https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 3 மே, 2017

அடையாளமாதல் - 52 ரணகளம் - 3



ஶ்ரீ:



அடையாளமாதல் - 52
ரணகளம் - 3
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 25
அரசியல் களம் - 16



காரில் என்னுடன் இருந்தவர்கள் ஒரு ஏழு எட்டு பேர் இருப்பார்கள் என்னை "தோழா" என்று அழைத்தவனுக்கு என்னை தெரிந்த அளவிற்கு அவனை தெரியாது.தவிர மற்றவரகள் என்னை கண்டுகொள்ளவில்லை .மறுபடியும்  அவர்களுக்குள்  நடந்த நிகழ்வு பற்றி ஏதோ பேசியபடியே வந்தார்கள் . கார் ராஜா தியேட்டர் சந்திப்பில் சிக்னல் இல்லாததை அப்போதுதான் கவனித்தோம். விபரீதமான உணர்வு , ஏதோ சரியில்லை . நாற்புற வீதி வெறிச்சோடி காணப்பட்டது . சிலர் கந்தன் தியேட்டரை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர் . கந்தன் தியேட்டர் பக்கத்தில் தான் இளைஞர் காங்கிரசின் அலுவலகம் உள்ளது . சட்டென மண்டையில் அடித்தது போல் புரிந்தது "இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்படுகிறது" . எங்கள் வண்டி விரைவெடுத்தது .

இளைஞர் காங்கிரசின் அலுவலகம் மாடியில் உள்ளது அதன் வழியை அடைத்தபடி அண்ணாசாலையில் அரை வட்ட வடிவில் சேவாதளத் தொண்டர்களால் சுற்றி வளைக்கப்ட்டுவிட்டது . படி மிக குறுகலானது . ஏறி சென்று தாக்குவது அறவீனம் .அங்கு எப்படியும் இருநூறு பேராவது இருப்பார்கள் . ஒரே சமயத்தில் இரண்டு மூன்று பேர் மட்டுமே நுழைய முடியும் சிக்கினால் வாடிவாசல் காளை கதிதான். பின் அந்த முற்றுகை அர்த்தற்றது . வெகுநேரம் நீடிக்க முடியாது . காவல்துறை தலையிட்டால் முடிந்துவிடக் கூடியது. அவ்வளவு மொண்ணையா சேவாதளம்?

ஆனால் சூழல் மாறிக்கொண்டிருப்பதை அவர்கள் அறியவில்லை . அலுவலகத்தின் பின்புறமுள்ள தென்னைமரம் வழியாக ஒருவர்பின் ஒருவராக அலுவலகத்திற்கு அடுத்துள்ள மரவாடியில் இறங்கி கையில் கிடைத்த மரச்சட்டங்களை எடுத்த்துக் கொண்டு , அனைவரும் இறங்கிவருவதற்காக காத்திருந்தனர் .

நாங்கள் சென்று சேரவதற்குள்ளாகவே நூறுபேருக்கு மேல் இறங்கியிருக்க வேண்டும். நாங்கள் ஐந்து வண்ணடியில் அருகணைந்ததும் எங்களை கண்டுவிட்டு சேவாதளத் தொண்டர்கள் எங்களை நோக்கி திரும்பவும் , மரவாடிக்குள்ளிருந்த இளைஞர் காங்கிரசார் வெளியே பாய்ந்து வந்து அவர்களை பின்பக்கமாக கடுமையாக் தாக்கத்தொடங்கினர். என்னுடன் வந்தவர்களும் சாமனயர்களல்ல , ஆக்ரோஷத்துடன் முன்னாலிருந்து தாக்கத்தொடங்கினர் .

மறுபடி வெறித்தனமான தாக்குதல் இம்முறை சேவதளத்தின் முட்டாளதனம் . இளைஞர் காங்கிரசார் இதற்காகவே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது . சேவாதளத்தொண்டர்களால் சில நொடிக்குமேல் தாக்குபிடிக்க முடியாமல் இடைபட்ட அரவிந்தர் வீதி வழியாக புகுந்து காங்கிரஸ் அலுவலகத்தை நோக்கி ஓடினார்கள் . இவர்கள் வெறியியோடு யுத்தக்குரல் எழுப்பி அடித்தபடி துரத்தத் தொடங்கினர் .

காங்கிரஸ் அலுவலகம் பக்கத்தில் இருந்ததால் சில நிமிடங்களிலேயே இரண்டு பிரிவும் அலுவலகத்தில் நுழைந்து மீண்டும் அவர்களை தாக்க துவங்கினர் . மேலே முதல்மாடியில் வெங்கட்ராமனுடன் பேசிக்கொண்டிருந்த கூட்டத்தில் தாக்கப்டடவர்கள் புகுந்ததும் துரத்தி வந்த கூட்டம் எவ்வித தயக்கமும் இன்று உள்புகுந்து தாக்கத் தொடங்கினர் .

அது சிறு பகுதியென்பதால் யாரும் வெளியேறி ஓடிவிட முடியாதபடியால் தாக்குதல் கொடூரமாக நிகழ்ந்தது .உயிர் சேதமில்லையே தவிர சிலர் படுகாயம் அளவிற்கு தாக்குதலுக்கு உள்ளாயினர் . உச்சகட்டமாக சண்முகம் அறைக்குள் ஒரு கும்பல் புகுந்து தாக்கத் துவங்கியது . உள்ளிருந்த பலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர் . பக்கத்து வீடு கட்டுமானத்திற்கு குவிக்கபட்டிருந்த மணல் மீது குதித்தால் யாருக்கும் பெரிதாக அடியில்லை .

அதற்குள் முக்கிய தலைவர்கள் அனைவரையும் கடுமையாக எச்சரிக்கை செய்ததும் வந்த கும்பல் மெதுவாக இயல்பாக நழுவியதும் அமைதி திரும்பியது. பிறகுதான் யார் யார் எங்கிருக்கின்றனர் எனப் பாரக்கத் துவங்கினர்


வெங்கட்ராமனை பார்த்த போது நடந்த களேபரத்தில் எந்தவித பதட்டமுமின்றி ஒரு இரும்பு மடக்கு நாற்காலியில் தன்னுடைய தோல் பரீப்கேசை மார்பில் சாய்த்படி அமெதியாக அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர் மெதுவாக எழுந்து ,சுற்றியிருந்த கூட்டத்தை அலட்சியமாக பார்த்துவிட்டு தன் சபாரி சூட்டில் இருந்த தூசியை தட்டிவிட்டபடி  தன்னை சூழ்ந்திருந்தவர்களை புறங்கையால் ஒதுக்கிதள்ளி சண்முகத்துடன் வெளியேறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...