https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 27 மே, 2017

அடையாளமாதல் - 82 * தடையால் மாறும் இணைவுகள் *

ஶ்ரீ:










அடையாளமாதல் - 82
*  தடையால் மாறும்  இணைவுகள் *
இயக்க பின்புலம் - 9
அரசியல் களம் - 25





மறுதினமே வேட்பு மனு தாக்களுக்கு கடைசீ நாள் என்பதால் , அதற்கான முன்னேற்பாடுகளை செய்யத் துவங்கினோம் , எங்களுக்கு தாடஞ்சாவடி VVP  நகரில் உள்ள அரசாங்க அலுவலகத்தில் தாக்கல் செய்ய ஏற்பாடாகியிருந்தது . வட்டார தேர்தல் அதிகாரியை இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பார்த்து நங்கள் குறித்த வைத்திருந்த நல்ல நேரத்தை சொல்லி அந்த நேரத்தில் தாக்கல் செய்வதை பேசி வைத்திருந்தோம் . அன்று மாலையே அரைமணி வித்தியாசத்தில் தட்டாஞ்சாவடியில் கண்ணன் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதை அவரின் காரியதரிசி எங்களிடம்  சொல்லிச்சென்றார்  . வெகு பரப்பாக இருக்கப்போகிறது அன்றைய நாள் என நினைத்துக்கொண்டேன் .

குறிப்பிட்ட நாளில் நாங்கள் பின் மதியம்  3:30 மணிக்கு ஊர்வலமாக கிளம்பி வந்து மனு தாக்கல் செய்தோம் . கிளம்புவதற்கு சற்று முன்பாக பாலன் கூப்பிடுவதாக சுப்பாராயன் என்னிடம் சொன்னார் . நான் அவரை பார்த்தபோது ஒரு ஸம்ரதாயத்திற்காகவும் , என்னுடைய அன்பை வெளிப்படுத்தவும் ஒரு சால்வை அணிவித்தேன் . மிக மகிழ்வாக ஏற்றுக்கொண்டு , தன்னுடைய இந்த இடத்திற்கு வருவதற்கு நான் முக்கிய காரணம் என்றும் நான் அவரை சந்தித்த பின்பே தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தததாக சொன்னார் . 

பல நூறு முறை இதை சொல்லியாகிவிட்டது நேரம் அதிகமில்லை . நான் மையமாக சிரித்தபடி  கிளம்பலாம் என்றேன் . அதற்கு அவர் ஏன் அவசரப்படுகிறாய் உன்னை கூப்பிட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது . அவர் சார்பாக நான்தான் வேட்பு மனு தாக்கல் செய்யவேண்டும் என்றார் , எனக்கு புரியவில்லை . பிராமண பத்திரம் தாக்களை தொடர்ந்து உறுதி மொழி , பின் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சென்று மனு தாக்கல் செய்ய வேண்டும் . இதில் பார்வையாளராக நின்றிருக்கும் நான் எப்படி வேட்புமனு தாக்கல் செய்யமுடியும் எனப் புரியவில்லை.

பேசுகிற நேரமில்லை இது , எதோ உணர்ச்சி பெருக்கில் இருக்கிறார் . இது தனியுமானால் மறுபடி தேவையற்ற மற்றொரு சந்தேகப்பூ பூக்க ஆரம்பித்துவிடும் . அதற்கு முடிவேயில்லை . எதையும் காது கொடுக்காது . "சரி" என்றேன் . இருவரும் வெளியே வந்ததும் எங்கும் வாழ்த்தும் ஆர்ப்பரிப்பு இணைந்து கார்வையாயிற்று . சுப்பராயனை கடந்து சென்றதும் அவர் முகத்தில் ஒரு மந்தகாசம் அரும்பியது . நான்தான் அதன் பின்னணியை ஆராயும் மனநிலையில்  இல்லை . பெரும் ஊர்வலமாக  தொகுதியை சுற்றியபடி தேர்தல் அலுவலகம் வந்து சேர்ந்தோம் . அங்கு கூட்டமான கூட்டம் . நிரம்பி வழிந்தது 

அந்த அலுவலகம் நான்கு தொகுதிகளுக்கும் பொது  என்பதாலும் , அன்று தான் கடைசி நாள் மற்றும் நல்லநாளாக வேறு இருப்பதால் , நான்கு தொகுதியிலிருந்து பல்வேறு கட்சி மற்றும் சுயேட்சைகளுள் வந்து குவிந்தபடி இருந்தனர்  . குறிப்பிட்ட ஒன்னரை மணி நல்ல நேரத்திற்குள் அனைவரும் தாக்கல் செய்தாக வேண்டும் என்பதால் கூட்டம் அலைபாய்ந்தது  . அனைவரின் கஞ்சி போட்ட சட்டை வேர்வையில் நனைந்தது கொண்டிருந்தது . 

எனக்கு சட்டென தோன்றியது வேர்வையால் உருவாகி வந்தபிறகே கிடைக்கும் கஞ்சி , இங்குமட்டுமே உருவாகி வந்த கஞ்சி தேவையற்று வேர்வையில் கரைந்து கொண்டிருந்தது . 

முன்பே அனுமதிக்கப்பட்ட நேரத்தில் , அதிகாரி எங்களை முதலில் கூப்பிட்டார் . உள்ளே நுழையும் முன்பே தள்ளுமுள்ளு துவங்கிவிட்டது . கூடிய கூட்டம் அங்கிருந்த காற்றை முழுவதுமாக  உறுஞ்சிவிட்டதால் , எங்கும் வெக்கையாக இருந்தது துளி காற்றுக்கு நான் ஏங்க ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் பலவேறு தொகுகளில் இருந்த வந்திருந்த புதியவர்களுக்கு நான் பரிச்சயமாகாத்தால் , அவர்களுடன் மல்லுக்கட்ட இயலாமல் பின்னடைந்தபடி இருந்தேன் . என்னை இறுதியாக ஒரு மூலையில் ஒதுக்கினார்கள் .

இருபதடி தூரத்தில் வட்டார தேர்தலதிகாரி மேஜைக்கு முன்பாக போடப்பட்டிருந்த நான்கு நாற்காலிக்கு சிலர் முண்டியபடி இருந்தனர் . ஒருவாறாக பாலனுடன் சிலர் அமர்ந்துகொள்ள அதிகாரி காட்டிய படிவத்தில் பாலன் கையேழுத்து போட்டபடி இருந்தார் . அதிகாரி அனைத்தையும் சரிபார்த்த பிறகு . பிராமண பாத்திரத்தை கொடுத்து உறுதிமொழி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியதும்  . பாலன் எழுந்து பிராமண பாத்திரத்தை படித்து முடித்ததும் .அடுத்தது வேட்பு மனு தாக்கல் . 

திடீரென பாலன்  சுற்றும் முற்றும் யாரையோ தேடியபடி இருந்தார் , அருகில் அமர்ந்திருந்த காமலக்கண்ணன் எதோ கேட்க அவர் மீது எரிந்து விழுந்தபோதுதான் அவர் என்னை தேடுவதாக பட்டது , நான் கூட்டத்தை விலக்க முற்படுவதற்குள் சிலர் என்னை அடையாளம் கண்டுகொண்டு நான் முன்னே வருவதற்கு அந்த திரளை பிளந்து வழி ஏற்படுத்தினர் . பாலனை அருகனைத்ததும் அவர் முகம் சிறுத்திருந்தது . நான் அமைதியாக அவருடன் சென்று சேர்ந்துகொண்டேன்  

மனுதாக்கல் நேரம் நெருங்கியதும் அவரும் நானும்  சேர்ந்தபடி தாக்கல் செய்தோம் . மறுபடி சில பாத்திரங்களில் அவர் கையெழுத்திட்டதும் நிகழ்வு முடிவுக்கு வரும் தருணத்தில்  பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் வெளியேயிருந்து வந்து உள்ளே குழுமியதும் , பத்திரிகையில் வெளியிட புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதால் , தாக்கல் செய்த மனுவை திரும்பவும் தாக்கல் செய்வதுபோல போஸ் கொடுக்க சொல்ல , பாலன் மறுபடி என்னை தேடி தவிக்க துவங்கினார் . அவரை புரிந்துகொண்டு அருகணையும் முன்பாக புகைப்படம் எடுத்து முடிக்கப்பட்டு , அதிகாரியின் கைகளுக்கு படிவம் சென்று சேர்ந்துவிட்டது . பாலனை பார்க்க மிகவும் சோகமாக இருப்பதாக பட்டது . 


அனைத்தும் முடிந்து அறையை விட்டு வெளியேற அனைத்து தொண்டர்களும் படிகளில் வழிந்தபடி இருந்தனர் மெல்ல அனைவரையும் தாண்டி என் அருகணைந்ததும் எனக்குமட்டுமே கேட்கும் குரலில்  நான் ஜெயிக்கமாட்டேன் அரி என்றார் ? நான் ஏதாவது உளர வேண்டாம் எல்லோரும் நம்மையே பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள் . ஸீன் கிரேட்பன்னாமா வாங்க என்றபடி அவரிடமிருந்து விலகினேன் . பாலன் அவர் பயன்படுத்தும் கார் அருகில் வர அவர் திரும்பி என்னை பார்த்து கை காட்டி கூப்பிட்டபடி இருந்தார் அதற்குள் தொகுதி முக்கியஸ்தர்கள் அவர் காரில் ஏற . பாலனும் அரைமனத்துடன் அதில் ஏறிக்கொள்ள கார் புறப்பட்டு சென்றது . நான் நிம்மதியாக உணர்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...