ஶ்ரீ:
அடையாளமாதல் - 40
நடுநிசிக் கூட்டமும் ஆந்திரா பாடமும்
திரு.ப.சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 15
அரசியல் களம் - 16
மாநில இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் நான் நேரடியாக இனைந்தது 1985 வருடம் ,இந்தக் களேபரத்திற்கு பிற்பாடு . இது நட்க்கும்போது நான் என் தொகுதி அமைப்பில் சிறிய பொறுப்பில் இருந்தேன். அப்போதெல்லாம் மாநில அமைப்பு ஒருவித ரவுடி கூட்டம் போல உள்நுழைவது ஆபத்தானது .அன்று நிகழ்ந்தவைகளுக்கு நான் வெறும் பார்வையாளன் மட்டுமே .சண்முகத்திற்கு எதிரணியில் இருந்தேன்.இருந்தும், அன்று நடந்தது அப்போது அது ஒரு வீர சாகஸமாக என்னால் பார்க்கப்பட்டாலும் . ஐந்து வருடம் கழித்து 1985 நான் கண்ணனுடன் இணைவதை தவிற்த்து பாலன் தலைமையில் இணைந்ததற்கு அன்று கண்ணன் தலைமையில் நடந்த வெறியாட்டத்திற்கு முரண்பட்டுத்தான்.
நான் சண்முகத்திற்கு நெருக்கமானது 1994 ஆம் ஆண்டு. திரு.சண்முகம் என்னுடனான தனிப்பட்ட உரையாடல்களில் சொன்னது இந்தப் பதிவாக வார்க்கப்பட்டுள்ளது. அன்று நடந்த நிகழ்வை பல கோணத்தில் புரிந்து கொள்ளப்பட்டு உண்மையும், பிண்ணனிகளும் ,பிறழ்வுகளும் , வெற்றியும் தோல்விகளும் பிற்கால காங்கிரஸ் அமைப்பில் எவ்வாறு வளர்சிதைமாற்றமடைந்தது எனச் சொல்லவந்தது. பல கோணல்களுக்கு வித்திட்ட முதற்கோணல் இது ,என்பதால் என் பதிவை இங்கிருந்து துவங்குகிறேன். மற்றும் 1980 பல வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் பிறிதொரு காரணம்.
இரண்டுதரப்பிலும் நிறைய நடுநிசிக் கூட்டங்கள் நிறைய போடப்பட்டது . பொதுவாகவே இளைஞர்களுக்கு காவல்துறை என்றாலே ஒரு வெறுபெழுவது இயற்கையானது.அதற்கு நியாய சமாதான காரணம் சொல்லும் "பெருசுக்களை " காட்டிலும் அடிவாங்கிக் கொடுத்தாலும் வீதியில் இறங்கி உடன் நிற்கும் இளைஞர் அமைப்பின் மேல் அதற்கு எப்போதும் ஓரு ஈர்ப்பு . அதற்காகவே அது முரட்டு சுபாவம் கொண்ட இளைஞர்கள் உள்ளிழுக்கப்பட்டு அவர்களுக்கு சாதகமாக அமைப்பு வளர்த்தெடுக்கப்பட்டது . தாடிவைத்த முள்முகமும் முரட்டு கதராடையும் அதன் அகில இந்திய அடையாளமாக ரசிக்கப்பட்டது.
நாள் நெருங்க நெருங்க உஷ்ணம் கூடிக் கூடி வந்தது. காங்கிரஸ் அரசியலிலும் அது அசாதாரணமான சூழ்நிலையாக கணிக்கப்பட்டது. உட்கட்சி சிக்கலை இந்த அளவிற்கு கொண்டு செல்லவேண்டுமா என யோசித்தால்,அரசியலில் பிழைத்திருப்பது அவசியமாகிறது. ஒவ்வொரு தரப்பும் அதன் உச்சகட்ட வாய்ப்புகளை நோக்கியே தன்பயணத்தை அமைப்பது தவிற்கவியலாததாகிவிடுகிறது .இதை எதர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் இரண்டு தரப்பிற்குமே முக்கியமாக பட்டது ஒரு பெரிய முரண்நகை .
சண்முகம் தரப்பு இதை விரும்பாது தவிற்க நினைத்தாலும் மிதவாதிகள் இதிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். இரண்டு தரப்பு செய்திகளும் பரபரப்பாக வந்து கொண்டிருந்தது . சூம்பிக் கிடந்த காங்கிரஸ் இயக்கம்பெற துவங்கியதற்கு இதுவும் ஒரு மறைமுக காரணியாக இருந்தது என நினைக்கிறேன் . எங்கும் எவர்வாயிலும் இதுவே செய்தியானது . ஒரு களியாட்டு போல அனைவரும் எதிர்பார்க்க துவங்கினர் . ஒரு ஆதிவாசி அனைவருள்ளும் வண்மத்துடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான் போலும்.பிற கட்சிகளின் செயல்பாடு இதன் எதிர்நிற்க இயலாமல் சுருண்டன.காங்கிரஸ் பலம்பெறத்துவங்கியது போல தோற்றம் கொண்டதும் அணிகள் இருபக்கமும் திரளத்தொடங்கினர்.
ஆந்திரா காங்கிரஸ் கமிட்டியிலும் இதுபோன்ற சம்பவம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றபோது , கட்சிஅலுவலகம் ரணகளமாகியது அனைத்து முக்கிய தலைவர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர் . செய்தியின் வீர்யம் தில்லி தலைமையை எட்டியதும் , ரகளையில் ஈடுபட்டவரகளின் பெயர்களை தில்லி தலைமை கேட்டுப்பெற்றது. ஒழுங்கு நடவடிக்கைகை எடுக்கப்பட்டு அனைவரும் நீக்கபடுவார்கள் என்கிற எதிர்பார்பு தீவிரமடைய. தில்லி அந்த அனைவருக்கும் சீட் கொடுக்க சொல்லிவிட்டது நகைமுரண். இதற்குபின்னால் உள்ள அரசியல் கணக்குகளை தேர்தலரசியலை முடிவு செய்பவை. அந்த பாறாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 42 இல் 41 வெற்றிபெற்றது. ஆனால் அதனுடைய வெறுப்பும் கோபமும் 1983 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 294 தொகுதியில் 60 வெற்றிபெற்று அவமானகரமான தோல்வியை எதிர் கொண்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக