https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 26 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 29 திரு.ப.சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 4ஶ்ரீ:


அடையாளமாதல் - 29
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 4
காங்கிரசின் தொய்வும் மீட்சியும் - 3
அரசியல் களம் - 16.தனிமனித உணர்ச்சிகளுக்கும் அரசியல் யதார்த்தங்களுக்கும் உள்ள மாறுபாடுகளை பிரித்து புரிந்து கொள்ளத் ஒருவனுக்கு  தெரியவில்லை என்றால் அவன் அரசிலுக்கு லாயக்கில்லை. அவனுக்கு அரசியல் தன்னிடமுள்ள கற்கவேண்டிய அற்புத பகுதிகளை திறந்து காட்டுவதில்லை . அதன் கதவுகள் மூடிக்கொள்ளுமாயின் அவன் கற்பதற்கு அங்கு ஒன்றுமில்லை 

அரசியலில் நான் தேர்தெடுக்கப்பட்டவன் என்கிற ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு என்றுமே உள்ளது . காலத்தால் நான் தேர்தெடுக்கப்பட்டது, பின் எண்ணி எண்ணி எனக்கு சொல்லிக்கொடுக்பட்ட பாடங்களின் பலன் அரசியலுக்கா அல்லது என்தனிப்பட்ட வாழ்கைக்கா என்கிற பதிலை நான் இன்னும் கண்டடையவில்லை . மனிதன் தன்வாழ்கையைப் பற்றிய புரிதலை அடைவதைக் காட்டிலும் அற்புதம் பிறிதொன்றில்லை . அது எந்த கூறிலிருந்து வெளிப்படும் என் எவராலும் கணிக்க இயலுவதில்லை.

லாபம் என்பது பொருளியலால் மட்டுமே அளக்கபடுவதைப் போன்ற மடமை பிறிதொன்றில்லை. வாழ்கையின் அர்த்தம் புரிபடுவது  ஒரு ஒளிமிக்க தருணம் . அரசியலையும் இலக்கியத்தையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன் .

எனக்கு வாய்த்த ஒரு அரிய தருணத்தை நினைவுகூர்கிறேன் .திரு..சண்முகம் அவர்களை எனக்கான அரசியல் குரு என கண்டடைந்தது தற்செயலானது. அவர் தலைமையின் கீழ் பணியாற்றும் முகமாக காலம் என்னை தயார்படுத்தியதை இன்று நினைத்துப் பார்க்கிறேன் . அவரை பல கோணத்திலிருந்து பார்க்கும் மற்றும்  ஆராயும் வாய்ப்புகள்  அமைந்ததால் என்னால் அவரை , அவருடைய அரசியல் ஆளுமையை பரிபூரணமாக பார்க்க ,புரிந்துகொள்ள , கற்றுக்கொள்ள , கற்றுக்கொண்டது கொண்டு சலனமற்று காத்திருக்கவும் தெரிந்து கொண்டேன்.

ஆனால் காலம் அவருக்கு முற்றும் எதிரான தரப்பில் என்னைக் கொண்டு இணைத்தது , பத்து வருட காலம் திரு.சண்முகத்திற்கு எதிர்ப்பான அரசியலை அங்கு எனக்கு கற்றுக் கொடுத்தது   .அங்கு இருந்து கொண்டு அவரை அஞ்சியும் வெறுத்தும், எதிர்த்துமாக அரசியல் செய்து கொண்டிருந்த இடத்தில் நான் நன்கு வளர்க்கப்பட்டேன் .
அங்கு எனக்கு கிடைத்த அடித்தட்டு தொண்டர்களுடனான தொடர்பை வேறு எங்கு இருந்ததும் பெற்றிருக்க முடியாது.

நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள். காங்கிரசுக்கிருந்த அடிப்படை செல்வாக்கை பற்றியும் . இளைஞர் காங்கிரசில் எனக்கு அறிமுகமான சண்முகம் பற்றி களத்தில் வேறுவிதமான வடிவம் கிடைத்தது. அவர்மீது ஒருவித ஈர்ப்பு உருவானது இங்குதான் என்பதை இப்போது தெளிவாக உணர்கிறேன்.சண்முகம் மிக ஜாக்கிரதையாக அனுகவேண்டிய தலைமையாக அறிவுருத்தப்பட்டேன்.


தொகுதி ரீதியான அறிமுகமும் ஏற்பட்டதும் , தாழ்தப்பட்ட சமூகத்தின் காங்கிரஸ் ஆதரவு தளம் எந்தவிதத்தில் வளர்தெடுக்ப்பட்டது என்பதை பற்றிய புரிதல் அடைந்ததும் . அங்கு இன்னமும்  சாதி மேல் கீழ் அடுக்காக கண்ணுக்கு தெரியாத ஆனால் உயிரோட்டமுள்ளதை அறிந்து அருவெருப்படைந்ததும். எனக்கான பாணியை நான் உருவாக்கிக் கொண்டதும் அந்த மண்ணில் தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக