https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 14 மே, 2017

அடையாளமாதல் - 67 *ஜாதி கணக்குகள்

ஶ்ரீ:

அடையாளமாதல் - 67
*ஜாதி கணக்குகள் 
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 40
அரசியல் களம் - 18இளைஞர் காங்கிரசின் மாநில கமிட்டியில் கண்ணன் தன்தரப்பை ஆட்களை நியமித்து , அதனூடான செயல்பாட்டால் , புதிய தலைமையை ஒன்றுமில்லாபடி ஆக்கியிருக்க முடியும் . தங்கள் தகுதிக்கும் உயரத்திற்கும் அது சிறுபிள்ளை விளயாட்டு எனத்தோன்றி இருக்கலாம். மேலதிகமாக வேறு வழிமுறைகளில் தங்கள் கவனத்தை திசைமாற்றானர் கமிட்டியிலிருந்த நிர்வாகிகள் தனியாக கிளைத்தெழாமல் போனார்கள்  . 

இந்த முடிவிற்கு முதல் பலி பாலன் இரண்டாவது பலிதான் கண்ணன் என்பதுதான் இன்னும் வினோதம் . அரசியலில் இல்லாத நான்காவது தரப்பு அவர் என்றாகிப்போனார் . கண்ணன் விலகிய இடத்தில் மரைகார் பாலனை வைத்தார் . ஆனால் அனைத்து தரப்பிலும் பாலன் மரைகார் அணியின் நீட்சியாக பார்க்கப்பட்டார்

பாலனை மரைகார் விலைகொடுத்து வழங்கிவிட்டார் போன்ற கவைக்குதவாத குற்ச்சாட்டுகளை சிலகாலம் சொல்லி ஓய்ந்து போனார்கள் . கண்ணனுக்கு சம்பந்தமில்லாத பத்மசுந்தரி வழக்குகளில் அடிபட்டு சீரழிய அவர்கள் அதை மீட்டெடுக்க புகுந்தனர். தனக்கு  எதிர்பில்லாத நிலையில்தான் பாலன் முற்றிலுமாக முகமிழந்து போனார்

ஆட்சி முடிவிற்கு வரும் சூழலில் கண்ணன் தன் முற்றடையாளத்தை இழந்து எந்தக் காங்கிரசின் இடைவெளிகளை இட்டு நிரப்பக்கிளம்பினாரோ . அதை இட்டு நிரப்பினாரா எனத்தெரியாது ஆனால் தானும் அதில் ஒன்றென ஆயினார்.

1990 புதுவை சட்மன்ற தேர்தலில் கண்ணன் தனி அணியாக உருமாறத் தொடங்கியிருந்தார் . சட்டமன்ற கட்சித்தலைவர் பதவி நெருங்க நெருங்க சண்முகம் மற்றும் மரைகார் அணிக்கு மாற்றாக தான் மூன்றாவது அணி என நிலை எடுத்தார் . தன் பங்கிற்கான தேர்தல் சீட்டு சண்டை களத்தில் அதன் பல அலகு விரிவுகளை கண்டு சோர்ந்து போனார்

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்புகள் சிதறத்துவங்கியிருந்ததால் அதிலிருந்து பெரிய வழிகாட்டல் ஒன்றும் கிடைக்கவில்லை . மாநில அமைப்பு பாலன் கைக்கு சென்று அவர் அதன் பங்குகளிக்காக கைநீட்ட துவங்கினார்
அந்த விளையாட்டில் கண்ணன் தனக்கு மட்டுமே சீட்டை பெற முடிந்தது  தன் ஆதரவாளர்களுக்கு வாங்கித்தர இயலவில்லை.

அதில் வேடிக்கையாக பாலன் இரட்டை நிலை எடுத்தார் . மாநில போக்கிலே மரைக்காரை சார்ந்தும் . தில்லிக்கு தனக்கு தனியான புதுக்கணக்கு துவங்கச்சொல்லி வற்புறுத்தி வந்தார். ஏற்கவே சொன்னது போல பாலன் மரைகாரின் நீட்சி அணியாக அடையாளம் காணப்பட்டு முற்றாகவே தன் இடமிழந்து போனார்.

அந்த தேர்தலில் பாலன் முயற்சிகளால் எந்தப்பலனும் இல்லாமல் . மாநில சீட்டு பட்டியலில் கூட இடமில்லாதாகியது. மரைகார் பாலனுக்கு சீட்டே கேடக்கவில்லை . சண்முகத்தை சந்தித்தபோது அவர் சொன்னது "மரைகாரைப் பார் அவர் மூலம் பட்டியலில் இடம்பெற்றால் தான் அதை தடுக்கப்போவதில்லை " என்றார்.

இளைஞர் காங்கிரஸ் தரப்பில் நாங்கள் ஒரு சிறு அணியாக சண்முகத்திடம் பாலனுக்கு சீட் கேட்டு சென்றிருந்தோம் . சண்முகத்தை நெருக்கத்தில் சந்தித்தது அப்போதுதான். அதுவரை அவர்பற்றிய பல கணக்குகள் எனக்கு மாறியது

அன்று அவர் எங்களை நோக்கி கேட்ட பல கேள்விகளுக்கு எங்களிடம் பதிலில்லை . அவை மிக யதார்த்தமான அரசியல் வழிமுறைகளைப்பற்றியது . வெகுநாட்கள் என்மனதில் அவை வடுக்களை போல தங்கிவிட்டன . மரைகாரை எப்போதுமாக நான் வெறுக்கத்துவங்கியது அந்தப் புள்ளியிலிருந்து, என் நினைக்கிறேன் 

வரை சந்தித்துவிட்டு வெளிவந்தபின்பு , நிலைமையை சரியாக கணித்தது சுப்பராயன்தான் , தில்லிக்கு நாம் ஒரு அமைப்பு என்கிற தகவலை இல்லை என்றார். எனக்கெல்லாம் அது அதிர்வாக இருந்தது . சண்முகம் கேட்ட சில கேள்விகளை நான் சுப்பராயனிடம் கேட்டபோது , அவரிடமிருந்த மௌனமே பதிலாகவும் , விடையாகவும் கிடைத்தது

அடுத்தது என்ன என்கிற கேள்விக்கு , முதலியார்பேட்டையில் சபாபதி வெற்றிபெறக்கூடாதென்றும் . அது பாலனின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றனர் . சபாபதியை தோற்கடிக்க பாலன் குழு முயற்சித்தது என்பது உண்மை. ஆனால் அப்படி ஒன்றை செய்யக்கூடிய பலமுள்ளவர்காளாக அவர்கள் இல்லை என்தே கள யதார்த்தம் .

முதலியார்பேட்டையில் சபாபதி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதன் பிண்ணனி மிக முக்கியமான கணக்காக அன்று சுப்பராயனால் அது முன்னெடுக்கப்பட்டது. 1985 இல் காங்கிரஸ்  சட்மன்றதலைவர் தேர்தல் உப்பளம் அரசினர் விடுதியில் நடந்து அதில் மரைகார் தெரிவுசெய்யப்பட்டார் . மற்ற மந்திரிகள் யார் என்பதற்கான கட்சிகூட்டம் நடந்தபோது பலவகையான வியூகங்கள் மூலம் அது முடிவு செய்யப்பட்டது . கண்ணன் அந்தப் பட்டியலில் இடம்பெறக்கூடாதென்பதில் மரைகார் உறுதியாக இருந்தார். அதற்கு கடைசி அஸ்திரமாக அவர் பிரயோகப்படுத்தியது ஜாதி ரீதியானது .

புதுவை காங்கிரசில் ஜாதி ரீதியாக அமைச்சர்கள் பிரதிநிதிபடுத்தபடுவதில்லை . அது ஆபத்தான வழிமுறைகளில் கொண்டுவிடும் என்பது முக்கியமான காரணியாக அன்று பார்க்கப்பட்டது . வண்ணியர்களுக்கு என்கிற சிக்கல் எழுந்ததால் அது பூதாகரமாக வெடிக்கும் நிலைக்கு நகர்ந்தது

கண்ணன் தன்னை வண்ணியர் பிரதிநிதி எனச்சொல்லி அனைவரின் வாயையும் அடைத்தார்.அவரது தாய் வண்ணியர் , தந்தை முதலியார் . தந்தையின் ஜாதியே பிள்ளைக்கு வரும். இருந்தும் அவர் தன்னை வண்ணியர் என்று பிரகடனம் செய்தார். ஆகவே சபாபதிக்கு ஒரு பொறுப்பு கொடுக்கவேண்டிய நெருக்கடி எழுந்தது

பின் அவருக்கு அரசு கொறடா பதவி வழங்கப்பட்டு சிக்கில் முடிவுற்றது . புதுவையில் பெரும்பான்மையானோர் வண்ணியர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் , தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக புழுங்கினர். இனி ஒவ்வொரு அரசாங்கத்திலும் தங்களுக்கான இடத்தை பெற்றே தீருவதாக அவர்களில் சிலர் பேசத்துவங்கினர் . இது அடுத்தடுத்து சிக்கலுக்கு வழிகோலியது.


அன்றைய சூழலில் காங்கிரசில் வண்ணியர் சமூகத்தில் தேர்தலில் வெற்றிபெறக்கூடியவர்களாக தெரிந்தவர்களில் சபாபதாயும் , பாலனும் முன்னிலை வகித்தனர் . சபாபதி வீழ்ந்தால் வண்ணியர் கணக்கில் பாலன் மந்திரி ஆவது உறுதி. இப்படியோர் கணக்கிருந்தது அன்று . ஆனால் விண்ணகத்து தெய்வங்களின் ஆடல் வேறுதிசையில் இருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக