https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 22 மே, 2017

அடையாளமாதல் - 77 * நட்பின் நீர்ப்பிசிற்கள் *

ஶ்ரீ:












அடையாளமாதல் - 77
*  நட்பின் நீர் பிசிற்கள் *
இயக்க பின்புலம் - 4
அரசியல் களம் - 22





சுப்பாராயன் சொல்லி முடிக்கும் போது இரண்டு பீடி இழுத்து  முடித்திருந்தார் . தாமோதரன் எதோ சொல்ல ஆரம்பிக்க நன் அவரை கை அமர்த்தினேன் . இனி பேச ஒன்றும் இல்லை . அடுத்து ஆகவேண்டியதை பார்க்கலாம் . 


மூவரும் பாலன் வீடு திரும்பினோம் . பாலன் அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்தார் . என்னை பார்த்ததும் தலை அசைத்தார் . இருவரும் அவரின் வீட்டிற்கு பின் பக்கம் சென்றோம் . வழில அவரின் மனைவி என்னை பார்த்து மிக சந்தோஷமாக சிரித்தார் . 

பாலன் ஊழ் என்றார் . என்னுடைய வரவிற்கு பிறகு தனக்கு மிகவும் நேர்மறையான நிகழ்வுகளும் சிந்தனையுமாக நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் , நமக்கிடையேயான நட்பு நன்கு நீடிக்கவேண்டும் என்றார் . அரசியலில் இந்த இடம் வெகுகாலம் கனவுபோலே இருந்ததாகவும் தற்போது தொடும் இடத்திற்கு வந்துவிட்டதை உணரமுடிந்தாக சொன்னார். அவர் கொந்தளிப்பான மனநிலையில் இருந்ததை புரிந்து கொள்ளமுடிந்தது . எனக்கும் அப்படித்தான் இருந்தது. திட்டமிட்டபடி வெற்றிகரமாக முடித்தவரை மிக மகிழ்வாக இருந்தது. 

தேர்தல்தான் அடுத்தகட்டம் அது பொருளியல் ரீதியானது . அதுபற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தோம் .  பேச்சை ஜாக்கிரதையாக சபாபதியை பற்றி பேசாமல் இருந்தேன் .
நான் அவரை அமைச்சராக உடகார்வைப்பதை என் அடுத்த திட்டமென கூறினேன் . என்னை அனைத்துக்கொண்டார்


எனக்கு அவரின் மனப்போக்கு  நன்கு புரிந்திருந்தது . நான் என்னை நினைத்துக்கொண்டேன் . நானும் அப்படிதான் முடிவெடுத்திருப்பேன் . எதிரியாக நினைப்பவரிடத்து முன்னே அவமானம் மரணத்தை விடகொடுமையானது பிறிதொன்றில்லை 


பாலனுடன் அவர் வாடகைக் காரில் முதலியப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம் . மாநிலம் முழுவதிலும்மிருந்து பெருங்கூட்டம் கூடியிருந்தது . மேலும் வந்தவண்ணமருந்தனர் . இயக்கத்திற்கு இது ஒரு களியட்டு , அது தன் கடமையை செம்மையாக ஆற்றி ஓய்ந்திருந்தது. இதன் பின் அது எதிர்பார்ப்பது நல் இன் கனியை தவிர பிதொன்றில்லை . வாழ்த்தும், சால்வைக வகையறாக்கள் சம்பிரதாயங்கள் நடந்தபடி இருந்தது .


அதிகாலையிலேயே சபாபதி வீட்டில் சொல்லமுடியாத கூட்டம் . கதறிக்கொண்டிருந்தது . பாலன் துரோகம் செய்துவிட்டதாக எங்கும் கூக்குரல் கேட்டது . சபாபதி அமைதியாய் உட்கர்த்திருந்தார் . பச்சைமுத்துதான் கூடியிருந்த கூட்டத்தை கைஅமர்த்தி சாந்தப்படுத்தினர் . 

"இது காட்சி முடிவு , அவர்களிடம் பேசி ஓன்றும் ஆகப்போவதில்லை . எந்த சமாதானமும் தேவை இல்லை . இந்த முடிவுதான் வரப்போகிறதென்று நேற்று மதியமே சண்முகம் பேசினார் " என்றார்


"அகில இந்திய தலைமை சபாபதியின் சேவையை புரிந்திருக்கிறதது , அவருக்கு சீட்டு மறுக்கப்படவில்லை , நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி தரப்படுவது உறுதி . ராஜீவ்காந்தி , " பாலன் இளைஞர் அவர் போராடி வெற்றி பெற்று வரட்டும் என கூறியுள்ளது" . என பேசி முடித்தார் . 
மறுபடியும் கூட்டம் பேசத்தொடங்கியது . அனைவரும் ஒரே சமயத்தில் பேச முயற்சித்ததால் , எல்லாமுமாக இணைந்து ஒரே கார்வையாக ஒலித்தது . மறுபடி பச்சமுத்து கூட்டத்தை அமைதிப்படுத்த முயன்றுகொண்டே இருந்தார் . கூட்டம் எதற்கும் வசப்படவில்லை . தொகுதி தலைவர் வீரபுத்திரன் பேச எழுந்ததும் கூட்டம் ஒருவாறு அமைதியடைத்தது.


"சுலபமாக நமக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி என்பதை நாம் நம்பலாம் . ஆனால் , அது வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபிறகு . ஒருகால் ஆட்சி அமைக்க முடியாவிட்டால்  என்ன செய்வது . தவிரவும் 1985ஆம் வருடம் நமக்கு கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவி சிலரின் சூழ்ச்சியால் கைதவறியது . 

அது வன்னியர் குலத்திற்கு கிடைக்க வேண்டியது . நியமன உருப்பினரானவர்  அமைச்சராக முடியாது என்று சட்டம் தெரிந்தவர்கள் சொல்லுகிறார்கள் . இந்த சட்டசிக்கல்களை நம்மால் கடக்க இயலாது . அதே சமயம் கட்சி நம்மை கேட்டு கொண்ட பிறகு . மீறுவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை . கவுண்டரே முடிவெடுக்கட்டும் "என்று பேசி அமர்ந்தார் .


சாபதியை "கவுண்ட்டர் "என்று அழைப்பது ஊர் வழக்கம் . சபாபதி எழுந்து தனக்கு வயதாகிவிட்டது , கட்சியின் முடிவோடு தன்னால் மல்லுக்கட்ட முடியாது . தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாகவும் . கூறி அமர்தந்தார் . 

தான்  கரசியலில் இருந்து விலகுவதாக சொன்னதுதான் மிகச்சரியான இயக்கு  விசை என உணர்கிறேன் . அதன் பிறகு மறுபடியும் கூட்டத்தின் கார்வை ஒலி . அடுத்தது என்ன என்று  எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதைவிடுத்து ஏன் இவர்கள்   தேவையில்லாமல் பேசி நரத்தை வீனடிக்கிறார்கள் எனப் புரியாது ணர்ச்சிப்பெருக்கால் கட்டுப்பாட்டை இழந்தது 


ஊர் பெரியவர் ஒருவர் எழுந்து பேச முற்பட்டதும் , மிகுந்த சிரமத்திற்கு பிறகு கூட்டம் கட்டுப்பட்டு அவர் சொல்லுவதை கேட்பதற்கு செவி கூர்ந்தது . அவர் புதுவை சுதந்திர போராட்ட தியாகி. நறுக்கு தெரிந்தார்போல் பேசினார் . .

"கட்சிக்காரன் என்றான பிறகு கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவது கட்சிக்கு துரோகம் . கட்சிக்கு கட்டுப்படுவதேது இப்போது ஆற்றக்கூடியது . என்றதும் . கூட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து பாலன் வந்து உங்களை பார்த்தாரா உங்களை அவருக்கு வேலை செய்ய கேட்டுக்கொண்டாரா எனக் கேட்டதும் . கூட்டத்தில் நிசப்தம் நிலவியது .


பச்சமுத்து இல்லை என்றார் . அது கூட்டத்தின் போக்கை மாற்றியது . நம்மை மதிக்காதவருக்கு நாம் ஏன் வேலை செய்ய வேண்டும் அதை விட அவமானம் பிறிதொன்றில்லை . கூட்டத்தில் யாரோ "நாம்  தனித்து நின்று இவர்களுக்கு நாம் யார் என்று காட்டுவோம்" என்றதும் அதுவே தீர்மானம் போலானது . 

அதற்கான வேலையை செய்ய பலரும் கிளம்பினார் . கூட்டம் சற்று நேரத்தில் காணாமலானது . சபாபதி மெல்ல எழுந்து பச்சமுத்துவுடன் வீட்டுக்குள் சென்றார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்