https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 9 மே, 2017

கோடைமழை

ஶ்ரீ:


கோடையின் கருணை
09-05-2017




இன்றுசெவ்வாய் கிழமை 
மாலை 
வழமையான கோடையாக 
புழுங்கியெடுத்தது
எப்போதும் வியர்வையின் 
ஈரத்தின் மினுமினுப்புடன்.

நான் கோடையை வெறுக்கிறேன்
உலகில் வேறெந்த
விஷயத்தைக் காட்டிலும்
புல் , இளந்தளிர்,
பனிபுகை சூழ்ந்த மலைப்பாதை ,
மழை இப்படி எதை நினைத்தாலும்
ஓர் கண்ணீர்
அக மற்றும் புறவயத்தாலே 
கோடையின் வெப்பத்தை 
உணர்ந்தபடியே இருக்கிறேன்.

சுடாத பகுதியாக 
ஏதும் மிச்சமில்லை போலும்
சிறிய உஷணத்திற்கே 
பொருக்கமாட்டாதவனாய் 
இருக்கிறேன்.

இரவு கடற்கரையில் நடப்பதற்கு 
செல்லும் முன்பு கூட 
மழையைப் பற்றி சிந்திக்கவில்லை.
பாதி நடந்தபின்
அதை உணர்ந்தேன்
ஈரமான காற்று வடக்கிலிருந்து
எங்கோ 
மழைபெய்து கொண்டிருக்கிறது
ஆம்

கோடைமழை
இங்கும் உண்டா?
எப்போதைக்குமே
இப்படி தாபப்பட்டதில்லை ,
ஒரு மழைக்காக .

இறுதியில் இன்று இரவு 
அந்த கோடை மழையை 
மின்னலுடன் பார்கிறேன்
வீட்டு செடிகள் 
குதூகலமாக தலையாட்டுவதை போல
மன்றாட்டு போல
என்னுடன் அவையும் 
சேர்ந்து கொண்டன.

மழை நீர்
பெய்து தீர்த்தது
கொட்டித் நிரவியதில்
எங்கும் தேங்கியது
எதிலும் தேங்கியிருக்கும் .
கொஞ்சம் 
எனது மனதிலும் 
தேங்கியிருக்கட்டும் 
அடுத்த கோடைவரையில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்