https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 24 மே, 2017

அடையாளமாதல் - 80 * புரிதலின் காலத் திறவுகோல் *

ஶ்ரீ:










அடையாளமாதல் - 80
*  புரிதலின் காலத் திறவுகோல்  *
இயக்க பின்புலம் - 7
அரசியல் களம் - 25







தேர்தல் களம்  தொகுதி சம்பந்தப்பட்டது , அதில் நான் செய்யக்கூடுவது பெரிதாக ஓன்றில்லை . ஆகவே மாநில ரீதியான ஒருங்கிணைப்பை  நான் பார்த்துக்கொண்டேன் . விளையாட்டாக அன்று அதை செய்தேன் , பின்னாளில் அதையே மாநில கட்சி சார்பாக  ரீதியில் வெகு எளிதாக  அதை செய்து கொடுக்க அதற்கு ஒரு ஆரம்பம் போல அமைந்தது அன்று செய்த தொகுதிகளின் ஒருங்கிணைப்பு , அதற்கு பிறகு யாராலும் அது இயலவில்லை என்பதில் இருந்து அது எளிதானதல்ல என பின்னர் புரிந்து .

முதலியார்பேட்டை தேர்தல் அலுவலகத்தில் நான் எப்போதும் இருக்கும்படி ஆனது . பாலன் தேர்தல் களத்திற்கு சென்ற பிறகு அலுவலகம் வெறிச்சோடிவிடும் . நான் அங்கு இருப்பதால் தொகுதியை சேர்ந்த பல பெரியவர்களை சந்திக்கும்போது முதலியார்பேட்டைக் கள நிலவரம் பற்றி பேசுவது வழமை . பெரும்பாலும்  எதிர்மறையான கருத்துக்களே வந்தவண்ணம் இருந்தது . 

தொடக்கத்தில் இருந்தே சில முடிவுகளை சரியாக கையாண்டிருந்தால்  , தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் . முக்கியமாக மூன்று விஷயங்கள் . ஒன்று ; முதலியார்பேட்டை வேண்டாம் உப்பளம்தான் சரியாக வரும் என அறிவுறுத்தப்பட்டது . அமைச்சர் கணக்கில் ஒரு கல்  இரண்டுபழக் கனவிலிருந்து சுப்பாராயன் இறங்கிவரவேயில்லை . வெற்றி பெறாவிட்டால்......அந்தக் கேள்விக்கு அவரிடத்தே பதிலில்லை .

இரண்டு ; நான் சபாபதியிடம் இருந்து வாங்கிவந்த அவருடைய தில்லிக்கான சிபாரிசு கடிதம் . அதை போஸ்டராக அடித்து தொகுதி முழுவதும் ஒட்டியது ,  பாலனுக்கு எதிர்மறையான விளைவுகளை கொடுக்க துவங்கியது , ஆனால் அதை உணராது பெரிய ராஜதந்திரம் போல சுப்பாரயன் பேசிவந்தார் . 

மூன்று ; ஒரு பிரச்சனையில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மஞ்சினி அவருடைய போராட்டத்தில் காவல் துறையால் தாக்கப்பட்ட போது , பாலன் அவர் சார்பாக உண்ணாவிரதம் இருந்தது . ஒரு வயது மூத்த அரசியல்வாதி செய்யும் போது கௌரவமாக புரிபடுவது , பாலனை போல ஒருவர் அதை செய்த போது பகடியாக இளிவரலாக பார்க்கப்பட்டது . இந்த நிகழ்வால் தொகுதியில் போட்டி சபாபதிக்கும் மஞ்சினிக்கு இடையே என்றாகி , பாலன் மூன்றாவது இடத்திற்கு நழுவி விழுந்தார்.

ஒருநாள் மாலை என்னை கூப்பிட்டு சண்முகத்தை பார்த்து சில பிரச்சனை பற்றி பேசிவர சொன்னார் . அதாவது சண்முகம் வக்கீல் முருகேசன் மூலமாக சபாபதிக்கு பொருளாதார உதவி செய்வதை நிறுத்தும்படியும். தனக்கான கட்சி நிதி உதவியை இரண்டு மடங்கு உயர்த்தி தர கேட்கும்படி சொல்லியனுப்பினார் . இது வேண்டாத தலைவலி 

கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு எதிராக மாநில தலைவர் போட்டி வேட்பாளருக்கு பொருளியல் ரீதியாக உதவுகிறார் என்பது சாதாரண குற்றச்சாட்டல்ல . எவரையும் கொதிக்க வைப்பது . இதை போய் யார் கேட்பது என்னை போய் சொல்லச் சொன்னவுடன் , பலமுறை நான்தான் பலிமிருகம் ,இம்முறையும் அப்படியே .... என நானும், லோகநாதனும் இன்னும் சிலரும்  சென்றோம் . இம்முறை மிக ஜாக்கிரதையாக என் தலைமை போன்ற தோற்றம் வாராது பார்த்துக்கொண்டேன் .

சண்முகத்தை சந்தித்து என்ன என்ன பேசவேண்டும் . என்பதையும் , முதலில் என்ன .. யார் .....பேசவேண்டும் என்பதை பற்றி தெளிவாக சொல்லியே இம்முறை சண்முகத்தை பார்க்க சென்றோம் . நிதி உதவி பற்றியும் தொகுதி நிலவரம் பற்றியும் நாங்கள் கேட்பதற்கு முன்பாகவே அவரே கேட்டார் . அதற்கு ஏதேதோ பதில் சொன்னார்கள்

லோகநாதன் தீடிரென வக்கீல் முருகேசன் பற்றி பேச ஆரம்பித்து விட்டார் . இந்த லோகநாதனை போல ஒரு முட்டளை நான் அரசியலில் இதுவரை கண்டதில்லை , இதேபோல ஒருமுறை வைத்திலிங்கம் முதல்வராக இருந்த போது பாலனுக்கு வாரியம் கேட்டு இதே லோகநாதன் , அவரைவிட்டால் பாலனுக்கு வேறு போகிடமில்லை, என்கிற ரீதியில் பேசி உடன் வந்தவரை நெளியவைதார். நான் அவரை அடக்க என் எல்லையை கடந்து வரமாறு நிகழ்ந்து விட்டது .

என்னை நோக்கி , அன்றும் சண்முகம் நிறைய விஷயங்களை பேசினார் . அவை வழக்கம்போல் உணர்ச்சிகரமானவைகள் , உப்பளம் தொகுதியில் நிற்கும் வாய்ப்பை தவறவிட்டது , சரியான அரசியல்ல , ஏன் உங்களை போன்ற இளைஞர்களுக்கு காத்திருக்கும் தன்மையில்லை . கண்ணன் வெற்றிபெற்றதாக நீங்கள் நினைத்துக்கொண்டு அந்த பாதையில் பயணப்பட விரும்புகிறீர்கள்

கண்ணன் தனக்கான இடத்தை அடைந்துவிட்டாரா , தெரிமா உங்களுக்கு . இதுபோன்ற மோதல் போக்கை களத்தை தவிர மற்றவிடத்தில் பயன்படுத்தாதீர்கள் . உங்களுக்கான நல்லதிற்கும் நான்தானே பொருப்பு . ரமேஷ்சென்னிதாலாவும் , ராஜீவ்காந்தியும் பேசி தனக்கு சீட் கிடைத்துவிட்டதாக பாலன் உளறினானா . அப்படித்தான் உங்களுக்கு கிடைத்ததா. நீங்கள் முதலில் இரண்டு விஷயம் புரிந்து கொள்ளவேண்டும் .

ஒன்று ; மாநில கமிட்டி சார்பாக நான் சமர்ப்பிக்கும் உத்தேச வேட்பாளர்களின்  பட்டியலில் இடம்பெற்றிருப்பவரைத்தான் மேல் கீழாக மாற்றியமைக்க தில்லியால் முடியுமே தவிர . பட்டியலிலேயே இல்லாத ஒருவரை உள்ளே புகுத்தமுடியாது . உங்களால் முடிந்தால் இதைப் புரிந்துகொள்ளுங்கள் . என்றார்.

இரண்டாவது; மரைக்கார் திட்டம் வேறு அதில் சபாபதியை வெட்டத்தான் பாலன் பெயர் இடம்பெற்றது . அது நடக்க கூடாது என்பதால்தான் பாலனை உப்பளத்தில் நிற்கச்சொன்னேன் . பாலன் நான் சபாபதிக்காக அவரை இடம்மாற்ற முயற்சிக்கிறேன் என நினைத்துக்கொண்டார், உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா . சபாபதி என்றுமே என்னுடைய ஆளில்லை என்றார்.

உடன் வந்த யாருக்கு எப்படியிருந்ததோ எனக்குத் தெரியாது . நான் அயர்ந்து போனேன் . எனக்கு அவர் சொன்ன முதல் விஷயம் அச்சரசுத்தமாய் புரிந்தது . அவை தர்க்க ரீதியானவை , நிஜத்திற்கு வெகு அருகில் இருந்ததனால் , அவர் சொல்லிய இரண்டாவதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும், என்பதற்கு அவரது முதல் சூசனம் விவரித்தது

இறுதியாக பேசிமுடித்து என்னைநோக்கி , உங்களுக்கான பெருளாதார உதவியை கட்சியின் துணைத்தலவர் வக்கீல் வைத்தியநாதன் செய்வார் சென்று பாருங்கள் என்றார்வரும் வழிமுவதும் எனக்கு சண்முகத்தின் பேசுமுறை பல திறப்புக்களை கொடுத்தவண்ணமிருந்தது. அரசியல் அதன் பலதிக்குகளும் செயல்களும் கருத்துக்களும் எண்ணங்களும் வாய்ப்புகளும் உதவிகளும் எதிர்ப்புகளும் பூட்டப்படே இருக்கின்றன . அனைத்து சாவிகளையும் பெற்றவருக்குகூட எது எதில் சேரும் சேராது என தெரிந்துக்க வேண்டியுள்ளது . அனேகமாக சாவிகளுக்கு மட்டுமே சொந்தகாரர் என உணரத்தொடங்கினேன் .


ஆனால் எங்களுடைய யுத்தம் எத்தகையவருடன் ,என்பது யாருக்கு புரிந்தோ இல்லையோ  எனக்கு தெறிவாக தெரிந்தது , சொல்லத்தான் யாரும் என்னருகில் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்