https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 27 ஏப்ரல், 2017

ஸ்வாத்யாயம் -1

ஸ்வாத்யாயம் -1


மம லாலப்யமாநஸ்ய புத்ரார்தம் நாஸ்தி வை ஸுகம்
ததர்தம் ஹயமேதேந யக்ஷ்யாமீதி மதிர்மம

- வால்மீகி ராமாயணம். I கருத்து முரண்பாடு கொண்டிருக்கும் இரு தரப்புமே தன்னிடம் உண்மை தகவல் இருப்பாக என்னுவதும் மாற்றுத்தரப்பு வாதங்கள் பொய் என்றும் அது தன்குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என நினைப்பது யதார்த்தமானது.ஆனால் இரண்டு தரப்பில் இருபதும் உண்மையே , நாம் கொண்டிருக்கும் உண்மையின் மறுபக்கம் அது, கூர்ந்து கேட்பதால் புதிய கோணம் கிடைக்கலாம். ஆனால் அதற்கு முன் சில அடிப்படை கருத்து  நிரவல்களும் மனச்சமாதானங்களும் தேவை.

அந்த நிரவல்கள் மேட்டை கரைத்து பள்ளத்தை நிரப்புகை . அதை வார்த்தைகளில் வாதத்தில் புரிந்து கொள்ளல் ஒருவரின் பழக்கத்தில் இல்லாது போனால் இந்த மன நிரவல் சாத்தியமில்லை அதை காலத்தின் வசம் ஒப்படைப்பது ஆகச்சிறந்தது

தத்துவங்கள் மொழியின் வடிவில் உள்ளது . அவற்றை மொழியில் இருந்து அனுபவமாக ஆக்கவில்லை என்றால் நமக்குக் கிடைப்பவை வெறும்  சொற் குவியல்களை . அவை நம் எண்ணப் புற்றிலிருந்து கிளம்பிய ஈசல் போன்றவை உண்மை எனும் சிறகு கொண்டு பறக்கத் தலைப்பட்டவை அவற்றை இழந்தால் வானத்தை இழந்து மண்ணில் ஊர்வன

காயை உணவாக ஆக்கும் நெருப்பில் உறைந்திருக்கும் அவ்வினிமை,எனில் கசந்த வாழ்வில் மனதில் நின்று எரியும் நெருப்பில் எங்கு எங்கனம் உறைந்திருக்கிறது அந்த இனிமை

கருத்தியலின் முரணியக்கம் மெல்ல பினைந்து உண்மைகள் மெல்ல மெல்லத்தான் வெளிவரும் காலமே அதை செய்யும் ஆனால் அதன் கால அளவுகள்  எப்போது நிர்ணயமாவதில்லை.

தன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம். தன்னுடைய ஆளுமைக்கும் தன் அடிப்படை இச்சைகளுக்கும் ஏற்பவே ஒருவனின் மனநிலைகளும் செயல்பாடுகளும் அமைகின்றன. எச்செயலில் தன் உள்ளார்ந்த ஆற்றல் முழுமையாக வெளிப்படுகிறது என்று ஒருவன் எண்ணுகிறானோ அதுவே அவனுடைய தன்னறம். அதில் ஈடுபட்டு, அதை வென்று, அதைக் கடந்து சென்றுதான் ஒருவன் தன் விடுதலையை அடைய இயலும்.


தன்னறம் எதுவென்று அறியாத ஒருவன் இருக்க இயலாது. மிக மிக இளம் வயதிலேயே ஒருவனின் ருசிகள் அதில் சென்று படிகின்றன. சூழலாலும் குலத்தாலும் கல்வியாலும் உருவாவது அல்ல அது. ஆனால் சூழலும் குலமும் கல்வியும் அதில்பெரும்பங்கு வகிக்கின்றன. நம் உள்ளார்ந்த ஒரு தேடல் பல திசைகளிலும் துழாவித்துழாவித் தேடி தனக்குரியதை சுட்டிக்காட்டி அதை எடுக்கத் தூண்டுகிறது . அப்பொருளை கண்டடையத் தவறினாலோ , எடுக்க மறுத்தாலொ அது அவன் வாழ்கையை நிறைவடைய விடுவதில்லை . அடைந்தாலும் அது வேறு வகைகளில் அவன் நிறைவடைவதற்கு விடுவதில்லை

என் வாழ்வில் இன்றுவரை எந்நிலையிலும் அலுப்பும் சலுப்பும் உருவாவதில்லை.காலசூழலில் சில சமயம்  நான் ஓய்ந்து இருப்பது உண்டு.பின் அதிலிருந்து மீலும்போது வாழ்வு ஒரு தொடர்ந்த களியாட்டமாக இருக்கும். என் வாழ்வு குறித்து எனக்கு ஒரு நிறைவு உணர்வு உள்ளது

நிம்மதியோ சுகமோ வெளியில் இருந்தோ , பிறர் கொடுப்பதிலிருந்தோ வரும் எனில் அது கிடக்கப்போவதில்லை என்பது சர்வ நிச்சயம் .அப்படியே அசல் காலம் அல்லது சிலரால் கடைத்தாலும் அது எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பதற்கு யாதொரு உத்திரவாதமும் இல்லை

மனமோ பிறந்தது முதல் இறுதி கணம்வரை அதை எப்போதும் நினைத்து ஏங்கிய வண்ணமே இருக்கிறது , என்பதை எங்கு எப்பொழுதும் எதற்கும் பறக்கும் மனிதர்களை பார்த்தாலே தெரிகிறது. அந்த நிம்மதியோ சுகமோ ஒருவனுக்கு அவனுள்ளேயிருந்தே கிடைக்கும் என்றால் . ஒருவேளை அது சாஸ்வதமாக கிடைக்க வாய்புகள் உண்டு

........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக