https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 3 மே, 2017

அடையாளமாதல் - 51 ரணகளம் - 2

ஶ்ரீ:



அடையாளமாதல் - 51
ரணகளம் - 2
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 24
அரசியல் களம் - 16




இதற்கிடையில் கவனிப்பாரற்று கிடந்த கார்களின் அனிவகுப்பு திடீரென ஒரு மிருகம்போல் உயிர் பெற்றெழந்தது. நடந்து கொண்டிருக்கும் நிகழ்விற்கு தனக்கும் எவ்வித சம்பந்தமில்லாதது போல ,எல்லாவற்றையும்  கடந்து சென்று மறைந்தது . தாக்குபவர்களும் , தாக்கப்படுபவர்களும் இதற்காகவே வந்ததுபோல எதையும் பொருட்படுத்தாது எண்ணி வந்ததை நிகழ்த்தியவண்ணம் இருந்தனர் .

சிறிது நேரத்தில் அனைவரும் காணாமலாகி , சட்டென அந்த இடம் வெரிச்சோடிப் போனது . நான் திக்பிரம்பை பீடித்திருந்தேன் . சகஜ நிலைக்கு திரும்ப சில வினாடிகளானது. என்ன நடந்தது , ஏன் நடந்தது என புரியாததால் என்னை தொகுத்துக் கொள்ள இயலவில்லை

யாரையோ துரத்திக்கொண்டு ஓடிய குப்பலில் சிலர் சாவகாசமாய் கொடிகம்பை பிடறியில் வைத்து இருகைகளை அதில் தொங்கவிட்ட படி திரும்பிக் கொண்டிருந்தனர் அவர்களுக்குள் சிலர் இன்னும் ஆவேசம் அடங்காதவர்களாக, அடிக்க கிடைக்காத யாரையோ சொல்லித் திட்டியபடி என்னை கடந்து சென்றனர் . அத்தனையும் கிராமத்து கெட்ட வசவுகள். அவர்களில் சிலரை நான் இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன் . ஒரு நிமிடம் திக்கொன இதயத்தை காதில் கேட்டேன் . நல்லவேளை என்னை ஒன்றும் செய்யாமல் தாண்டிச் சென்றனர் அவர்களில் ஒருவன் சினேக புண்ணகையுடன் என்னைப்பார்த்து பின் தலை திருப்பி அவர்களுக்குள் பேசிய படி சென்றான் .

அடுத்து நிழப்போவது என்ன ?என்கிற தகவல் இல்லாததால் . இப்போதைக்கு இது போதும் , என்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன். வீடுதிரும்ப நினைத்த போது, அங்கு நின்று பேசியபடி இருந்த மற்றொரு கும்பலில் இருந்து சிலர் என்னை அடையாளம் கண்டு கைவீசி அவர்களிடம் அழைத்தனர் . நான் அனிச்சையாக அவர்களுடன் சென்று இணைந்து கொண்டேன்

அவர்கள் தங்களுடனான பேச்சை தொடர்ந்தனர். அவர்களின் பேச்சினூடக எனக்கு இரண்டு புரிந்தது. ஒன்று;அது திட்டமிட்ட தாக்குதலென்றும் மிக கச்சிதமாக நிறைவேறியது பற்றியுமானது என. இரண்டு; தாக்கப்ட்டவர்கள் சேவாதளத் தொண்டர்கள் .அதற்கு மேல் எனக்கு புரியும்படி ஒன்றும் தேரவில்லை . அவர்கள் தொழில்முறை அரசியல் செய்ய வந்தவர்கள் . என்னைப்போல் என்ன ஏதென புரியாது வேடிக்கை பார்க்க வந்தவர்கள் அல்லர்.

புதுவையிலிருந்து கோரிமேட்டை நோக்கி அந்த கார் வேகமாக வந்துக்கொண்டிருந்ததையும் ,பின்னாலும் சில கார்கள் அவற்றை பின் தொடரந்து வந்து கொண்டிருந்ததையும் சிலர் பார்த்து எச்சரிக்கை ஒலி எழுப்பினர் ஒரு விதமாக நாக்கை மட்டும் மடக்கி அடிப்பது .

விபரீதமாக ஏதோ நடக்கப்போகிறதென்று புரிந்ததும் சிலர் சிட்டாக பறந்தனர். சிலர் கையில் வைத்திருந்த கழியை உறுதியாக பற்றிய படி தாக்க தயாராகினர் . எனக்கு பதினேழு வயது "ரெண்டுங்கெட்டா " என்பாறர்களே அதுமாதிரி .அங்கு நிராயுதபாணி நான் . என்னை காப்பாற்ற வேண்டிய அளவிற்கு அவர்கள் நான் நெருக்கமானவன் இல்லை . எனக்கு அங்கிருந்து ஓடுவதில் உடன்பாடில்லை . அவமானமாக இருந்ததால் . உடலை இறுக்கிக் கொண்டேன் , என்ன ஆனாலும் சரி என்று.

வண்டியிலிருந்து வேகமாக இறங்கியவர்கள் என்னுடன் இருந்தவர்களைப் பார்த்து கைகொட்டி சிரித்தபடி இறங்க . அவர்கள் நண்பர்கள் . சற்று நிம்மதியாக இருந்தது . காரைப் பார்த்து ஓடியவர் திரும்ப வருவதை பார்த்ததும் அவர்களில் விடலை போன்ற ஒருவன் அடக்கமாட்டாத வெடி சிரிப்பின் விசை தாங்கமால் குனிந்து குனிந்த கைதட்டி சிரிக்கத் தொடங்கினான் . வந்தவர்களுக்கும் சிறிது அவமானமாக இருந்தது . அவனை அடிக்க வந்தனர். அவர்களில் உயரமாய் தாடிவைத்து தலைவன் போல்தெரிந்த ஒருவன் எல்லோரையும் அடக்கி , "இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் சேவாதளத் தொண்டர்களால் தாக்கப்படப் போகிறது " என்கிற தகவல்  சொல்லி . எங்கள் எல்லோரையும் உடனே கொண்டுவந்திருந்த காரில் கிளம்பச்சொன்னான்


சட்டென உஷணமாகி , அனைவரும் சடசடவென காரில் ஏறினர் நான் செய்வதறியாது நின்றேன் . கார்கள் ஒவ்வொன்றும் பின்னால் நகர்ந்து திரும்ப ஆரம்பித்தன. கிளம்ப தொடங்கும் நேரத்தில் கார் உள்ளிருந்து "அவன்" என்னை ஏறச்சொல்ல நான் சற்று தயங்கினேன், அவன் சிரித்தபடி "ஏறு தோழா " என்றான் . என்னை அதுவரை யாரும் அப்படி அழைத்ததில்லை . ஏதோ ஒரு உந்துதலில் காரில் ஏறிக்கொண்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்