https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 26 மே, 2017

அடையாளமாதல் - 81 * புரிதலின் புதிய கோணங்கள் *

ஶ்ரீ:










அடையாளமாதல் - 81
*  புரிதலின் புதிய  கோணங்கள்   *
இயக்க பின்புலம் - 8
அரசியல் களம் - 25




சண்முகம் என்னிடம் சொன்னது, என் மூளையில் தேனீயின் ரீங்காரம் போல தலையை உதற உதற அது மறுபடி மறுபடி அருகில் பறந்தபடியே இருந்தது . "உங்களது மோதல் போக்கை களத்தை தவிர வேறெங்கும் பயன்படுத்தாதீர்கள்" என்றார். "உங்களுக்கான நல்லதிற்கும் நான்தான் "என்றார் . மிக கனிவான கூற்று அது, அல்லது அவரின் நுண்ணிய அரசியல் தொடுதலாகக்கூட இருக்கலாம் . எவரின் அரசியலிலும் வேண்டியதை கட்சித் தலைமையிடம்தான் கேட்டு பெறவேண்டியிருக்கும். தன்னை நிலைநிறுத்த விருப்புபவர் ஓயாத தெருச்சண்டையில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கவியலாது. கிடைத்ததை உண்டு பலம் பெருக்கினாலொழிய , அடுத்த சண்டைவரை உயிர் வாழ்வது இயலாமல் போகலாம்.  

அதனால்தான் அரசியலென்பது கட்சிக்கு வெளியில் இருப்பது போலும் . கண்ணனின் பாணி அதை எப்போதும் கட்சிக்கு உள்ளேயே நிகழ்த்திக் கொண்டிருப்பது . சண்முகமும் மரைகாரும் அதை தெளிவாக கையாண்டிருக்கிறார்கள் . காலில் அணியும் செறுப்பை போல பேச்சுவார்தையின் போது அவை அறைக்கு வெளியே  கழற்றி விடப்பட்டு கிடந்தன. அவர்களின் சமன்பாடு எங்கோ, எதானாலேயோ குலைந்ததனால் 1991 தேர்தல்களம்  இங்கு வந்து சேர்திருக்கிறது. அது பல யூகங்களுக்கு நடுவே கருணையற்று சென்றுகொண்டேருந்தது.

அன்று காலை பாலன் என்னை பார்க்க விழைகிறார், அவசரம் என்றதும் , நான் விரைந்தேன் . பாரத்ததும் வைத்திலிங்கத்தை சந்திக்கச்சொல்லி தகவல் என்றார் . அவர் தொகுதியில் அவருக்கான மாற்று வேட்பாளராக என் பெயர் பிரேரனை செய்யப்பட்டு இருப்தாக கூறினார் . 

யார் என் பெயரை பிரேரனை செய்தது , ஏன் என கேட்க நேரமில்லை . என்னை தேடி என் வீட்டிற்கு வைத்திலிங்கத்துடைய காரியதரிசி சென்றிருப்பதாகவும் உடனே சென்று சந்திக்க சொல்லிவிட்டு பாலன் களத்திற்கு சென்றுவிட்டார் .

நான் குழம்பியபடி வீடு வந்ததும் , எனக்காக அவருடைய காரியதரிசி துரைசாமி காத்திருந்தார் . நான் வேட்புமனு தாக்கல் செய்யத்தேவையான அனைத்துப் படிவங்களும் அவர் கையுடன் எடுத்து வந்திருந்தார். அதை தாக்கல் செய்ய சில அரசாங்க சான்றிதழ்கள்  தேவை அது ஏதும் அப்போது  என்னிடமில்லை . மனு தாக்கலுக்கு ஒரு நாளே உள்ள நிலையில் என்ன செய்வது என அவரையே கேட்டேன் . அவர் சில அரசு அதிகாரிகளின் பெயர்களைச் சொல்லி அவர்கள் வந்து பார்ப்பார்கள் , அவர்களுடன் தொடர்பில் இருக்கச்சொல்லிவிட்டு போய்விட்டார் .

சுமார் ஒருமணி நேரத்தில் அவர்சொன்ன அனைத்து அதிகாரிகளும் என்னிடம் வந்து படிவங்களில் கையெழுத்துப் பெற்றுச்சென்றார்கள் . அனைத்தும் அந்த ஒரு மணிநேரத்தில் முடிந்துவிட்டது . அனைத்து சான்றிதழ்களும் என்னிடம் கொடுத்துவிட்டார்கள் .அவற்றை நான் தனிப்பட்ட முறையில் எடுக்கச்சென்றால் குறைந்தது நான்கு நாட்களாவது தேவைப்படும் . இவை அரசியல் அதிகார மாயையின் "ஒரு சிறு துளி " அவற்றுடனான முதல் அறிமுகம் பிரமிப்பைத் தருவதாக இருந்தது .

நான் கையெழுத்திட்டுக் கொடுத்த அனைத்த பேப்பர்களும் சரிபார்க்கப்பட்டு , தாக்கலுக்கு தகுதியானவை என அறிதியிடப்பட்டு . அன்று மாலையே என்னை வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சொன்னார்கள் . நான் பாலனிடம் தகவல் சொன்னேன் . அவர் மனுதாக்கல் செய்துவிட்டு வைத்திலிங்கத்தை சந்தித்து அனைத்து தாஸ்தாவேஜிகளை அவரிடத்தில் ஒப்படைக்கும்படி சொன்னார் . நான் நெட்டப்பாக்கம் தொகுதியில் களத்திலிருந்து வைத்தியலிங்கத்தை சந்தித்து எல்லா சான்றுகளையும் ஒப்படைத்தேன் . அது அவருடனான என் முதல் சந்திப்பு . வாக்களார்களை சந்தித்துக்கொண்டிருந்த அவருடன் கைகுலுக்கி அறிமுகமாகி , பேப்பர்களை ஒப்படைத்துவிட்டு நான் காரில் திரும்பும் போதுதான் , "அதை "முதல்முறையாக , "அதை "மிகச்சரியாக உணர்ந்தேன் . அதுதான் என்முதல் கணிப்பென நினைக்கிறேன் .

அன்று எனக்குள் நிகழ்ந்தது என்னவென இப்போது உணர்கிறேன் . என்னுடைய சிந்தனையைதாண்டி ஒன்று என்னுள் தொடந்து தர்கித்துக்கொண்டே இருந்திருக்க வேண்டும் . இல்லையெனில் நான் சிந்தனைக்கு  எடுக்காது ஒரு விஷயம் திடீரென புரிதலுக்கு உள்ளாக வேண்டியதில்லையே . நான் அதுவரை கணிசியாத சண்முகத்தின் தோல்வியை, கண்ணனின் கைவிடப்படலை, வைத்தியலிங்கத்தின் முதலவர்வாய்ப்பை, பற்றிய ஒரு தெளிவான ஒரு பார்வையை மின்னலின் சொடுக்களைப் போல பெற்றேன் . அது தான் இறுதி . நான் உறுதியாக நம்பினேன்.

பாலனிடம் அதைப்பற்றி அன்று இரவு சொன்னபோது , நிறைய கேள்கவிளுக்கு மத்தியில் என்னை திரும்பத்திரும்ப வைத்தபடி இருந்தார். தர்க்கம் ஓயவேயில்லை . அதில் கடந்தகால ஓட்டு சதவிகித கணக்குகளுடன், தொகுதியின் உள்  சமன்பாடு போன்றவைகள் முக்கிய காரணிகளாக இருக்கும்   . பல பாதைகளை திறந்து காட்டக்கூடிய ஒரு விளையாட்டு , மிக ஆபத்தானது , அதன் கதவுகளை திறந்தால் அது அடுத்த கதவின் முன் கொண்டு நிறுத்தியபடியிருக்கும் ஒரு  தீரா ஆடல் . அதில் எவர் நுழைந்தாலும் கணாமலாவதை தவிற பிறிதொரு முடிவில்லை. ஒரு கட்டத்தில் மூளை முடிச்சிட்டுக்கொள்ளும். இதில் வேடிக்கை , சில அடிப்படைகளில் கூட அவர் கேள்விகளையே கேட்டபடி இருந்தார் . காலம் சில முக்கிய தருணங்களில் அடுத்தவர் சொல்லுக்கு செவிகூர்வது சிறுபிள்ளைத்தனமானதாக தோன்றிவிடுமோ என்னவோ .

அன்று மாலை என்னை தேர்தல் சின்ன ஒதுக்கீட்டிற்கு வரச்சொல்லியிருந்தால் அங்கு சென்றேன் . அப்போதுதான் சுப்பராயக் கவுண்டரை முதல் முறையாக நேரில் சந்தித்தது , என்னையாரென அவருக்கு தெரியாததால் , நேரடியாக வம்புக்கு வந்து ,நான் யார், ஏன் அங்குவந்து தேவையற்று போட்டியிட விரும்புகிறேன் என்றெல்லாம் கத்திக் கொண்டேயிருந்தார் . நான் சிரித்தபடி அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு  கடந்து சென்றேன் . அவருடன் வந்திருந்த ஓரிரண்டு பேர் என்னை அறிந்திருந்தார்கள் என நினைக்கிறேன் , சிறிது நேத்தில் அவர் என்னை பார்பதை முற்றிலுமாக தவிற்த்தார் . நான் மனதிற்குள் நினைத்ததுக் கொண்டேன் . செல்வாக்கென்பது ஒரு தோற்றமே அதைத்தாண்டி அது ஒன்றுமில்லை , அல்லது அதை மேலும் பெருக்க விரும்பும்  வீங்கின அகங்காரத்தின் திணவு  அவ்வளவே . அல்லது அது ஒரு ஆதிக்கம் போல , ஒரு நுண்ணிய குறியீடுகளாக மலர்பவை. நம் சிந்தனைக்கு யாதொரு வேலையையும் வைக்காதே , நமக்காக பிறிதொருவர் சிந்திக்க துவங்குவர் , அவர்களே இட்டு கட்டி ஊதிப் பெருக்கிய பேருருவத்தை கண்டு அவர்களே அஞ்சுவர் . அது ஒருவித கோமாளித்தனதின் உச்ச வெளிப்பாடு .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்