https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 8 மே, 2017

அடையாளமாதல் - 53 குறுங்குழு அரசியல் -1

அடையாளமாதல் - 53
குறுங்குழு அரசியல் -1
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 26
அரசியல் களம் - 16





இளைஞர் காங்கிரசாருடன் நானும் வெளியேறினேன். ஒன்றும் நடவாதது போல் அந்த கூட்டம் மெதுவாக பதற்றமின்றி காங்கிரஸ் அலுவலகத்தை தாண்டி காந்திவீதியில் உள்ள ஒரு டீகடையை அடைந்தது . என்னையும் சேர்த்து நாங்கள் ஆறுபேர் இருந்தோம் . மற்றவர்கள் என்னவானார்கள் எனத்தெரியவில்லை .

நான்தான் எல்லோருக்கும் டீ சொன்னேன் , எனக்கு காபி . நான் எனக்கு காபி சொன்னதுமே அவர்களின் கண்கள் மாறுபடுவதை கவணித்தேன் . காபி ஒரு அகங்காரத்தின், மேட்டிமையின் குறியீடாக பார்க்கபடுவதாக பின்னாளில் அவர்கள் பேசியதுண்டு .அது ஒரு நல்ல நகைமுரண்

அன்று மதியம் அனைவரிடமும் விடைபெற்று கிளம்பும் முன் அவர்கள் அனைவருமே மிக நெருக்கமாக உணர்ந்தேன் . அன்று மாலை இளைஞர் காங்கிரசின் எதிரில் உள்ள டீகடையில் சந்திப்பாதாக பேசி புறப்பட்டேன்.

வீடு திரும்பியதும் காலை நிகழ்ந்தவைகளைத் தொகுக்கத் துவங்கினேன் . அரசியலில் வன்முறை ஒரு அங்கமாக அன்று எனக்கு அறிமுகமானது . ஆனால் காங்கிரஸ் கட்சியில் இல்லாத ஒரு ஒருங்கமைப்பு துல்லியமாக வித்யாசப்படுதியது தொடர்புறுத்தும் அமைப்பு அதனால் ஈர்க்கப்டாலும் . என்னால் அது போன்றதொரு வன்முறையில் ஈடுபட முடியாது என்பது தெல்லென  புரிந்திருந்தது . அது என் அடிப்படை குணாதிசியமாக பிண்னாளில் உணர்ந்திருக்கிறேன்

சிலருடன் மட்டுமே நம்மால் மிக இயல்பாக பழக இயலுகிறது. நட்பு பல எதிர்மறைகளின் நிதர்சனங்களைக் நிகழ்வுகளாக கடந்தும் அது இன்றுவரை மிக அழகான சொல்லாக எனக்கு என்றும்  இனிமையைத் தருகிறது . நடுத்தர மக்களிடம் காணும் அந்த யதார்த்தமான உதவிக்கர நீட்டலும் கொடுத்திடலும் , யாராலும் பதில் செய்யமுடியாது

அதில் உள்ள இடர் , உங்களை ஒருகாலமும் செல்வாக்குள்ளவர்களின் அருகமையவே விடாது . அது வேறு வகையான மொழி . கற்பதும் எளிதல்ல. கற்றாலும் கொடும் வஞ்சமென , காழ்பென பெருகி நிறைப்பது. அது எளியவர்களுக்கு பொருந்தாது

எளிமையான அந்த சமூகத்தை நோக்கியே நான் தொடர்ந்து  பயணப்பட்டிருகிறேன் . அவர்கள் உதவியை கேட்டுப்பெறத் தயங்காத நிலையிலேயே அவர்கள் எவருடையத் தொடர்புகளும் எளிதில் அறுவதில்லை , அறுந்தால் அது வேறெந்த தளத்திலும் இணையாது. அன்பும் வன்மையும் எளிதில் முகத்தின் எதிரே நடைபெறும் . அவர்கள் பச்சை சிரிப்பை அறியாதவரகள். நான் இன்று நண்பராக்கி கொண்டவர்கள் திருபுவனை மற்றும் ஊசுடு பகுதியை சேர்ந்தவர்கள்


மரைக்கார் அணி  ஒரு குறுங்குழு அரசியல் வட்டம் .கட்சிக்கு அப்பாற்பட்டே அதன் விழுமியங்கள் நிலைபெற்றிருந்தன.அது ஒருநாளும் இளைஞர் காங்கிரசின் விழுமியங்களுடன் உரையாடாது. ஆனால் அன்று சண்முகத்திற்கு எதிர்தரப்பு அவர்கள் மட்டுமே . சமூக ரீதியில் மீனவர் பகுதியில் அவருக்கு செல்வாக்குண்டு. வன்முறை அவர்களுக்கு இயல்பானது. அவர்கள் வாழ்கை முயங்குவதே அதை ஆதரமாக கொண்டு. அவர்களுக்குள் எப்பொழுதும் பிளவுபட்டதாக இருக்கும் சமூகம் .எதில் யாருக்கு எதிராக எழும் என கணிக்க இயலாது .        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்