https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 9 மே, 2017

அடையாளமாதல் - 58 கூட்டணி அரசியலிக்கு வித்திட்ட 1980

ஶ்ரீ:





அடையாளமாதல் - 58
கூட்டணி அரசியலிக்கு  வித்திட்ட 1980
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 31
அரசியல் களம் - 17




"காத்திரப்பு " அரசியலில் சணமுகத்திற்கு ஈடில்லை மரைகார் , என்றாலும் அது பற்றிய தெளிவான ஞானமுள்ளவர் . சாதகமற்ற சூழலில் அதே வழிமுறையைக் கையாண்டார். காத்திருப்பது மட்டுமின்றி அந்த களத்திலிருந்தே வலகிக்கொண்டுவிடும் மனத்திடம் உற்றவர் . "கிடைக்கும் என்றால் முயற்சி இல்லையெனினும் கிடைத்துவிடும். கிடைக்காதெனில் எம்முயற்சியாலும் பலனில்லை " என்பது அவரது சித்தாந்தம். இதை முக்கிய தருணங்களில் சொல்வதை பார்த்திருக்கிறேன் .

கண்ணன் "காத்திருத்தல்" என்பதன் பொருளை அறியாதவர் . தற்கொலைக்கு ஒப்பான நிகழ்வில் ஒவ்வொரு முறையும் ஈடுபட்டு அவர் ,மரைகாருக்கு இடம் ஏற்படுத்திக்கொடுத்ததை தவிர அவர் அடைந்தது ஒன்றில்லை. எந்தவொரு புது திட்டத்திற்கும் தன்னை தொகுத்துக் கொள்ளும் முகமாக        " ரகசிய" கூட்டங்கள் நிகழும் . அதில் தன் விருப்பங்களை தீர்மானமாக கொண்டுவருவதும் . அது பத்திரிக்கைகளில்  கசிய விடப்படுவதும் , அது உணர்ச்சி அலைகளை பெருக்கவிடுவதால் கிடைக்கும் விளம்பரத்தின் வருடல்களிலேயே சொக்கி , நிஜ உலகிற்கு வெகு தொலைவிற்கு அப்பால் இருந்தார்.

1980 தேர்தலில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது . அதற்கு சண்முகம் காரணமென்றனர் . பின் பிறிதொருவர் எப்படி காரணமாக இருக்கமுடியும் . கண்ணன் சண்முகத்தை நம்பித்தான் ஏமாந்தார் என் அவரின் நொருங்கிய நண்பர் இன்பசேகரன் என்னிடம் சொன்னதுண்டு . அப்படியும் இருக்கக்கூடுவதே.காரணம் கண்ணன் ஸ்திரசிந்தனையற்றவர் . திறக்கும் கதவுகள் தோரும் நுழையத் தயங்காதவர். எப்போதும் பொங்கியபடி இருப்பது ஒரு தலைவனுக்குறியதே . ஆனால் அது மட்டுமே அல்லவே.

என்னுடைய புதிய இளைஞர் காங்கிரசின் நண்பர்கள் சொன்னது அந்த கோரிமேடு தாக்குதல் தற்செயல் நிகழவன்று ,நன்கு திட்டமிட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டது என , அதற்காக அவர்கள் குறித்திருந்த முகூர்த்தம் , கண்ணன் வெகட்ராமனுக்கு மாலையிடுவதை எதர்பார்கள். அதுதான் அறிவிப்பு என முடிவெடுத்திருந்தனர்

எனக்கு அப்போது புரிந்தது ,அதனால்தான் கண்ணன் மாலையிடுவதை தடுத்ததும் அனைவரும் சரியாக மையத்துக்கு வந்து குவிந்தனர். இதில் வேடிக்கை சேவாதளத் தலைவர் செய்த குளறுபடி . பதட்டத்தில் அவர் சொல்லியிருந்த சிக்னலை மறந்து தாக்குவதற்கு ஒற்றை விசிலுக்கு பதில் பதட்டத்தில் கலைந்து செல்வதற்கான நீண்ட விசில் கொடுத்தும் அனைவரும் கலைந்தனர் . அது தாக்கப்படுவதில் உள்ள சேதத்தை அதிகப்படுத்திவிடும்   காரணமாகிவிட்டது.

மறுபடி தாக்குதலை தவறான இடத்தில் வைத்து அதற்கு விலை கொடுத்தனர் . காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டது . அதை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை . அது கண்ணனின் காங்கிரஸ் அரசியலில் ஒரு கரும்புள்ளி. அவரை  சுற்றியிருந்த அரசியல் தெரியாதவர்கள் அதை சாகசம் என பார்க்கலாம் . ஆனால் அது அவர்களுக்கான பாதையை கடைசி வரை மறித்து கால்களை இடறியபடிக் கிடந்தகல் 

தேர்தல் கூட்டணியைப் பற்றிய கருத்தாய்வு தில்லியில் நடந்தது .அதில் மரைகார் ஒதுங்கிக் கொள்ள கண்ணன் வழமைப் போல வீராவேசமாக அதை மறுத்துப் பேசினார் . தாக்கப்பட்டது இந்திராகாந்தி, அவரே அதை முன்னிருத்தி கேட்கிறார் என்பதை புரிந்து கொள்ளாது , புதுவை மற்றும் காங்கிரசின் தலைமைகளின் கூட்டு சதி என் தவறான புரிதலில் எழுந்த அவரது பேச்சு தில்லி தலைமைக்கு எரிச்சலூட்டி அவரை வெளியேறச் செய்தது


மற்றத் தலைவர்களுக்கு சூழல் யதார்த்தம் புரிந்ததால் . அமைதியாக இருக்க கூட்டணி உறுதியானது . சண்முகம் திட்டத்தின் ஊற்று என்பதால் வலுவான நிலையில் கூட்டணியில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அளவிற்கு உயர்ந்தார். கூட்டணிக்கு சண்முகம் முக்கிய காரணியாக இருந்தவர் என்பதால் திமுக தலைமையும் அவருக்கு அனுக்கமாக இருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்