய முரண்நகை .
சண்முகம் தரப்பு இதை விரும்பாது தவிற்க நினைத்தாலும் மிதவாதிகள் இதிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். இரண்டு தரப்பு செய்திகளும் பரபரப்பாக வந்து கொண்டிருந்தது . சூம்பிக் கிடந்த காங்கிரஸ் இயக்கம்பெற துவங்கியதற்கு வெற்றிவாய்புள்ள கட்சிகளில்தான் பதவி சட்டை உக்ரமாக நடைபெறும் என்கிற தோற்ற வெளிப்பாட்டுக்கு இதுவும் ஒரு மறைமுக காரணியாக இருக்கட்டும் என விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன் .
இங்கு மிக முக்கியமாக கவணிக்கப்பட வேண்டியது கட்சியரசில் நிர்வாக அமைப்பு ஒன்று பலமாமாக இருந்ததாலேதான் இந்த சிக்கல் வெறுப்பாக இன்றும் பலர் மனத்தில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. அதுவே ஆரம்பநிலையில் எல்லா அரசியல் கணக்குகளையும் மாற்றிவிட்டது.
சண்முகம் தலைமையில் உள்ள நிர்வாக கமிட்டிகள் அவரால் பார்த்து பார்த்து தேர்தெடுத்து மிக நுட்பமாக செதுக்கி எடுக்கப்பட்டவை . ஆகவே மிக தீவிர கட்சியரசியல் கட்டுப்பாடுகளுக்கு அது வித்திட்டது . மாநில நிர்வாக பொறுப்பாளர்களாக வருவதென்பது எளிதில் நிகழ்வே முடியாத ஒன்று . அதில் இடம்பெறுபவரின் " அரசியல் ஜாதக சுத்தம்" சரிபார்க்கப்பட்டு உள்ளே நுழையவிடுவதால் அதில் பங்கு பெறுதலே மிக கௌரவமாக பார்க்கப்பட்டது.
மாநில கட்சி நிர்வாகிகள் எழுபத்தைந்து சதம் சமுகத்தில் மதிக்கப்படுபவர்களாக இருந்தார்கள். கட்சி மற்றும் தேர்தலரசியலில் பதவி கொடுக்கப்பபட்டதில் உள்கணக்கு சண்முகத்திற்கு இருந்தாலும் அது பொதுவெளியில் விவாதத்திற்கு உள்ளாகும்போது ஏதாவது ஒரு நியாயத்திற்கு உட்பட்டே நிகழ்ந்ததாக புரிந்துகொள்ளும் விதமாக அதன் காரணகாரியங்கள் மிக கச்சிதமாக பொருள்பட அமைந்திருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக