https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 17 மே, 2017

அடையாளமாதல் - 70 * ஊசி நுழையும் பிரிகள் *

ஶ்ரீ:





அடையாளமாதல் - 70
* ஊசி நுழையும் பிரிகள் *
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 43
அரசியல் களம் - 19





ஒரு ஆட்சி மாற்றத்தை சண்முகம் கெடுத்தார் என கட்சிக்குள் நீண்டநாள் பொருமல்களாக அது ஒலித்தபடியே இருந்தது . "இரண்டு பேர் கூடுமிடத்தில் மூன்றாவதாக ஒரு கருத்திருக்கும்" என்பர் . இது ஜனநாயகத்திற்கு உட்பட்டதே .ஆனால் அகங்காரம் , கட்டுப்பாடற்ற தன்மை , ஒழுங்கின்மை , பொறுப்பின்மை இவற்றின் தொகுப்பே அந்த சட்டமன்றத்தில் நிளவியது. அது போன்றதொரு அரசியல் இளிவரள் மிகுந்த பேரவையை புதுவை இதுவரை கண்டதில்லை .அந்த ஆட்சி கவிழ்ந்ததில் புதுவை ஐந்து மாதம் கவர்னர் ஆட்சியின் கீழ் இருந்தது.

1991 தேர்தல் பல வகையில் புதுவை அரசியலில் பழைய சமன்பாடுகள் குலைந்து புதியன கண்டடையும் முயற்சிகளின் துவக்கமாக  அமைந்தன. அது மிக சிக்கலான ஒன்று. மரைகார் - சண்முகம் கோட்பாடுகள் , பலமுறை முயன்று பார்க்கப்பட்டு , தவறுகள் களையப்பட்டு , சரிசெய்யப்பட்டவை .இருவருக்கும் மத்தியில் உள்ள எல்லைகோடுகள் இருவரின் பிறழ்வுகளில் இருந்து கிளைத்தெழுந்தவைகள் . எனவே அவை இருவராலும் நன்கு புரிந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும் . கட்சி ஒருவருக்கு ஆட்சி ஒருவருக்கு . இருவரும் அவரவர் தங்கள் இடத்தை திறம்பட நிர்வகித்தனர் .

சண்முகத்தின் ஆளுமை உயர்ந்தியும்  மரைகார் தாழ்ந்ததாக சொல்லவருவதல்ல என்பதிவுகள் . கட்சி சமாண்யர்களுக்கானாது . அவர்களை அரவணைக்கும் தலைமையின் பிறழ்வுகள் சூழ்நிலையில் தவிற்க இயாலாதவைகள் , அவை அவரவர் மனத்தோடு விளையாடுபவைகள் . பொதுமக்களுக்கும் அவர்களுகானதே ஆட்சி . அதில் சமன்பாடுகளை பெரிய விலை கொடுத்தே அடையவேண்டியிருக்கும் . அதில் நெறிகள் ஒரு பொருட்டல்ல ஆனால் சண்முகம் நெறிசார்ந்து இயங்குபவராக ஒரு தோற்றத்தையாவது கொடுத்த்துக்கொண்டே இருந்தார்.

கணக்குகள் அடைப்படையில் மிக எளிதானவைகள் 30 தொகுதிகளில் நகர்புறங்களில் காங்கிரஸ் தனிநபர்களின் செல்வாக்கில் ஜெயிப்பவை . அவற்றில் 5 தனித்தொகுதிகள். அவற்றில் காரைகால் நெடுங்காடு தவிர அன்றைய சூழலிலில் கட்சி முகமுள்ள வேட்பாளர்கள் யாரும் நீடித்தத்தில்லை என்பதே வரலாறு . ஊசுடு மாரிமுத்தவை அடுத்ததாக சொல்லலாம்

நெடுங்காடு தவிர மற்றத் தனித்தொகுதிகள் ஆட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் வாய்தவை. அவற்றில் நிரந்தரமாக கட்சியில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை . பெரும்பாலும் அரசு உத்யோகத்தில் இருப்பவர்கள் அல்லது அறிமுகமற்றவர்கள் அல்லது சுயேட்சையாக நின்று வெற்றிவாய்ப்பை குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் இழந்தவர்கள்  திடீர் வேடபாளர்களாகி களமிரங்குவர்.

புதுவை அரசியலில் ஒவ்வொரு முறையும் மாற்றப்படுவதற்கு பின்னால் இவர்கள் நிச்சயமிருப்பார்கள் 

 வழமையை மாற்றி இந்த முறை மாநில அரசியலுக்கு சண்முகமும் மத்திய அரசியலுக்கு மரைகாரும் என மாற்றி முடிவெடுத்தார் ராஜீவ்காந்தி . சட்டமன்றத்திற்கு ஆசைப்பட்ட அனைவரும் சிறு நலுங்களை உணர்ந்தனர் . ஆட்சிமுறையில் மரைக்கார் பாணி அனைவரும் அறிந்தது . சண்முகத்தின் பாணியானது எப்படிப்பட்டது என யூகிக்க இயலாதது . வீட்டு பெரிசு போல என்ன அழிச்சாட்டியம் பண்ணும் என தெரியவில்லை

1985 கார்களில் ஏசி பொருத்துவது என்பது மிகுந்த செலவேறியது . சொகுசின் உச்சமாகக் கருதப்பட்டது . அமைச்சர் மரியதாஸ் தன்னுடைய அரசாங்க காரில் ஏசி பொருத்தியதை பத்திரிக்கைகள் கடுமையாக விமரசித்திருந்தன. சண்முகம் மரியதாசை நேரில் வரவழைத்து திட்டித்தீர்த்தார் . முதல்வேளையாக ஏசி காரிலிருந்து அகற்றப்பட்டது . அதிகாரத்திற்கு வந்த அனைவரிலும் இது ஒரு முள்போல  குத்தி நின்றது.


சண்முகத்தை புதுவை காமராஜர் என் அழைப்பதுண்டு. அவர்தான் அடுத்த முதல்வர் என்றதும் பலர் தூக்கமிழந்தனர் . அவர் காமராஜர் பாணி அரசியல்வாதி. ஓயாது பழங்கதையாக பல சம்பவங்களை தொகுத்து சொல்லிக்கொண்டே இருபவர் . பலர் பலமுறைகள் கேட்ட கதைதான் . யாருக்கும் சலிப்பென ஒன்று உண்டே. சில சமயம் அவர் தொடங்கியதும் பலர் எகிறித் தெறிப்பர் . அது ஒரு இளிவரல் அவர்மீது கவிழ்ந்துள்ளதை அவரும் அறிவார் . ஆனால் அவராலோ பிறிதொருவராலோ நிறுத்தத்தான் முடிவதில்லை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்