https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 23 மே, 2017

அடையாளமாதல் - 79 * செயற் கருச் சிதைவு *

ஶ்ரீ:






அடையாளமாதல் - 79
*  செயற் கருச் சிதைவு  *
இயக்க பின்புலம் - 6
அரசியல் களம் - 24






கண்ணன் ,பாலன் , சுப்பாராயன் மூவரும் பேசியப்படி வெளி ஹாலுக்கு வந்தபோது , கண்ணனின் இயற்கையான குணம் புதிதாக யாரை பார்த்தாலும் தன பேச்சால் வசீகரிக்க துவங்கிவிடுவது அது ஒரு தனேசெயல்படும் விதமாக நிகழ்நிரல்செய்யபட்டது . தன்னால் அப்படி செய்ய இயலும் என்பது அவரது அபார நம்பிக்கை . அது உண்மையும்கூட .

வெளியில் வந்த கண்ணனுக்கு என்னை பார்த்ததும் ஆச்சர்யமாக யார் இது என்று கேட்க நான் ஒன்றும் சொல்லாதே பாலனை பார்த்தேன், அவர் என் பேரை சொன்னவுடன் அவர் கண்கள் மாறுபாடடைவதை பார்த்தபடி இருந்தேன் . என்னை அவர் அறிந்திருந்தார் . என்னை பற்றிய மேலதிகத்தகவல் அவருக்கு வேண்டும் . எனக்கு என்ன சொல்வதென்பது தெரியவில்லை , அப்பா மிக எளிமையான ஆன்மீகவாதி . தனக்குள்ள சின்ன வட்டத்தை தாண்டி அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாதவர் . ஊர் பெரிய கோவில் அறங்காவலராக இருக்கிறார் , எங்கேயும் தன்னை தனித்து வெளிக்காட்டுவதை விரும்பாதவர் . 

என்னுடைய குடும்ப பேரை சொன்னதும்,  அவர் மிக ஆச்சர்யமாக கேட்டது "கிருபா"  பையன நீ என்பது . எனக்கு தூக்கிவாரிப்போட்டது . அவர் என் தந்தையை நினைவு கூர்ந்தது ஆச்சரியம் என்றாலும் , அவரை அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கூப்பிடும் முறையில் சொன்னது எனக்கு  அதிர்ச்சியை அளித்தது .

முடிவுற்ற அவர்களது பேச்சி , என் நிமித்தமாக மறுபடியும், என்னை வைத்து துவங்கியது . எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது . அவர் என்னை நோக்கி கேட்ட முதல் கேள்வியே . உன்னைப்பற்றி கேட்டிருக்கிறேன் . அப்போது அது எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை , அனால் உன்னைபோன்ற குடும்ப பின்புலத்திலிருந்து ஒருவன் மாநில அரசியலை கீழ்மட்டத்திலிருந்து துவக்க விரும்புவதும். உன் அரசியலை பார்க்கும் விதம் ஆச்சர்யமூட்டுவது , உன்னை எப்படி என்னுடைய ஆட்கள் பார்க்காமல் விட்டார்கள் என்று சொல்லியபடி அவருடைய பாணியில் இழுத்து அணைத்துக்கொண்டார் . 

நான்  சற்றும் எதிர்பார்க்காதது இது . நாம் இன்னொருமுறை சந்திக்க வேண்டும் என்று சொல்லியபடி வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார் . நான் சங்கடத்தின் உச்சத்தில் இருந்தேன் . பாலன் கண்களில் தெரிந்ததை நான் இன்றும் மறக்கவில்லை . அதில் தனக்கான பொருளை பிறன் தீண்டுவதால் ஏற்படும் அதிர்ச்சி போல ஒன்றிலிருந்தார்.

நடுநிசி தாண்டி பாலனை அவர் வீட்டில் கொண்டு விடும்வரை யாரும் ஒன்றும் பேசவில்லை . பாலனை வீட்டில் விட்டு சுப்பாராயனும் நானும் டீ கடைக்கு வந்தோம் , நானாக அசட்டு தனமாக ஏதாவது பேசி வைக்காது ,மௌனமாய் இருந்தேன் . என்னால் செயற்கையாய் வேறு விஷயத்தை ஆரம்பிக்க இயலவில்லை . அதில் பிசிறடிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் நானும் ஒருவித அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை , ஆகவே சுப்பாராயனே தொடங்கட்டும் என காத்திருந்தேன் .

மேளகதிகமா நான் நினைப்பதையே இவரும் சிந்திக்கிறாரா என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் இருந்தேன் . டீ  குடித்த பிறகு , சுப்பாராயன் என்னிடம் கேட்டது , " நீ இதுவரை கண்ணனை நேரில் சத்ததில்லையா "என்று , நான் "இல்லை" என்றேன் , அவருக்கு அது ஆச்சர்யமளிப்பதாக இல்லை , "நான் இதை எதிர்பார்த்தேன் கடந்த சில மாதங்களாக உன்னுடைய பெயர் நிறைய இடத்தில அடிபடுகிறது , உனக்கு தெரியுமா என்றார்.

சிலர் அதுபற்றி என்னிடம் சொன்னதுண்டு . நான் அவரிடம் "தெரியாது " என்றேன் . உன்னைப்போல ஒருவன் பாலன் பின்னால் நிற்பதை நிறையபேர் விரும்பவில்லை . அதற்கான காரணம் எனக்கு தெரியும் , அதை பின்னல் சொல்கிறேன் , பாலனுக்கு அதில் சிறு குழப்பம் இருந்தது . அநேகமாக இன்று தீர்த்திருக்கும் என்று கூறி சிரித்தார் 

எனக்கு தெரியும், அரசியல் அப்படிப்பட்டதே . யார் யாருக்கு எப்போது எதிரெழுவர் யாரெதை இழப்பார்கள் என்று சொல்லவே முடியாது . நான் சுப்பாராயனிடம் , எனக்கு அது எல்லாம் புரிந்திருக்கிறது . நான் அவற்றை பற்றி கவலைப்படவில்லை .

 அரசியலில் எதாவது ஒரு வழியில் பிழைத்திருக்க ஆசை பட்டவன் என்னவாவது செய்தபடி இருப்பான் . நான் அரசியலை ஒரு விளையாட்டு போலவே அனுகி உள்ளே வந்தேன் . எனக்கென்று எந்த திட்டமும் இல்லை .அதனால் நான் எனக்கான வேலையைதேர்ந்தெடுத்தேன் . அதில் உன்னைமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன் .


என்னால் ஜீரணிக்க முடியாதது என்னுடைய நேர்மையை யாரவது சந்தேகிப்பது , என்னுடைய பலகீனங்களை நான் நன்றாக அறிவேன் . என்தகுதியின்மையும் எனக்கு தெரியும் . தேவையற்ற ஆசைகளை நான் உருவாக்கிக்கொள்வதில்லை . அரசிலுக்கு நான் எந்த விதத்திலும் தகுதியானவன் இல்லை என்பது எனக்கே தெரியும் . இது என் திறமைக்கு ஒரு சவால் . என்னக்கு அரசியல் பிடித்திருக்கிறது .

ஆனால் அன்று சுப்பாராயன் என்னிடம் ஏன் எனக்கு அரசியல் பிடித்திருக்கிறது என்கிற கேள்விக்கு என்னால் சரியான பதில் சொல்லத்தெரியவில்லை , இப்போது நினைக்கையில் , நட்பும் காதலும் ,அரசியலும்  ஒன்றைப்போலவே மற்றொன்று . பிறரால் விரும்பப்படுவதென்பது மகத்தானது ,.

உளவியல் ரீதியாக மூளையில் உறச்சாகத்தை எப்பவும் பீறிட்டு சுரக்கவைப்பது.தன்னை பலகோணத்தில் காணவைப்பது  . பலரின் கண்களில் தெரிவதின் விஷயத்திலுள்ள ,எண்ண ஓட்டங்களை கணிப்பது. அதில் நமக்கான எதிர்காலத்தை அவரது கண்களில் காண்பது இப்படி எல்லாவற்றுக்குமே ஒரு நோக்கமும் அடைதலும் தெரிவது . அரசியல் ஒரு திரளின் காதலைப்போல அதை பெற ஏதும் செய்யலாம் .

சுப்பாராயன் அன்று "எனக்கென எந்த திட்டமும் இல்லை" என்றபோது என்னை முழுமையாக ஒற்றுக்கொண்டார் . "அதனால்தான் என்னை ஒருவருக்கும் புரியவில்லை என்கிறார் . இதுதான் உன் பலம் " என்றார்.


பாலனுக்கு என்மீது இருந்த சிறு குழப்பமும் தீர்த்திருக்கும் என்று கூறி சிரித்தார் . என்னக்கு  உள்ளே ஒன்று உடைந்த மாதிரி இருந்தது . உண்மையாய் இருப்பதும் சிலசமயம் குற்றம் என்கிற புது பாடத்தை அன்று தெரிந்துகொன்டேன் . பாலனுடைய குழப்பம் எனக்கு அன்று புரியவில்லை ஆனால் அதை புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு நாள் வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக