https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 17 மே, 2017

அடையாளமாதல் - 72 * மின்மினியின் பயணம் *

ஶ்ரீ:





அடையாளமாதல் - 72
* மின்மினியின் பயணம்  *
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 45
அரசியல் களம் - 21






இளைஞர் காங்கிரசின் சார்பாக பாலனுக்கு சீட் .  பெறும் முயற்ச்சி எடுத்துக்கொண்டிருந்தோம், எந்த வகையிலும் இந்த முறை கோட்டைவிடுவதற்கில்லை என்கிற தீர்மானத்தோடு பலர் களமிறக்கப்பட்டிருந்தனர்  . ஏற்கனவே 1990 தேர்தலில் நடந்தது இந்த முறை நடக்க கூடாது . மரைகார் அணியில் இருந்தாலும் அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தலைவர் ரமேஷ் செண்ணித்தலா ஒத்துழைப்பும் இந்த முறை வெற்றிகரமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம்

ராஜீவ்காந்தி கேரள செற்றிருந்த போது மார்க்சீய அரசாங்கத்தை எதிர்த்து கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக அவர் நடத்திய மிக பிரம்மாண்டமான பேரணி ஏற்பாடுகளின் நிர்வாக முறை அவருக்கு பிடித்துப்போனதால் அவர் தில்லி திருப்பிய சில காலத்தில் ரமேஷ் செண்டித்தலா அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தலவராக நியமித்தார்

பல வருடங்களாகவே அவருடன் எங்களுக்கு நல்ல தொடர்பிருந்தது . ராமச்சந்திரன் ஒருவருட ஆட்சி காலத்தில் மாநில காங்கிரசிலிருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பாத நிலையில் , நாங்கள் மட்டுமே சுமார் 198 போராட்டங்களும் , கூட்டங்களும் சலிப்புறாது தொடர்ந்து நடத்தியபடி இருந்தோம். செய்தி தொகுப்பும் , செய்தியாளர் தொடர்பும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்தது

ஏற்கனவே பதிவிட்டபடி அன்றைய பாலனின் இளைஞர் காங்கிரஸ் மரைகார் அணியின் நீட்சியாக பார்க்கப்பட்டதை திட்டமிட்டபடி உடைத்தோம். அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் கட்சி ரீதி இருப்பு நிலையில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது . பத்திரிக்கைகளில் எங்களின் சில போராட்டங்கள் விசேஷ செய்திகளாயின . நாங்கள்தான் சரியான எதிர்கட்சியாக செயல்பட்டோமென்கிற செய்தி.   அதற்கு அகில இந்திய முக்கியத்துவம் கிடைத்தது

தில்லி தகவல் தொடர்பை சரியானபடி நிர்வகித்தோம் , பாலனுக்கு ஏக சந்தோஷம் , சரியான பாதையில் பயணிக்கிறோமென . எனக்கு சண்முகம் எங்களை நோக்கி கேட்ட சில நிதர்சணமான கேள்விக்ளான விசையால் நாங்கள் சீண்டப்பட்டோம் . பலன் நன்மையே விளைந்தது.

சண்முகம் ,மரைகார் , தில்லியென அனைத்தினோடும் சரியான திசையில் பயணப்பட்டது விளைவுகளை தரத் தொடங்கியது. நேரம் நெருங்க நெருங்க ஒரு தனிக்குழு இன்பசேகரன் தலைமையில் தில்லி சென்று முகாமிட்டிருந்தது , தினசரி நிகழ்வுகளுடன் நான் பாலனுக்கு தகவல் சொல்லியபடி இருந்தேன்.

மரைக்கார் தரப்பை மட்டும் சரியானபடி பாலனே நிர்வகித்தார் . சண்முகத்துடனான தொடர்பு நாங்கள் வெட்டுபடுவதை தவிற்க இவையெல்லாம் எனக்கு அன்றிருந்தப் பதிவுகள் . ஆனால் உண்மையான நிலை எனக்கு ஆறு வருடத்திற்கு பிறகே அறியநேர்ந்தது . எங்களுடைய தொடர்பும் , கணக்கும் எவ்வளவு முட்டாள்தனமானது எனப்புரிந்த போது அது ஏற்படுத்திய வலியை வார்தைகளில் சொல்லிவிட முடியாது. அதைப் பற்றி பிறிதொரு பதிவில் பார்ப்போம் .

தில்லியிருந்த தகவல் கிடைத்தது . பாலனை உடனே வரச்சொல்லி . அவரும் தில்லி விழைந்தார். அதற்கு சிலநாட்கள் முன்னர் மரைகார் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது , சீட் உறுதியென்பது போல செய்தி . இந்த முறை அனைத்து தரப்பிலும் தொடர்பில் இருந்த , செய்திகளின் நம்பகத் தன்மை கூடி வந்தது.

பாலன் தில்லியில் பலரையும் சந்ததிக்கும் திட்டம் , மிக நேர்த்தியாக நடந்தேறியது .வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் நெருங்கி வர ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்கிற பதட்டமும் கூடியபடி இருந்ததது . பாலனும் என்னை தொடர்பு கொண்டு நடப்பதை சொல்லியபடி இருந்தார் நானும் கட்சி முக்கியஸ்தர்களுக்கு தகவலை சொல்லியபடி இருந்தேன் .


ஒருநாள் திடூரென பாலன் எனக்கு போன் செய்து சபாபதியின் சிபார்சு கடிதம் வாங்கிவரும்படி கூறினார் , எனக்கு அதிர்ச்சியாக இருந்ததது. அவரும் முதலியார்பேட்டை தொகுதியை குறிவைத்து காய்நகர்த்திக் கொண்டிருந்தார் , அதைவிட முக்கியம் மைலத்தில் ஒரு கல்யாணத்தில் இன்பசேகரனை சந்தித்தபோது , சபாபதி தான் இந்த தேர்தலில் உறுதியாக போட்டியிடப்போவதைப் பற்றியும் , சீட் கிடைக்காத பட்சத்தில் சுயேட்சையாக போட்டியிடுவது உறுதி என தகவலை சொல்லி அவர்களுக்குடையேயான நீண்டகால நட்பைச் சொல்லி அவரை இதிலிருந்து விலகிவிடுமாறு சொன்னார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக