ஶ்ரீ:
அடையாளமாதல் - 56
குறுங்குழு அரசியல் - 4
திரு.ப.சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 29
அரசியல் களம் - 16
சண்முகம் மற்றும் மரைக்கார் இருவருமே காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் . அது தஞ்சையின் அரசியலை பின்புலமாக கொண்டது , புதுவை பகுதியுடன் இனைக்கப்பட்டதே ஒரு விசித்திரம் . பிரஞ்சு காலத்திலிருந்து தஞ்சை அரசியல் மிக விச்சித்திரமானது . அந்த இருவர் இருந்தவரை அது மாறவேயில்லை.
சண்முகத்திற்கு மிக அனுக்கமாக இருந்த காலத்தில் அவரிடத்தில் இயற்கையிலேயே இருந்த வெற்றிடங்களையும் , பலருக்கு அவரைப் பற்றிய புரிதல்கள் மாயையானவை என்பதை அறியமுடிந்தது. அவரது அரசியல் கணக்குகள் தன் அனுபவம் சார்ந்து , அரசியல் சூழியல் சார்ந்து பொருத்திருந்த புரிதலிலிருந்து அதை வளர்த்தெடுத்துக் கொண்டார் . தர்க்கம் சார்ந்து தன் நிலைகளை நிறுவ இயலாததால் , தொடர் உரையாடல்களின் வழியே அவர் தனக்கான இடங்களை வென்றெடுத்தார்.
ஒருமுறை நம்பிக்கை இழந்தவர்களை அவர் பின் எக்காலத்தும் நம்பிவதில்லை . அவருக்கு "ஆமை "என அரசியில் உள்வட்டத்தில் ஒரு பெயருண்டு . ஒருவரிடத்தில் சந்தேகமுற்று ,ஆமையைப் போல ஒருமுறை அவயங்களை உள்ளிழுத்துக் கொண்டால் பின் எப்போதுமே அவரின் பொருட்டு அதை தளர்த்துவதில்லை .
சண்முகத்தின் மூடிய கரத்திற்குள் ஒன்றுமே இருந்ததில்லை , தங்கள் அணி அதில் ஏமாந்தது குறித்து ,பிற்காலத்தில் பாலாஜி ஒருமுறை என்னிடம் ஆவேசமாக சொன்னபோது .அவருக்கு நான் அவர்கள் அணியின் புரிதல் பிறழ்வுகளால் அவை வீழ்ந்த தருணங்களை சுட்டிக்காட்டிய, போது அவர்கண்களில் அடிபட்ட வலியை பார்க்கமுடிந்தது.
மிக நிதானப்போக்குடைய சண்முகம்கூட காரைக்கால் அரசியலில் நடந்து கொண்ட முறை ஏறக்குறைய மரைக்கார் பாணி என்பதை மிக நுட்பமாகும் ஆராய்ந்தால் அறியக்கூடியதே. இருவரும் மிகச்சரியான அரசியல் உடண்பாட்டில் இருந்திருக்கலாம் . அதை ஒட்டியே அவர்கள் சக்திமிக்கவர்களாக நீடித்தனர்.
புதுவை காங்கிரசில் அரசியல் நோக்கர்களாக பல பெருந்தலைகள் இருப்பதையும் , அவர்களின் கணக்குகள் பிழையுறுவதில்லை என்பதை இன்று வரை யாரும் அறிந்ததும் கூட இல்லை. அவர்களில் பலருடன் எனக்கு மிக நல்ல தொடர்பிருந்தது அதை ஏற்படுத்தித் தந்தவர் சண்முகம் . அவர்கள் விளையாட்டாக சொன்ன ஒரு விஷயம் தேர்தல் சீட் பற்றியது . இருவருமாய் மோதிக்கொள்ளும் இந்த சீட் சர்ச்சை பல நிலைகளில் சீட்டுக்கட்டுபோல அவர்களால் விளையாடப்படும் என்றும் கட்சி ஒருவருக்கு ஆட்சி ஒருவருக்கு என்கிற ரீதியில் . சில சீட்டுகள் புதுவையிலேயே ஒன்றுக்கு ஒன்று என விட்டுக்கொடுப்பதின் வழியே சமன்செய்யப்படும் , எஞ்சியவை தில்லி வெஸ்டன் கோர்ட்டில். இருதொகுதிக்கு மேல் தில்லித்தலமையை அது அடைந்ததே இல்லை என சொல்லுவார். அது எவ்வளவு நிஜம் என அப்போது தெரியாது . ஆனால் இங்கிருந்து பார்க்கையில் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றுதான் நினைக்கிறேன்.
அனேகமாக அந்த சமன்பாடுகளின் விசை 1991 ல் குலைந்தது . அதன் பிறகே அது விசித்திரமான திசைகளில் பயணித்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக