ஶ்ரீ:
அடையாளமாதல் - 66
* தரிக்க இயலா சிரசு .
திரு.ப.சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 39
அரசியல் களம் - 18
1980 திமுக காங்கிரஸ் அமைச்சரவையை சண்முகம் கலைக்கத் தீர்மானித்த போதே , மரைகாரின் குறுக்குசால் ஓட்டும் திறனையும் அதற்கு விட்டில்பூச்சென கட்சிக்காரர்கள் இரையாவதையும் பலமுறை சந்தித்ததிரிந்தார் . அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட" குப்புறத்தள்ளுதல்" விளையாட்டு . அதற்கு மாற்று ஈடுடாக சிலரை தயாரித்து வைத்திருந்தார். அது ஜோசப் மரியதாஸ் , முத்தியால்பேட்டை பழனிராஜா மற்றும் சிலர்.
மரைக்கார் ரேணுகா அப்பாத்துரை மற்றும் சில சண்முகம் ஆதரவாளர்களை முன்பே ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக நிலைநிறுத்தியருந்தார். அவர்கள் சண்முகம் முடிவிற்கு முரண்பட்டனர் . ஆனால் ஒன்றும் செய்வதற்கற்றநிலையில் இருந்தது சண்முகம் ஆளுமை . இந்த விளையாட்டில் அரசியலுக்கு புதிதான ரேணுகா அப்பாதுரை முற்றாக ஒழிந்து போனார்.
இந்த சம்பவங்களை இங்கு பதிவதற்கு சில முக்கிய காரணிகளுள்ளது . ரேணுகா அப்பாத்துரை ஒரு சிறந்த கல்லூரி பேராசிரியை அவரை அரசியலில் அறிமுகப்படுத்தி கல்வி அமைச்சரளவிற்கு வளர்த்தெடுத்த சண்முகத்திற்கு அரசியல் கணக்குகளைத் தாண்டி உயர் விழுமியங்கள் இருந்தன .அதனாலேயே அவர் புது முயற்சிக்கு தயங்குவதல்லை .
உட்கட்சியில் மரைகார் ஓயாத குடைச்சலை தந்தாலும் . சண்முகத்தின் விழுமியங்களும், தன்மீதான நம்பிக்கையையும், தனக்கு கிடைத்த வாய்புகளிலெல்லாம் காலத்தில் நிற்கக்கூடிய தருணங்களாக உருவாக்குவதல் பேரார்வம் கொண்டிருந்தார்.எப்பேற்பட்ட முரணபட்ட தருணங்களையும் எதிர்கொள்ளம் துணிவில் அவர் மனது மையங்கொண்டிருந்தது .
எதிர்தரப்பின் அரசுசூழ்தல் நிகழும் களம் வரும்வரை தனக்கான பணியினை செய்து கொண்டிருப்பவர்களே தலவர்கள் என அறியப்படுகிறார்கள்.அதை விடுத்து மரைகாரின் அரசுசூழ்தல் முளையெடுப்பதை பற்றிய சிந்தனையிலேயே ஒரு திட்டம் முன்னெடுக்பட்டால் அதில் தன்னியல்பாக எழும் தன் தனியாளுமைகளுக்கு இடமேயில்லாமல் எதிர்தரப்பு ஆட்டத்தை மட்டுமே ஆடும் பதிலியாக உறுவெடுக்க நேரிடும் . பின்னர் அதுவே அவர்களுக்கென இருக்கும் ஆளுமை இழக்க வைக்கும்படி நேரிடும் .
அதேசமயம் அரசியலில் ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் இடமேயில்லை , எதுவும் நடக்கக கூடியதே ,என்பார் சண்முகம் . ஆகவே எதையும் எதிர்கொள்ளும் மனநிலையில் இருப்பதே உகந்தது என்பார்.ரேணுகா அப்பாத்துரை போன்றவர்கள் மரைகாரிடம் எளிதாக ஏமாந்து போனார்கள் . அப்போது சமன்செய்ய திமுக விலிருந்து கொண்டுவரப்பட்டவர் ஜோசப் மரியதாஸ் . அவரை அமைச்சர் வரை நகர்த்திக் கொண்டுவந்தவர் சண்முகம் , மரியதாஸ் மிக பெரிய பொருளியல் செல்வாக்குள்ள குடும்ப பிண்ணனியில் இருந்து வந்தவர் . அரசியல் திருகல்களை அறியாதவர் , மிக விரைவில் அதற்கு இரையனார் .
இந்த சூழலில்தான் இளைஞர் காங்கிரசின் தலைமைமாற்றம் வந்தது . அமைப்பு ஏறக்குறைய இரண்டாக பிளவுபட்டிருந்தது கண்ணனை சுற்றியிருந்த குறுங்குழுவின் மேலெழுந்த வன்மம் கண்ணனையும் தொடத்துவங்கியிருந்தது . அதனாலேயே அவர் முன்மொழிந்த தலைமையை எதிர்த்து மாற்றுத்தலைமை அறிவிக்கும் அளவிற்கு சூழல் உக்கிரமாக மாறியது .
அதுநாள்வரை கண்ணனுடன் பயணித்தவர்களில் அரசியலில் ஆதாயம் பெறவிழையும் குழுவின் நீட்சியே அவரின் எதிர்பணியும் , அது தங்களுக்கு அடக்கமான ஒருவரைத் தான் தேர்ந்தெடுக்கும் . பாலன் அப்படிப்பட்ட தேர்வாக இருக்கலாம் என இப்போது உணர்கிறேன் . அறிவிப்பு வெளிவர இருந்தசமயத்தில் கண்ணணனிடமிருந்த குறுங்குழு எவரையும் கண்ணனை நெருங்கவிடாத தால் ஏற்பட்ட கசப்பு ஒரு கட்டத்தில் அவருக்கு முற்றாக எதிர்த்து பகிரங்கமாக எழுந்தது .
இரண்டு அமைப்புமே மோதிக்கொள்ளும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தில்லியிருந்து வந்திருந்த அகில இந்தியப் பொதுச்செயளாலர் ஹரிபிரசாத் பெங்களூரைச் சேர்ந்தவர் ,தமிழ் சரளமாக தெரியும் என்பதால் . சாமாண்யத்தொண்டனின் குமுறல் அச்சரம்பிசகாது அவரை சென்றடைந்தது.
புதிய தலைமையை அறிவிக்க வந்தக்குழு முடிவை ஒத்திவைத்துவிட்டு அனைத்து தரப்பின் பிரதிநிகளை தில்லிக்கு வரசொல்லிவிட்டு நகர்ந்தது.
இது எதிர்பாராத திருப்பம் . கண்ணனுடைய அரசியல் பாணிக்கு அவரது களம் விடுத்த அறைகூவலை உதாசீனப்படுத்தினார் . ஏனெனில் அவர் ஒரு சர்வாதிகார மனப்போக்குற்றவர் , அத்தகையவர்களுடைய ஜனநாயக பண்பென்பதே என்பதே ஒருவித நடிப்பே .
தலைமை பாலனுக்கு கைமாறியது . சண்முகத்திற்கு இணையாக இயக்க உள்பூசலை திறமையாக சமாளித்து வெளிவரவேண்டிய வாய்ப்பு கைநழுவியது .அதுவே ஒருகால் அவருக்கு ஜனநாயக வெளிநிலையில் கட்சி அரசியலை எதிர்கொள்வதெப்படி எனக் கற்றுக்கொடுத்திருக்கலாம்.
அடையவேண்டியதை அடைந்தாகிவிட்டது , அடுத்த இலக்கென வரிப்பதற்கு இருக்வே இருக்கிறது முதலவர்பதவி. அது அவரை நோக்கி கண்சிமிட்டுவதாக கனவுகள் எழும்பத்துவங்கின . இனி செய்யவேண்டியது சட்மன்ற கடசிப்பணி . அது சட்டமன்ற உறுப்பினரை தன்பின்னே அனிவகுக்கச் செய்வது . அதற்கு மத்தியில் இளைஞர் இயக்கம் தன் கனியை கொடுத்தாகி விட்டபின் மரத்தை பேனுவது அவசியமற்றது எனத்தோனிப்போனது. அமைச்சர் பதவி கண்களை மறைத்திருந்தது.
அது முற்றிலும் தவறான கணக்கென அவருக்கு நிச்சயம் அது உணர்த்தியிருக்க வேண்டும் . ஆனால் காலம் கடந்துவிட்டது. தன்னுடைய தலைமையின் கவர்ச்சி என்கிற மாயையினால் கட்டுண்டதால் , அது செல்லுகிற இடத்திலெல்லாம் செல்லுபடியாகும் என்கிற கணக்கு பிறழ்ந்து போனது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக