https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 18 மே, 2017

அடையாளமாதல் - 73 * பலி மிருகம் *

ஶ்ரீ:

அடையாளமாதல் - 73
*  பலி மிருகம்  *
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 46
அரசியல் களம் - 21
நான் பாலனிடம் இன்பசேகரன் சபாபதியுடன் நிகழ்த்திய "மைலம் சம்வாதத்தை" நினைவுறுத்தினேன் . நிலமை இப்படியாக இருக்க அவரிடமிருந்து  சிபார்சு கடிதம் கேட்டு நிற்பதுபோல இளிவரல் பிறிதில்லை என்றேன் . மேலும் என்னை பாலனிடமிருந்து விலகிட சொல்லி என் நண்பர்கள் மூலமாக எனக்கும் பலமுறை அழுத்தம் கொடுக்கப்பட்டது

நான் தான் பாலனின்  இந்த எழுச்சிக்கு காரணம் என்றும் , நான் விலகினால் பாலன் தானாக வழிக்கு வருவார் , அல்லது காணாமலாகிவிடுவார் என்றும் . அவருக்கு அபரிதமான பொருளியல் ரீதியாகவும் நான்தான் உதவுகிறேன் என்பது அவரின் எண்ணமாக இருந்தது .

பாலனின் எழுச்சிக்கு அன்றிருந்த அரசியல் சூழல் ஒரு முக்கிய காரணி . மற்றும் பலரும் காரணமாக இருந்தனர் , அவர்களில் நானும் ஒருவன் . அவ்வளவே . நான் இணைந்த பிறகு அவருடைய வழிமுறைகளும் செயல்பாடுகளின் பாணியை மாற்றினேன் . அது  பெரிய மாற்றமடைதலுக்கு காரணமென்றானது . சிறு சிறு நன்கு திட்டமிடப்பட்ட செயல்கள் அபரிதமான பலன்களை வழங்கியது

பத்திரிக்கைகளின் நட்பும் தொடர்பும் நான் அவர்களுடன் இணைந்த பிறகு பெரிய அளவில் முன்னெடுத்தேன் . அதுவரை பாலன் முயற்சிக்காத துறை . எங்களுக்கான ஒரு உருவகம் மிக மிக நிதானமாக எழுந்து வந்தது அதன் பிறகு தான  . அது எங்கள் இருப்பையும் அடையாளத்தையும் உருவாக்கிக் கொடுத்தது

அந்த  காரணிகள்  அமைப்பினுடைய உளவியியல் ரீதியாக நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியதில் , நிகர்நிலை ஒருங்கினைப்பை கொடுத்தது  . நான் அதில் பெரும்பங்கு வகித்தேன் .சிறிய நிகழ்வுகள்கூட நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டது . ஆனால் பாலனுக்கு பெருமளவில் பொருளியல் ரீதியாக உதவினேன் என்பது உண்மையல்ல . அது ஒரு தோற்றமே . என்னை சார்ந்தவர்களும் என் குடும்பத்தில் அப்படிபட்ட விஷயங்களை இன்றுவரையில் கூட சொல்லுவதுண்டு .

இன்றுவரையில் என் சித்தாந்தம் அரசியலுக்கு பொருளியல் பலமும் ஒன்று . பிறர் வாதிடுவதைப்போல , அது மட்டுமே அல்ல . அது அரசியலில் அடையாளத்தையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும் என்பதை ஒருகாலமும் நான் ஏற்றுக்கொண்டதில்லை . அப்படியே தருமெனில் அதில் விழுமியங்கள் என ஒன்றும் இருக்கபோவதில்லை. அதற்கு அரசியல் என்கிற பெயரில்லை.

பிரமிட் முறை மேல்கீழ் அமைப்பும் , தொண்டர்பலமும் , சிறிதளவாவது தொண்டுள்ளமும் கொண்ட எந்த ஒரு இயக்கத்திற்கும் பொருளியல் பலம் இரண்டாம் பட்சமே.

அதற்கு மாற்றாக பொருளியலைக்கொண்டு முன்னெடுக்கும் அரசியல் ஒரு வியாபராம் அதற்கு மனித்தண்மையற்ற லாபமும் நஷ்டமுமே இலக்காயிருக்கும் . அதில் அமைப்பு என்பது புளித்து நொதித்து நாறுவது . அது மனிதர்களுக்கானதல்ல . செயற்கையான அரசியல் செய்ய விழைபவர்களுக்கு தான் பொருளியலே பிராதானம் அவர்கள் பதவியில் விழ நேர்ந்தால் ஊழலில் திளைப்பார்கள் .

பாலன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன் இது விவாதம் செய்கிற நேரமில்லை . பாலன்  சில விஷயங்களை குறிப்பிட்டு , தான் ஏற்கனவே சபாபதியிடம் பேசிவைத்திருப்பதையும் , என்னை சென்று அந்தக் கடிதத்தை வாங்கி வர மறுபடியும் அழுத்தமாக சொல்லிய பிறகு , எதையும் கணிசியாது நானும் , எனக்கு துணைக்கு கடலூர் புருஷோத்தையும் அழைத்துக்கொண்டு சபாபதியின் அலுவலகம் சென்றேன் . பிற்காலத்தில் தெரியவந்தது யாரும் இதை செய்ய மறுத்ததால் . நான் அனுப்பப்பட்டேன் என்று. பலி மிருகம் போல .

பலர் அங்கு குழுமியிருந்தனர்எங்களுக்கு , வரவேற்பு முகமின்றி எல்லோர் கண்களிலும் ஒரு வண்மத்தையை உணரமுடிந்தது. நான் எதைப்பற்றியும் கவலையற்று அவரிடம் பாலன் அனுப்பியதாக சொன்னேன் . அவரும் ஒரு வார்த்தையும் பேசாது என்னிடம் அந்தக் கடிதத்தை கொடுத்தார் . என்னுடன் வந்த புருஷோத் அவரை கண்டதும் பம்மிய விதம் எனக்கு சங்கடமாக இருந்து. அன்று அவர் கண்களில் தெரிந்த "அந்தப் பழி " சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் எனக்கெதிராக கடைசீவரை அவர் ஏதாவது வில்லங்கமாக செய்து கொண்டேயிருந்தார்.

எனக்கு எப்போதும் ஒரு குணம் . எனக்கான முடிவை அல்லது ஒரு தலைமையை மிக நிதானமாக முடிவு செய்வேன் . அதன்பிறகு இரண்டாவது எண்ணமே இருப்பதில்லை . ஏற்றுக்கொண்டபின் தலைமைக்கு விசுவாசம் தவிர பிறிதொரு எண்ணமிருந்ததில்லை. இன்றுவரையில் அப்படித்தான் .

என்னுடைய தர்க்க புத்தியில் பலவித காரணகாரியங்களை எனக்குளேயே நிகழ்த்தி விவாதத்தின் பின்னர் அதை மறு ஆலோசனைக்கு எடுப்பதில்லை. பாலனை சந்திக்கும் முன்பாகவும் , பலவித முரண்பாட்டை சந்தித்த பிறகும் எனக்கு சித்தவிகாரமடைந்ததில்லை. பாலனை சந்திக்கும் வரை அவரைப்பற்றியும் அவரது குணாசியங்களப்பற்றியும் நான் கவலையற்றுதான் இணைந்தேன்


ஒரு சந்தர்பத்தில் என்னை பற்றி மிகத்தெளிவாக ஒரு விஷயம் அவரிடம்  சொல்லியருந்தேன் , அவரின் பிரித்தாலும் விளையாட்டில் என்னை எந்தவிதத்திலும் பயணபடுத்தக்கூடாதென்பது . நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது நான் தனியாக ஒருமுறை அடிபடும்வரை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக