https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

கைவிடப்படல் (வெண்முரசின் மாமலர் நாவல் )

கைவிடபடலும் விடாமையும்



வெண்முரசின் பல சொல்லாட்சிகள் என்னை கடுமையாக பாதிப்பவைகள் , மூளையின் நரம்பை சொடுக்குபவையாக, மனதிற்கு இதமான மயிலதோகையின் தொடுதலாக , நிமிடத்தில் சொல்திரளா எண்ணங்களுக்கு வண்ணம் தருபவையாக ,என் வாழ்கையில் நான் கடந்த வந்த நிகழ்வுகளை ஒத்த தருணங்களாக அவற்றை வாசிக்கும் போது உளமுருகி அந்த நினைவுகள் மேலெழ கண்ணீர் மல்கியிருக்கிறேன். அவை என்னை ஆசுவாசப்படுத்துபவையாக , மெல்ல அந்த எடைமிகுந்த நேரங்களை, நினைவுகளை பனியாக உருக்கி என் நினைவுகளின் மடிப்பிலிருந்து அவற்றை அகற்றிவிடுகின்றன.

சில சொல்லாட்சிகளில் மணிநேரம் தெரியாது ஆழ்ந்து விழுவதும் நிகழ்வதுண்டு . அவற்றை பதிவெடுத்து வைத்து விட்டு  அவை அந்நேர உணர்ச்சி மட்டுமா ? அல்லது எப்பப்பொழுது அவற்றைக் கண்ணுரும் போதெல்லாம் நான் அவ்வாறே அதில் இயைந்து நனைகிறேனா என நினைவெழும் பொழுது அதை ஒட்டி என் மனதில் தோன்றுவதைக் பதிவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.

பல சமயங்களில் அவை முண்ணுர்ந்த கணங்களுக்கு கொண்டுசெல்லுவதில்லை எனில அவற்றை நீக்கிவிடுவதை வழமையாக கொண்டுள்ளேன் . ஆனால் இந்த இந்த சொல்லாட்சி பதிந்து பலநாட்கள் வரை நீடித்தது ஒவ்வொருமுறை வாசிக்கும்போது அதன் எடைக்கூடுவதை அறிகிறேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசை என்பது இலக்கு என்கிற நிலையை அடையும்போது ,அது வெற்றிபெறும் சாத்தியக்கூறுகள் தென்படத்துவங்கியதும் அதை மனத்தால் மட்டுமின்றி  உடலாலும் அதை அறிகிறான் . இரண்டும் இணையும் கணங்களில் தன் முழுவெற்றியை அவனால் காண இயலுகிறது .

ஆனால் தன்னை சுற்றி நிழும் செயல்கள் அனைத்தும் அவனது வெற்றியை உறுதிப்படுத்தியபோதும் ,உடலால் அதை உணர முடியாதபோது அவன் நிறைவடைவதில்லை . எழுந்துவரும் தடையை எதிர்கொண்டு காத்திருக்கிறான்

அந்த நிமிடம் அவன் தர்க்க புத்தி விவாதிக்கத் தொடங்குகிறது . அதிலிருந்து தான் இடையவிருப்பது முற்றான வெற்றியாக இருக்காது எனத்தெரிந்தும் , தலைமை பண்பினால் தன் விழைவை வழிநடத்துகிறான் .

அந்த இடத்தில் அவனது நடிப்பு தொடங்கிவிடுகிறது . மற்றவர்களுக்கு இடவேண்டிய உத்திரவுகளையும் அவனும் பிறரும் ஆற்ற வேண்டியதை ஒருங்கமைத்தாலும். உள்மனது அதை மறுத்தே எழுகிறது. இரட்டை மனநிலையை ஒருங்கே அடைந்து பற்றில்லாது செயல்படுதலே தலமைப்பண்பு எனப்படுகிறது .

மூர்க்கமாக ,வென்றேயாக வேண்டும் என , பின்விளைவாக நிழ்வதைப் பற்றிய கவலையற்று கடக்கும் மனிதன் அதமன் , பிறர் சொல்லும் ஆறிவுர்ரையினால் இலக்கை கைவிடுபவன் மத்திமன் , தனக்கேயாக தனக்குரிய வகையில் ஊழின் ஆடல் புரிந்து தெளிந்து கைவிடுபவன் உத்தமன். விருஷபர்வன்  உத்தமன் .


“நான் ஒப்புகிறேன், ஆசிரியரின் ஆணையை நிறைவேற்றுகிறேன்” என்றான் விருஷபர்வன். கிருதர் அவனை வெறுமனே நோக்கினார். அவன் விழிகளில் தெரிந்த துயருக்கு நிகரான ஒன்றை அதற்குமுன் கண்டதே இல்லை என்று சாயை எண்ணிக்கொண்டாள். என சாயைத்தான் நினைக்க வைக்கிறார் ஜெ. கிருதரை அல்ல

“இப்படி ஏதேனும் நிகழுமென்றே எதிர்பார்த்திருந்தேன். பெற்றுக்கொண்டே இருந்திருக்கிறேன், திரும்ப அளிக்கவேண்டியிருக்கும். திரும்ப அளிக்கவேண்டாத எதையும் நாம் பெறுவதில்லை.” ஆனால் அவன் முகத்தில் துயர் இருக்கவில்லை, ஆழ்ந்த அமைதிதான் தெரிந்தது. அவள் மீண்டும் அவன் விழிகளை நோக்கினாள். அங்கே தெரிந்த துயர் அவளை நடுக்குறச் செய்தது.

“இவ்வகையில் இது முடியாது என்று என் உள்ளம் சொல்லிக்கொண்டிருந்தது. நான் எளியவன், என்னைவிட பேராற்றலும் தவவல்லமையும் கொண்ட அசுரமூதாதையர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அடையாத முழுவெற்றி எப்படி எனக்கு கைகூடும்?

ஏதோ ஒன்று எழுந்து வரவிருக்கிறது என்று எண்ணிக் காத்திருந்தேன். ஆசிரியரிடமிருந்து வருமென எதிர்பார்க்கவில்லை.

” அவன் சற்று புன்னகைத்து “ஆனால்  அசுரகுலம் என்றும் ஏமாற்றப்படுவது. தன் அன்புக்காக, நெறிநிலைக்காக, பெருந்தன்மைக்காக, கொடைக்காக, அருந்தவத்திற்காக அது தோல்வியை விலையாக பெற்றிருக்கிறது. நம்பியதன்பொருட்டு முற்றழிந்திருக்கிறது. இம்முறை குருவைப் பணிந்தமைக்காக நான் தோற்கடிக்கப்படுகிறேன்.  இவ்வாறே இது நிகழ்ந்தாகவேண்டும், வேறொரு வகையில் நிகழமுடியாது. அதற்கு வரலாறே இல்லை” என்றான்.

எழுந்துகொண்டு “நான் ஆசிரியரின் கால்களை என் நெற்றிதொடும்படி பணிந்தேன் என்று மட்டும் அவரிடம் சொல்லுங்கள்” என்றான்.

கிருதர் எழுந்து “உமது சொற்களின் அனைத்து உட்பொருட்களையும் உணர்ந்தேன். ஆனால் ஆசிரியர் இன்று ஒரு சொல் சொன்னார், எண்ணியிராதன நிகழும் என்று. அவர் உம்மேல் கொண்ட அன்பு அச்சொற்களுக்கு அடியில் உறைகிறது என இப்போது உணர்கிறேன். தாங்கள் எண்ணியே இராத நன்னயம் உங்கள் கொடிவழிகளுக்கு நிகழும். தெய்வத்தை நம்பியவர்கள்கூட அழியக்கூடும், ஆசிரியரை நம்பியவர்கள் கைவிடப்பட்டதில்லை” என்றார். விருஷபர்வன் தலைவணங்கி கைகூப்பி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.

என்னை உலுக்கியது அது . ஆம் இது உலகிருக்கும் வரை திகழப்போகிற பேரிருப்பு. வெற்றியை கொண்டாட வேண்டுமானால் தோற்கவே பிறந்த மற்றொரு தரப்பு இருந்தேயாகவேண்டும் . எவ்வித நியாயங்களாலும் அவற்றை இட்டு நிறப்ப முடிவதில்லை . ஊழின் துலா ஒருபக்கம் சாய்வதற்கே உருவானவை போலும். காலம் அதை சமனபடுத்தியதாக எங்கும் காணக்கிடைக்கவில்லை. "தெய்வத்தை நம்பியவர்கள்கூட அழியக்கூடும், ஆசிரியரை நம்பியவர்கள் கைவிடப்பட்டதில்லை” . எப்பேற்ப்பட்ட உண்மையிது. இந்து ஞானமரபின் உலகெங்கிலும் காணப்படாத பாரதவர்ஷத்திற்கேயான தனித்த தத்துவம் . பெருமை கொள்ளத்தக்க கணம். ஜெவிற்கு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக