https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 37 சிக்கல் முகம்சூடல் - 1

ஶ்ரீ:

அடையாளமாதல் - 37
சிக்கல் முகம்சூடல் - 1
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 12

அரசியல் களம் - 16.வேட்பாளர்களைத் தெரிவு செய்ய மேலிடப் பார்வையாளர்கள் புதுவைக்கு வந்து கருத்து கேட்பதென்பது ஒரு சடங்கு போலவே இன்றும் நடைமுறையில் உள்ளது . அந்த குழு மாநில அமைப்பினிடையே நிகழ இருக்கும் உரசிலுக்கு எண்ணையிட்டு அது பற்றிக் கொள்ளாது நிர்வகிப்பதை வழமையாக கொண்டது.

உட்கட்சி ஜனநாயகம் என்பது அனைவரின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பது , அவர்களின் கருத்தை கேட்பது . முடிவு என்று வருகிறபோது அது அனைவரும்  சேர்ந்து எடுப்பதல்ல. நடைமுறைக்கு சாத்தியமில்லாதது காரணம் அரசியலில் சொந்தக்கணக்குகளே பிரதானம் . இந்த இடத்தில் மாநில கட்சிக்கும் தேசியக்கட்சிக்கும் பெரிய வித்தியாசமிருப்பதை பார்த்திருக்கிறேன் .

தேசியகட்சிகளில் உள்ள நிர்வாகிகளுக்குள்ள சுதந்திரம் மாநில கட்சிகளில் உள்ளவர்களுக்கு இருப்பதில்லை . ஏனெனில் மாநில கட்சிகள் சிறிய அமைப்பு . அதன் கட்சி நிர்வாகம் தலைமையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் எல்லாவற்றிலும் அவர்களுக்கென்று ஒரு உள்கணக்கு இருக்கும் அதை அனுசரிப்பதே அங்கு நிர்வாகமென்பது

"இளவரசனுக்குசும் பட்டத்துயாணை செய்கை ஆராய்தலுக்கு அப்பால் " என ஒரு சொல்லுண்டு .எப்போது என்ன நடக்குமென யாரும் அறியமுடியாது. மாநில தலைமைக்கு பணிவிடை செய்வதற்கு  கூலியாக சில சலுகைகள் கிடைக்கும் . அங்கு உரிமை என்பது கெட்டவார்தை. அவர்களுக்கான கூலி நல்லதும் கெட்டதும் உடனுக்குடன் பைசல் செய்யப்பட்டுவிடும்.சுயமரியாதை மருந்துக்கூட இருக்கமுடியாது.

தேசிய கட்சிகளில் இந்த நிலை இல்லையா என்றால் . அங்கும் இதேநிலைமை உண்டு ஆனால் "அது ராஜாவிற்கு பணிவிடை போல் என்பர்" ராஜா வயதானவர் நிதானமிருக்கும் ஏற்கனவே செய்த நன்மைகளை நினைத்தாவது பார்ப்பார்.
நிறையபேருக்கு  அத்தகைய ஊழியம்பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது அது தில்லியில் தலைமையிடம் நெருக்கமாக உள்ளவர்களுக்கே வாய்ப்பது

பலவித கலச்சார , பண்பாடு ,மொழி ,இன ,ஜாதி போன்ற இடியாப்ப சிக்கல் உள்ள ஒரு நாட்டின் அகில இந்தியத் தலைமைக்கு எல்லாவற்றிலும் ஒரு உள்கணக்கு இருக்க வாய்பில்லை , அது மனுஷசாத்தியமுமில்லை. எனவே பிறரை ஆலோசித்தே முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ள மிகப்பெரிய நிர்வாக முறை என்பதால் நிர்வாகிகளின் கருத்திற்கு அவர்கள் மதிப்பளித்தே தீரவேண்டும் .அந்த சந்தர்பங்களில் தங்கள் சுயமரியாதை பேணிக்கொள்ள கொஞ்சமேனும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் அகில இந்திய தலைமைக்கும் சில தனிப்பட்ட உள்கருத்துக்கள் இருக்கும் , அதை செய்து கொடுக்க ஆசைப்பட்டு உள்வட்டத்தில் நுழைபவர்கள் மாநில கட்சியின் நிர்வாகிகள் படும் பரிபவத்தை அடைந்தே ஆகேண்டும். இங்கு அது தேவையா என்கிற முடிவெடுக்கும் வாய்ப்பாவது உள்ளது. ஆனால் மாநில அமைப்பில் அது ஒன்றுதான்,வேலை அது ஒன்றுதான் வாய்ப்பே.

இன்றும் தில்லியில் காங்கிரசில் சுயமரியாதையுள்ள பல பெரிய தலைவர்கள் காணக்கிடைக்கிறார்கள் என்பது ,என் நேரடி அனுபவம்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக