ஶ்ரீ:
அடையாளமாதல் - 71
* மலர் சூடும் பனிமுகம் *
திரு.ப.சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 44
சண்முகம் அவருடைய பேச்சுகள் உற்சாகமளிப்பவை ஏனெனில் எனக்கு அவை வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பிற்கான விஷயம் . எத்தனை முறை சொன்னாலும் நான் சிரத்தையாக கேட்பது வழமை. ஒவ்வொரு முறையும் அது சில புதிய திறப்புகளையும் கோணங்களையும் அளிக்க தவறுவதில்லை. மேலும் அடுத்து நிகழவிருப்பதாக ,அவர் மனக்கணக்குகள் அதன் வழியாக வெளிப்படுவதை அவராலும் தவிற்க இயலுவதில்லை .
பல முறைக் கேட்ட கதைகள் அவை . பெரும்பாலும் அதில் "சரித்திரத்தில் ஈ போல " ஒரு ஓரத்தில் இருந்திருக்கிறேன். அவை என் நினைவில் மறைவதில்லை .அது ஏறக்குறைய ஒரு பாடத்திட்டம் போல . ஏற்கெனவே சொன்னதில் சில அம்சங்கள் மாறுபாடு அடைந்திருக்கும் . சொல்முறை பழையது போல இருந்தாலும் அதில் உள்ள வித்தியாசங்களை தொகுத்தால் . ஒரு புது விஷயம் கிடைக்கும் .
ஒரு சிறு பூ அபூர்வமாக சூடும் பனிததுளி போல. மிக சரியாக பொருந்தி தன் உள் அடுக்குகளை திறந்து காட்டக்கூடிய தருணங்கள் அல்லது அது என் அனுமானமாக , கற்பனையாக கூட இருந்திருக்கலாம் . ஆனால் அதையொட்டி நான் முன்னெடுத்த பல செயல்களின் இறுதியில் நான் அவரை உறுதியாக சந்தித்தேன். நான் அங்கு சென்று சேரும்போது உறுதியாக சண்முகம் அங்கு நின்றிருக்க தவறியதில்லை . சில சமயமயங்களில் ,அவர் வந்து சேருவதற்கு முன்பாக நான் சென்று காத்திருந்த நிகழ்வுகள் கூட உண்டு.
அவ்வகை பேச்சில் உள்ள தொனியை அவதானித்தால்தான் அவர் என்ன நினைக்கிறார் , அல்லது என்ன சொல்லவருகிறார் என துல்லியமாக விளங்கும் . அதில் ஆச்சர்யமாக நான் கவனித்தது , பலர் கூடியிருக்கையில் , அவர் ஒரு சம்பவத்தை சொல்லும்போது பல தரப்பட்ட பதவியில் உள்ளவர்களும் சாமண்ய தொண்டர்களும் கூடியிருக்கிற சில சந்தர்பங்களில் , பேசும்போது ஒவ்வொருவரையும் பார்த்துத்தான் பேசுவார் . அவை சிலரை கண்டிப்பதாக , சிலரை சிலேகிப்பதாக, சிலரை கிண்டலடிப்பதாக , சிலரை உதாரணமாக , சிலரை உதாசீனமாக அந்த தொனி போய்கொண்டே இருக்கும், ஆனால் சொல்லப்டுபடுவது ஒரு நிகழவைப்பற்றியதாக மட்டுமே இருக்கும் .
அதைவைத்து என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது . அவர் அபிப்ராயம் என்ன . அல்லது வர இருக்கும் நிகழ்வுகளில் நான் ஆற்றவேண்டியது குறித்து ,அவரது குறிப்புணர்த்துகை என்ன என்பதை மிக சரியாக அறிய உதவும். நான் ஒரு மாணவனின் இருப்பில் பெரும்பாலும் அவர் அருகனைந்திருப்பதால் எனக்கு ஒவ்வொரு முறையும் அது என் கற்பனையை விரித்தெடுத்தபடி இருக்கும். நான் ஆற்ற வேண்டிய , அவருக்கு உகந்த , என்னை தனித்து காட்டும் அடுத்த செயல்பாட்டுக்கு நான் தயாராகிக் கொண்டிருப்பேன்.
சம்பிரதாயமாகவோ , நிர்பந்திக்கப்பட்டோ , காரியார்த்தமாகவோ அவரை சந்திக்க வருகிறவர்களுக்கு அவர் சொல்லும் அந்த கதைகள் "ஒரு பெரும் வதை ". அதைவிட அந்த கதைசொல்லி வெறுக்கத்தக்கவர். எங்கோ கண்மூடி இறந்த காலத்தில் இருந்து கொண்டு கவைக்குதவாத தற்பெருமை பேசும், நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு "கிராமத்து பெருசு " . எல்லோராலேயும் எரிச்சலுடன் பார்கப்படுபவர் . அவரா ? முதல்வர் வேட்பாளரா? பலருக்கு அது இரவுக் கொடுங்கனவுகளில் ஒன்றாக வந்தபடியே இருந்தது.
எதிர்த்தரப்பிற்கு சிகிக்கமுடியாததாக இருந்தது வியப்பில்லை, ஆனால் அவர் தரப்பிலேயே பலர் திகிலடைந்திருந்தனர் என்பதுதான் வேடிக்கை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக