https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 44 தலைமைப்பண்பும் மாநில கட்சியரசியலும்

ஶ்ரீ:


அடையாளமாதல் - 44
தலைமைப்பண்பும் மாநில கட்சியரசியலும் 
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 17
அரசியல் களம் - 16


கட்சியரசியல் அமைப்பு சண்முகம் தலைவராக நீடித்தவரை வலுவாக இருந்ததற்கு அவர் வைத்திருந்த  இரண்டு கட்ட அமைப்புமுறையும் அதற்கு அவரின் தெளிவான சூத்திரமும் அடிப்படைக் காரணிகள் .அவருடைய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட முறையிலும் அமைப்பிலும் ஒரு ஒழுங்கும் தர்க்க ரீதியில் அதை விளக்கும் வழிவகைகளையும் கொண்டிருக்கும் .

அவரின் நிர்வாகிகளின் நியமனம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் , ஜாதிரீதியிலும், மதரீதியிலும் , வர்க மற்றும் சமூகத்தை பிரதிநிப்படுத்தும் வகையில் மிக நுட்பமாக நெய்யப்பட்டிருக்கும்

நியமிக்கப்பட்ட நிர்வாகிகளில் எழுபது சதம் மிக மிக சாமான்யர்கள். பலவருடமாக கட்சியில் இருப்வர்கள் , எளிய குடும்ப வாழ்கைமுறையை கொண்டிருப்பதுடன் கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமானவர்கள் .ஒருகாலமும் அதற்கு எதிராக திருப்பாதவர்கள்

பல சோதனையான காலகட்டத்தில் கட்சியிலிருந்து வேகமாக பலர் பலகாலமாக  வெளியேறிக் கொண்டேயிருந்தும் , கட்சி உடைந்தத்தாக ஒரு தோற்றத்தை எவராலும் இன்றுவரை உருவாக்கவே முடியவில்லை

சட்டமன்ற உறுபினர் மற்றும் அமைச்சர் கனவோடு கட்சிக்கு வரும் பொருளியல் பலமுள்ளவர்கள், தொகுதியில்  வெற்றிவாய்ப்புள்ளவர்களின் , ஆட்சி அதிகார பதவிக்கான  கோரிக்கைகளில்  என்னென்ன விட்டுக்கொடுக்க முடியுமோ அனைத்தையும் கொடுக்கத் தயங்காத சண்முகம் , அவர்கள் கேட்கும் சிறிய  கட்சி பதவியை மட்டும் விட்டுத்தரவேமாட்டார்.

அதனால் கட்சி அமைப்பு, ஆளும் அரசு தனக்கு கட்டுப்பட்டது என்கிற நினைப்பில் அது செயல்படும். ஓரளவிற்கு சட்டமன்ற வளாகத்தில் தலைநிமிர்வாக அவர்களை காண இயலும். அதனுடைய எந்த பலனும் தங்கள் வாழ்வியலில் பிரதிபலிக்காது போனாலும் . அவர்களுக்கு கட்சிகாரன் என்கிற அடையாளமே போதுமானது

இன்று இவர்கள் காணாமலாகி வருவது கட்சிக்கு நல்லசேதி இல்லை . இத்தகையவர்கள் வலுவுடன் இருந்ததாலும் , ஏற்படும் சங்கடங்களை சொன்னால் ஏனென கேட்க ஒரு தலைமை தயாராக இருந்ததாலும் , இரண்டு அரசியல் அமைப்பும் ஒன்றுடன் ஒன்று ஆரோக்கியமாக அனைத்து இடத்திலும் மோதுக்கொண்டே இருக்கும்

இது தேர்தலரசியல் நேரம் . அவர்கள் கட்சி சித்தாந்த அனுகுமுறையற்றவர்கள் , வெளிபடையாக வன்முறைக்கு துணியும் கூட்டம். கட்சி வட்டாரத்தில் எந்நேரமும் இது காழ்ப்பாக எல்லோரிட இருந்து கசிந்தபடியே இருந்தது.

எங்கும் எவர்வாயிலும் இளைஞர் காங்கிரசின் தாக்குதல் நடபெறலாம் என்பது  செய்தியானது . ஒரு களியாட்டு போல அனைவரும் அதை உள்ளூர எதிர்பார்க்க துவங்கினர் . ஒரு ஆதிவாசி அனைவருள்ளும் வண்மத்துடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான் போலும்.பிற கட்சிகளின் செயல்பாடு இதன் எதிர்நிற்க இயலாமல் சுருண்டன. காங்கிரஸ் பலம்பெறத்துவங்கியது போல தோற்றம் கொண்டதும் அணிகள் இருபக்கமும் திரளத்தொடங்கினர்.

ஆந்திரா காங்கிரஸ் கமிட்டியிலும் இதுபோன்ற சம்பவம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றபோது , கட்சிஅலுவலகம் ரணகளமாகியது அனைத்து முக்கிய தலைவர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர் . செய்தியின் வீர்யம் தில்லி தலைமையை எட்டியதும் , ரகளையில் ஈடுபட்டவர்களின் பெயர்களை தில்லி தலைமை கேட்டுப்பெற்றது.

ஒழுங்கு நடவடிக்கைகையில் அனைவரும் நீக்கபடுவார்கள் என்கிற எதிர்பார்பு தீவிரமடைய. தில்லி அந்த அனைவருக்கும் சீட் கொடுக்க சொல்லிவிட்டது நல்ல நகைமுரண். இதற்குபின்னால் உள்ள அரசியல் கணக்குகளே தேர்தலரசியலை முடிவு செய்பவை

அந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 42 இல் 41 வெற்றிபெற்றது. ஆனால் அந்நிகழ்வினால் ஏற்பட்ட வெறுப்பும் கோபமும் 1983 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 294 தொகுதியில் 60 வெற்றிபெற்று அவமானகரமான தோல்வியை எதிர் கொண்டது.அதன் பிறகு அந்த வீழ்ச்சியிலிருந்து மீள வெகுகாலமாகியது.


இளைஞர் காங்கிரஸ் அமைப்பு மிக வெற்றிகரமாக இயங்கிய வரலாறு எந்தக்கட்சிக்கும் இல்லை . மாநில கட்சிகளில் அது ஒரு கோமாளித்தனமானது .மாற்று தேசிய கட்சிகளில் இன்று நடைமுறைக்கு சாத்தியமாகவில்லை , ஆனால் ஆனால் அகில இந்திய காங்கிரசின் இன்றைய பரிபவத்திற்கு இளைஞர் காங்கிரசின் அமைப்பு முறை சீர்குலைத்ததே முக்கிய காரணம். ஏனெனில் அது நாற்றங்கால் போன்றது ,நாளைய விளைச்சலுக்கு வேண்டியது. "விறைநெல் தளிகைக்கு போன கதையாகயது."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக