https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 13 மே, 2017

அடையாளமாதல் - 64 * தான் பிறிதொன்றாதல் *

ஶ்ரீ:

அடையாளமாதல் - 64
* தான்  பிறிதொன்றாதல்  *
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 37
அரசியல் களம் - 18கண்ணன் மிக சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர் , நண்பர்கள் வட்டமே அவரின் அடிப்படையாக, பலமாக இருந்தது , காமராஜர் மீது ஈடுபாடு  உண்டு  , அதைத் தொடர்ந்தே அவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் இணைந்தார் . ஆனால் அரசியலில் அவரிடம் உள்ள அலையாயும் மனத்தால், அவரது அரசியல் பாதை பல முற்றாகவேயான திருப்பங்களை கொண்டதாக இருந்தது

காத்திருப்பது என்பது அரசியில் ஒரு பாலபாடம் துரதிர்ஷ்டவசமாக அதை அவர் கற்கவேயில்லை . கசப்பும் காழ்ப்புமாகவே அவர் தன் அரசிலைத் தொடர்ந்தார். ஒரு நிலையிலிருந்து ஒரு நிலைக்கு வெகு எளிதாக பயணித்தார்.அதற்கான காரணத்தையும் நியாயத்தையும் சடக்கென கண்டடைந்தார் . அடைந்ததை உடைக்கவும், உடைத்ததலிருந்து மற்றொன்றுக்கும்  மிக எளிதில் பயணமானார் . பிறகு மனதிலிருந்து பேசுவதை முற்றாக மறந்து கூடுகிற கூட்டத்திற்கு ஏற்புடைத்து, என்று தாம் நம்பாததையும் பேசத்துவங்கினார் .

ஒரு நிலையில் அனைவரின் கண்களிலும் தெரியும் இளிவரளை கண்டும் காணாதவரானார். அவர் பேசி நகர்ந்த அனைத்து இடத்திலும் அவரே நகையாட்டுப் பொருளானார்.ஒரு தலைமையின் வீழ்ச்சி இடிபாடுகளால் தரைதொட்டு சிதறிப்போனது .

காலம் கனிவு மிக்கதாக கண்ணனை பாரத்த சந்தர்பங்களுண்டு அப்படிப்பட்ட ஒன்றாக, சண்முகத்துடன் கைகோர்த்துக்கொள்ள வந்த வாய்ப்பை தவறவிட்டது அவரது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை . கட்சியரசியலில் மட்டுமல்ல ஜனநாயக அரசியல் அமைப்பில் கூட எதிர்தரப்பு என்பது நிலைபாடுகளால் ஆனது , அதற்கானத் தலைமை என்பது ஒரு குறியீடு, அவ்வளவே

அந்தத் தலைமையையே தன்பாதையை வழிமறிக்கும் தடையாக ஒற்றப்டையில் பார்ப்பது , ஒரு அரசியல் தலைமையின்  சிந்தனைப்பெருக்கை சிறுத்துப்போகச்செய்வது . காழ்ப்பையும் கசப்பையும் கைப்பொருளாக கொண்டவருக்கு பாதைகள் எங்கும் அடைபட்டே கிடக்கும் .

1985 காங்கிரஸ் ஆட்சியேறியதும் மரைகார் தவிற்க இயலாத  கட்சியின் சட்டமன்ற தலைவரானார் . அவர் முதல்வரானதும் மற்றைய மந்திரிகள் தெரிவுசெய்ய தில்லயில் கூடினர் . அதில் மரைகாருக்கு அடுத்த ஸ்தானத்தில் கண்ணன் அமைச்சரவையில் வைக்கப்பட்டார் . ஆனால் அதற்குள் மரைக்கார்- சண்முகம் ஆளுமைக்கான உட்கட்சி யுத்தம் அடுத்த நிலைக்கு சென்றுவிட்டிருந்தது .  

கண்ணனை மரைகாருக்கு அடுத்த ஸ்தானமென்கிற யுக்தி சண்முகத்துடையது அதற்கான மாற்று சமன்பாடாக சண்முகம் தரப்பு ஜோசப் மரியதாஸ் கண்ணனின் இடத்திற்கு நகரத்தப்பட்ருந்தார் . இது தில்லியில் எடுத்த நிலைபாட்டிற்கு விரோதமானது

ஆனால் இந்த விஷயத்தில் தில்லியின் தலையீடு ஒரு எல்லைக்குட்பட்டதே . காரணம் அமைச்சராக இவரிவர் வரவேண்டுமென்பது மட்டுமே தில்லியின் தீர்மானத்திற்கு உட்பட்டது. ஆனால் இலாக்கா பகிர்மானமே அவரவருக்கான அமைச்சரவை நிலை நெறிமுறைகளை தீர்மானிப்பவை. அதில் தில்லித்தலைமை சிபாரிசு செய்ய இயலுமே தவிர, அதைத்தாண்டி அது செய்வதற்கு ஒன்றில்லை . அது முதல்வர் மற்றும் மாநில தலைமைச்செயாளலரின் இடையே மட்டுமே பேசத்தக்கவை . அங்கு மூன்றாவது நபருக்கு வேலையில்லை.

தில்லியின் முடிவை மாற்ற இயலும் என்கிற செய்தியே கண்ணனை நிலைகுலைய வைத்தது . சண்முகத்திற்கும் ஜோசப் மரியதாஸ் மரைக்கார் சார்பு நிலையெடுத்துவிட்டது துனுக்குறச்செய்தது . அந்த சந்தர்ப்பத்தில் கண்ணன் நேராக சண்முகத்தை சந்தித்து முறையிட்டதும் , சண்முகம் கண்ணனுடன் மரைகாரை அவரது இல்லத்தில் சந்தித்து இலாக்கா விஷயத்தில் தில்லியில் எடுக்கப்பட்ட நிலையை மீறினால் அடுத்து நடப்பதற்குகெல்லாம் மரைக்கார் பொருப்பேறக்க வேண்டியிருக்கும் என்றார்


அதற்கு என்ன பொருள் என்பதை அவரும் அறிவார் . நிலைமை சீர்பட்டது. அங்குதான் சண்முகம் ஜோசப் மரியதாஸ் அவர்களுடன் இருப்பதை கண்டார் . அதுவே ஜோசப் மரியதாஸ் அரசியில் சவப்பெட்டியில் கடைசீ ஆணி அறையப்பட்டது . அதிலிருந்து அவர் எழுந்து வரவேயில்லை . சண்முகத்தின் கோபம் அப்படிப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக