https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 20 மே, 2017

என் மௌனத்தை கொடு

ஶ்ரீ:

என் மௌனத்தை கொடுத்துவிடு




உனக்குத் தெரியுமா
நான் ஏன் சிலகாலம் என் மௌனத்தை ,
உன்னிடம் கேட்டேனென்று,

அந்த மௌனம் என்னுடையதல்ல என்பதால் 
பிறரால் உடைக்கூடியது ,
அதனால் தான் என் மௌனத்தை கேட்டேன் .


ஒருவாசல் ஒருவருக்காக திறப்பதல்ல
அதில் யாரும் நுழைகிறார்கள் ,
ஏதூமே நிகழாதது போல ,
சகஜமாய் இருக்கிறார்கள்  .

மிக எளிமையாக்கப்பட்டிருக்க வேண்டியது ,
சிறிதாக ஆனாலும் சிறப்பாக நிகழுற்றது ,
எனக்கு மகிழ்வானதே ,
நிகர்நிலை நின்று பேசும் சந்தர்ப்பத்தால்
அனைத்திற்கும் உடன்பட்டேன்.


நான்  வேண்டாம் என்றவுடன்
ஒரு மூலையில் துணுக்குற்றேன்
மறுபடியும் ஒரு பிறழ்வு ,
சரிசெய்ய இயலாமல் போகலாம் ,
யார் கவலையிது ,
என்னதல்ல.


நான் வரக்கூடுமென்பதால் எல்லோரும்,
வரவேற்கப்பட்டார்கள்
இதம் இத்தம் என 
முடிவாயிற்றுப் போலும் .


நான்கேட்ட மௌனம் சற்று மிச்சமுள்ளது ,
அதுவரையில் 
அத்துடன் ஆனந்தாமாய் இருக்கிறேன்.


என் மௌனத்தை கொடுத்துவிடு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்