https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 12 மே, 2017

அடையாளமாதல் - 62 *எதிர்மறை ஆளுமைகள் - 2

ஶ்ரீ:



sr


அடையாளமாதல் - 62
*எதிர்மறை ஆளுமைகள்  - 2
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 35
அரசியல் களம் - 18


காங்கிரஸ் கட்சி சீசரின் மனைவிபோல் சந்தேக வட்டத்திற்கு வெளியே இருந்தது என்றோ, காந்திக்குப்பிறகு அதற்கு வாய்த்த  தலைமைகள் மகோண்தமான நிலையை நிருவியது என்றோ , சன்ஜெய் காந்தியின் வழிமுறைகளே சரியானவை என்றோ , அதற்கான அதன் கட்சி அமைப்பின் சட்டதிட்டங்கள் மாற்றியமைத்தது குறித்த பல வரலாற்று பதிவுகள் உருவாகிவந்தன அவை தவறென்றோ சொல்ல வரவில்லை

என் பதிவுகள் அதில் ஒரு நிர்வாக கோணத்தை சொல்லவந்தது . கிடைத்த சில வாய்ப்புகளை எப்படி கைதவறிவிட்டது ,திட்டமிட்டபடி அதை கடந்திருந்தால் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கலாம் . என்பதைப் பற்றியது.மேலதிகமாக காலத்தின் பண்ணிறுகள பகடையின் கடைசி நிமிடத் திருகலால் மாறிய தருணத்தை கையறு நிலையில் பார்த்ததை சொல்லவந்தது.

ஒரு ஜனநயகமரபில், தேசத்தை ஆண்ட ஒரு அமைப்பு முறைகேடுகளை முதலீடாக் கொண்ட அராஜகமானதாக ,சுயநலப்போக்கால்  விளைந்ததல்ல
குறுங்குழு அரசியல் போக்கு இல்லாத எந்த அமைப்புமே உலகத்தில் இல்லை . அதன் நீட்சியாக அது குடும்பம் என்கிற  அமைப்புவரை பொருந்தும் . பலவித கலவையான மனிதர்களைக் கொண்ட ஆட்சி அமைப்பு எதிரும் புதிருமாக முரணியக்க வழியாகவே அது  தன் போக்கை நிர்ணயிக்கும் .
எதிலும் முற்றாகவே வெற்றித் தோல்விகள் இருபதில்லை




நடந்த எல்லாவற்றிலும் அது தீமையின் உருவாக நின்று முடித்தது என்பதும் பைத்தியக்காரத்தனமானது.ஒரு அமைப்பும் அப்படிபட்டதே . அதில் நல்ல திரணை முன்னெடுக்க முயற்சித்த சந்தர்பங்களில் அனைத்தையும் கடந்து சில எதிர்பாராத திசையில் இருந்து வரும் உந்துதலால் எதிர்பார்க்கவே இயலாத சில நிகழ்வுகள் நடந்துவிடுகின்றன . பெருந்திட்டவாதம்,தற்செயல்வாதம் என பெயரிடப்பட்ட ஏதாகிலும் ஒன்று புறப்பட்டேயாகும் . அதில் நல்ல நிகழ்வுகள் பிறழ்ந்து நோக்கத்தை சிதைக்கிறது . காலம் என்றும் மனிதர்கள் என்றும் சூழலென்றும் ஒன்று அனைத்தையும் மாற்றியமைப்பது. சாஸ்திரம் மனிதர்களை சுதந்திரமானவனாக  அது சொல்லவே இல்லை .

அனைத்து துறைகளுமே பல உள்ளடுக்களை கொண்டது . அதில் சந்திக்க நேர்ந்த சிக்கலை  சொல்லவது பொது புத்திக்கு  அர்த்தமற்றதாக, தெரியும். பல அலகுகள் கொண்ட ஒன்றின் ஒரு பரிமாணம் இது . அவ்வளவே .

கண்ணனுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததும் , இளைஞர் காங்கிரசின் தலைவர் பதவியைவிட்டு விலக வேண்டி வந்தது. காரணம் கட்சி விழுமியத்தின் கோட்பாட்டில் பிடிப்புள்ளவர்களில் சிலர் மிச்சிமிருந்ததால் , மாநில அமைப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பினர் . அதில் பிற்காலத்தில் உள்மடிப்பரசியலில் அவர்களுற்ற தோல்வியே அகில இந்திய அளவில் கட்சியை அமைப்பு மற்றும் நிர்வாகரீதியிலான சீர்குலைவற்கு இட்டுச்சென்றது .

பொதுவாக அடுத்த கட்ட  தலைவர் அதன்  பல போரட்டங்களின் வழியாக உருவாகிவந்திருப்பார்கள் என்பதாலும் , அமைப்பு சிதறிவிடக்கூடாது என்கிற எண்ணத்தினாலும் , பழைய தலைவரின் சிபாரிசுக்கு முன்னுரிமை வழங்கப்படும் . அந்த சூழலில் லக்ஷ்மிநாராயணனை அவர் மனதில் வைத்திருந்தார் . அதனடிப்படையில் புதிய தலைவரை அறிவிக்க தில்லி அகில இந்திய இளைஞர் காங்கிரசின் பொறுப்பாளர்கள் புதுவைக்கு வந்திருந்தனர் .

அறிவிப்பு நிகழவிருந்த சூழலில் கண்ணனும்  பாலனும் எந்த விஷயத்தில் முரண்பட்டிருந்தார்கள் என்று எனக்குத் தெரியாது . ஆனால் தலைமை பொறுப்புக்கு பாலன் தகுதியானவரில்லை என்று கண்ணன் நினைத்திருந்தால் அது மிகச்சரியான எண்ணமே.

பாலனுக்கு தொண்டர்களின் ஆதரவு இருந்தது ,அதற்கு  இரண்டு காரணம் இருக்கலாம் ஒன்று; இளைஞர் காங்கிரசின் போராட்டங்களில் மிக ஆக்ரோஷமாக பங்கெடுத்தவர், அன்று கண்ணனை நெருங்கவிடாது ஒரு குறுங்குழுவின் அரசியலால் வெறுப்புற்றிருந்த சிலருக்கு பாலன் நல்ல மாற்று என தோன்றியது , தனக்கு பிறகு பாலன் என்பது போல ஒரு தோற்றமிருந்ததை கண்ணனும் அப்போது மறுதலிக்கததிருந்தார்

இரண்டு; கண்ணனின் அரசியல் வெற்றிக்கும் ,அவர் அன்று அடைந்த உயரத்திற்கும் ,இளைஞர் இயக்கம் ஒரே காரணமென்றும் ,இனி அந்த பதவிக்கு வருபவர்களை அது அந்த உயரத்திற்கு கொண்டுசெல்லும் என்கிற பிறரின் தவறாக புரிதலும் ஒரு காரணம். கண்ணன் அந்தப் பதவியில் இருந்ததாலேயே அந்த உயரத்திற்கு வந்து சேர்ந்தார்  என்பது உண்மையல்ல

அதற்கு பல காரணிகள் இருந்தன . முதலில் அவரது வசீகரம் , அனுகுமுறை , தொடர்புறுத்தல் முறை இயக்கத்தை கொண்டு சென்ற விதம் . முக்கியமான அவரது தொடர்புறுத்தும் முறை போன்றவை அவருக்கு பலம் சேர்ப்பவை .

அவரது தனது தொடர்புறுத்தல் முறையை திமுக பாணியில் இருந்து உருவாக்கி எடுத்திருக்கலாம் . மேலும் மார்க்சீய சிந்தாந்தத்தில் நம்பிக்கையுடையவர்களாக காட்டிக்கொள்வது அன்று ஒரு அறிவுஜீவி அடையாளமாக பார்க்கப்பட்டது . ஆனால் ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ள  அமைப்பில் இந்த வகையான தொடர்புறுத்தல் முறை சரியாக நிலைநிறுத்தப்படவில்லை என்றால் அது எதிர்மறையாக உறுமாரும் ஆபத்துள்ளது . அதை அவர்கள் அறிந்திருக்கவே வாய்ப்பு அதிகம் , ஆனால் அது தோற்றுவாயில் தரும் வெற்றியின் சதவீத கணக்கு , மற்றும் அதன் வாணத்தை  நோக்கி ஓடும் சாலையாக  கற்பனையில் கண்டது அனைவரின் கண்களையும்  மூடும்படி செய்திருக்கலாம் '

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்