https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 1 மே, 2017

அடையாளமாதல் - 49 முதல் பார்வை .

ஶ்ரீ:
அடையாளமாதல் - 49
முதல் பார்வை .
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 22
அரசியல் களம் - 16என்காலை எடுத்து முன்னால் அழுத்தமாக வைத்து இனி அந்த திரளின் ஒத்திசைவிற்கு உடன்படப்போவதில்லை என்று முடிவெடுத்ததும் , அதுவரை என்னை பிணைத்திருந்த மாயசங்கிலி பட்டென அறுந்து நான் தனியாக உதிர்ந்தேன்திரள் என்னை பொறுப்பில்லாமல் விட்டுவிட்டு நாலப்பக்கமும் சென்றது . அது எதிலிருந்தோ வழுக்கிக் கொண்டு செல்வது போல மிகவேகமாக என்னை வேண்டாத கழிவை போல விட்டு சென்றது . நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை . மூச்சடைப்பது நின்றுது.பலவித வீச்சமெடுத்த வாசனைகளுக்கு மத்தியில் நின்றிருந்ததை , புகை கக்கியபடி சென்ற திருவள்ளுவர் பஸ் விட்டுச்செல்லும் திடீர் டீசல் நாற்றம் மாற்றியதிலிருந்து தெரிந்தது. எங்கும் எரிந்த டீசல் நாற்றம் .

அடுத்து செய்க்கூடுவதை நிதானிக்குமுன்பாக , கருணையற்ற முரட்டுக்கரம் என்னை பிடித்து ஒரு பக்கமாக தள்ளி விட்ட போதுதான் நான் ரோட்டில் அத்தனை நேரம் தனியாக கிறுக்கனைப் போல நின்று கொண்டிருந்து உரைத்தது . மற்றொரு கூட்டம் பின்னால் வந்து கொண்டிருந்தது ,அந்தக் கூட்டத்தின் நடுவில் வந்துகொண்டிருந்த அவரை , அந்த மனிதரை முதல் முதலாக பார்த்தேன் .

சண்முகம் . மிக மெல்லிய வெள்ளை கதர் காலர் வைக்காத  மொட்டைக்கழுத்து ஜிப்பா வேட்டியில் சற்று கூடுதல் நடுத்தர உயரமுள்ள கருத்த உடலும். கருப்பும் வெளுப்புமோடிய முடியை முன்பிருந்து பின் நோக்கி படிய படிய வாரிய தலை , மீசையில்லாமல் அவர் ஒரு அசல் கிராமத்து ஆள் . இவர்தான் சண்முகமாயோசிப்பதற்குள் சுற்றி எங்கும் பெரும் குரலொலி சூழ்ந்திருக்க பொதுவாய் அனைவரையும் கும்பிடும் குவிந்த கையோடு ,அவர் என்னை கடந்து சென்று ,திரளில் மறைந்து காணாமல் போனார்.

சற்று நேரம் என் இரு தோள்களை இடித்படி ஓடிக்கஒண்டிருந்தவரகளை பார்த்தபடி இருந்தேன் . சட்டென மின்னல் சொடுக்கியது போல் ஒரு எண்ணம். அவரை மறுபடி பார்க்கும் ஆவலில் . அந்த கூட்டத்தை துரத்தினேன் . சற்றுமுன்னர் கடந்து சென்ற அவரை வெகு தொலைவில் எங்கோ பார்த்தேன் . எப்படி இவ்வளவு தூரம் ஒரு மனிதனால் கடக்க இயலும். இனி பின் தொடர்ந்து கூட்டத்தை விலக்கி அவரை அடையவது சாத்தியமில்லை

ரோட்டோர கடைகள்  திண்ணை போல உயரமான பிளாட்பாரத்தின் மேல்  இருந்தது . அங்கிருந்தும் சிறு கூட்டம் தொங்கிக் கொண்டிருந்தது . அருகில் இருந்த ஒரு கடையின்  மேடையேறினேன் . அங்கிருந்து நன்றாக பார்க்க முடிந்தது


கார்களின் அனிவகுப்பு ஒன்று தொலைவில் புழுதி கிப்பியபடி புதுவை எல்லைக்குள் மிக வேகமாக நுழைந்தது . முன்னால் வந்த கார் ரோட்டை அடைத்து நின்ற கூட்டத்தை நெருங்கியதும் சற்றுத் தயங்கியது  . கூட்டத்திலிருந்து யாரோ மிகவேகமாக கையை ஆட்டி கத்தியபடி நின்ற காரை நோக்கி ஓடினார் . பின் அந்த கார் மெல்ல நகர்ந்து பின்னால் வந்த பெரிய கார்நடு ரோட்டில் நிற்க தோதாக ஓரமாக சென்று நின்றது.அதிலிருந்து சிலர் வேகமாக இறங்கி ஓடி நடு ரோட்டில் நின்ற பெரிய காரின் கதவுகளை வேகமாக திறந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...