ஶ்ரீ:
அடையாளமாதல் - 74
* வண்ணமழிந்த மலர் *
இயக்க பின்புலம் -1
அரசியல் களம் - 23
தில்லி சென்றிருந்த குழுவிலிருந்து, இன்பசேகரன் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார் . எங்களனைவரையும் விட வயதில் மூத்தவர் . கண்ணன் உருவாகிவந்ததற்கு முக்கிய பின்புலமாக விளங்கியவர்.அவருடைய தம்பி நம்பிராஜன் என் அனுக்கன் . என்மீது தனிப்பட்ட மரியாதையுடையவர்.
அன்று மதியம் தில்லியலிருந்து மீண்டும் இன்பசேகரன் போன் செய்தார் சீட் உறுதியாகிவிட்டது என்றும் . "முடிவு தற்பொதுதான் வெளியானது , பாலனுக்கு தெரியாது அதற்கு முன்பாகவே சென்னைக்கு விமானத்தில் கிளம்பிவிட்டார், வருபவருக்கு விஷயத்தை சொல் " மேலும் மைலத்தில் சபாபதி தன்னிடம் சொல்லியிருந்ததை எனக்கு நினைவுபடுத்தி . "பாலன் என்ன தகராறு நடந்தாலும், உயிரே போனாலும் சபாபதியின் கால்தொட்டு சென்னிசூடி ஆசீ பெறாது தன்வீட்டிற்கு செல்லக்கூடாது , நீ என்ன செய்வாயோ எனக்குத்தெரியாது" என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். செல்போனில்லில்லாத காலம் , நான் சுப்பராயனையும் தாமோதரனையும் அழைத்து முதலில் தகவல் சொன்னதும் குதிக்க துவங்கிவிட்டனர் .
நான் அவர்களை கட்டுப்படுத்தி விஷயம் வேறு ஒன்று உள்ளது அவர்கள் இருவரும் உடன் சென்னை செல்லவேண்டிய காரணத்தை சொல்லிவிட்டு . மேலதிகமாக , சிக்கலே இப்போதுதான் . இரவு எட்டுமணிக்கு சென்னை வந்திறங்கும் பாலன் முதலில் சபாபதியின் ஆசி பெறாது வீடு சென்றால் நாம் தோற்றோம் என்பது கணக்கு . அனைவரும் அதன் தீவிரதையை புரிந்திருந்தனர். முக்கியஸ்தர்கள் சிலர் உடனே சென்னை கிளம்பினர் . அந்த இரவு முழுவதும் போனின் அருகிலேயே தூங்காது விழித்திருந்தேன் .
அதிகாலை 5:00 மணிவரை ஒரு தகவலும் இல்லை . அதன் பிறகு சபாபதி வீட்டில் பெருங்கூட்டம் கூடியிருக்கிறது என்கிற தகவல், நான் ஏற்பாடு செய்திருந்த என் நண்பர்கள் மூலமாக கிடைத்தது . எங்கள் சூழல் பதட்டமானது , அதற்குள் கட்சியை சேர்ந்த சிலர் என் வீட்டிற்கு வந்தனர் அவர்கள் சொன்னது . பாலன் கட்சியலுவலகத்தில் இருக்கிறார் என்று.
குழப்பத்தை கட்டுப்படுத்த இயலாததால் . அனைவரும் கட்சி அலுவலகத்திற்கு விரைந்தோம் வழியில் சந்தித்த சிலர் , அண்ணாசாலை பாலன் இல்லை முதலியாரபேட்டை அலுவலகத்தில் இருக்கிறார் என்றதும் , படபடப்பாக அதிகமானது . என்ன நடக்கிறது? ஏன் ஒரு தகவலும் இல்லை , பாலன் சபாபதியை சந்தித்தாரா இல்லையா , மாநில அலுவலகத்திற்கு செல்லாமல் தொகுதி அலுவலகத்தில் என்ன வேளை . யோசித்து , யோசித்து மண்டை சூடேறியது தான் மிச்சம் .
முதலியார்பேட்டை வந்து சேரும்போது காலை 6:00 மணி , அலுவலகத்தில் பாலன் இல்லை , அப்போதுதான் வீட்டிற்கு சென்றுவிட்டிருந்தார். எனக்கு சில பதில்கள் தேவை , அவர் விட்டிலிருந்தது சௌகரியமாகப்பட்டது. தனிப்பட்டு பேசும் வாய்ப்பு . அவர் வீட்டிற்கு விரைந்தேன் . நெருக்கமாக உணரப்படுகிற சிலர் மட்டுமே அங்கிருந்தனர் . அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் , என்னைப் பார்த்து புண்ணகைத்தார் , அதில் சுரத்தில்லை . ஒரு வித மயான அமைதி நிளவியது .
என்னை கண்டதும் தாமோதரனும் சுப்பராயனும் நின்றிருந்தவர்களிடமிருந்த வலகி வந்தனர் . நாங்கள் மௌனமாக தெரு அருகில் உள்ள டீ கடையை நோக்கி நடந்தோம் . அவர்கள் ஆரம்பிக்கட்டும் என காத்திருந்திந்தேன் .
இரவு பதினொரு மணி சுமாருக்கு பாலன் பாண்டிவந்து சேர்ந்திருக்கிறார். தில்லியின் செய்தி அவர்கள் சொல்லித்தான் பாலனுக்கு தெரியும். உற்சாகமாக கிளம்பியவருக்கு நான் சொன்ன இன்பசேகரன் " பார்மூளா" பாலனை எரிச்சலடையச் செய்தாலும் , விஷயத்தின் காட்டிண்யம் அவரை பணியவைத்தது.
புதுவையை வந்தடைந்ததும் நேராக சபாபதியின் வீடு அமைந்துள்ள கொம்பாக்கம் பகுதிக்குள் வண்டி விரைந்தது, சென்னையிலிருந்தே இதை எப்படி எதிர்கொள்வது , அவர் என்ன சொல்லுவார் , நாம் என்ன சொல்லவேண்டும் , யார்யாருடன் வீட்டுக்கு செல்லவேண்டும் , நிச்சயம் சுப்பராயன் கூடாது . சபாபதி பாலனை விட சுப்பராயனின் மேல்தான் காட்டமாக இருப்பார் . அவர்களுக்குள் ஜாக்கிரதையாக பேசியபடி சபாபதியின் வீட்டிற்கு அருகில் வந்தனர்.
பாலனுக்கு சபாபதிபற்றியெல்லாம் கவலையில்லை . அது புரிந்து கொள்ளக்கூடியதே . அவர் அதை மிதித்து கடந்தே தனக்கு சீட் வேண்டும் என்கிற நிலையை எடுத்தார் . ஒரு நாளில்லை ஒரு நாள் இந்த தருணம் வரும் என்அனைவரும் அறிந்தேயிருந்தனர் . பாலனுக்கு அங்குள்ள ஒரே சிடுக்கு பச்சைமுத்து , சபாபதியின் பிரதான வியூக வகுப்பாளர், நம்பிக்கையாளர் ... எல்லாம்.
பச்சைமுத்துவும் , சுப்பராயனும் பாலனும் கண்ணனிடம் ஒன்றாக அரசியலில் வளர்ந்தவர்கள் .ஒரே ஊர்காரர்கள் . ஆகவே நல்ல நண்பர்கள். கண்ணனைவிட்டு பாலன் வெளியேறும் போது பலர் பாலனுடன் துணைத்தனர் அவர்களில் பச்சைமுத்துவும், சுப்பராயனும் பிரதானமாக பாலனுடன் வெளியேறினார்கள் . இருவருமே ஒரு முழு அரசியல் சிந்தனையாளர்கள். பாலனின் வெற்றிக்கு பலமாக இருந்தவர்களில் ஒருவர்.
பல இக்கட்டான நிலைகளில் அரசுசூழ்தலிலின் வழியாக பாலனை வழிநடத்தியவர்கள் .ஆனால் இருவரின் வழிமுறைகள் வேறு வேறாக இருந்தன . இருவரின் அரசுசூழ்தலிலும் அவரவர் பட்சம் சிறு இடைவெளிகளை பிறிதொருவர் கண்டடைவதுண்டு . மூவர் ஒன்றாக அமர்ந்து உரையாடும்போது அந்த சந்துகள் நிரவப்பட்டு முழுமையடையும். அவை வெற்றிகரமாக இருந்தன .
சுப்பராயன் யாருடனும் ஒத்துபோகாத போக்குகொண்டவர். எந்த உரையாடல்களிலும் இருவரும் அவர்களுக்குள் மோதியபடியிருப்பர் . பாலன் தலையீட்டால் அவை தாற்காலிகமான உடண்நிலைக்கு வரும் . குரோதம் அப்படியே நீடிக்கும் .
பாலன் பெரும்பாலும் பச்சைமுத்துவின் நிலைகளைதான் எடுப்பார் , சில சுப்பராயன் சொல்லுக்கும் அவை மாற்றமடையும் . செயல்படுகிற இடத்தில் பாலன் இருப்பதால். சூழலின் அடிப்படையில் அவை மாற்றங்கொள்ளும் . சுப்பராயனின் தங்கை பாலனுக்கு மணமுடிக்கப்பட்டதும் , அது சுப்பாராயனின் சிறந்த கணக்காக எண்ணினார் அதை ஒட்டி சுப்பராயனின் கையோங்கியதாக பச்சைமுத்து சந்தேகிக்க துவங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக