https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 21 (அரசியல் களம் - 15 உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமையும் -4)

ஶ்ரீ:


அடையாளமாதல் - 21
அரசியல் களம் - 15
உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமையும் -4



உட்கட்சி அரசியலில் தனிநபர் தீர்மானங்கள்  எதுவும் எப்போதும் முற்றிலும் சீரமைவதில்லை. முற்றமைதிக்குள்ளிருந்து ஒன்று முரண்கொண்டு எழுகிறது. ஏனெனில் வாழ்க்கை முன்னகர விழைகிறது. அந்த முரண் என்பது ஒரு முளைக்கணுஒவ்வொரு நிகழ்தருணத்திலும் வரும்தருணத்தின் விதை ஒளிந்துகொண்டிருப்பதை உணர்ந்துகொண்டால் போதும்என்கிறது வெண்முரசு.

அங்குதான் என் வருங்கால அரசியல் குரு திரு.சண்முகத்தை பார்த்தது . இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று அவருக்கு முற்றிலும் எதிர் வரிசையில் நான் நின்று கொண்டிருந்தேன் . அன்று மாலை தில்லியை சுற்றிவிட்டு ஊர் திரும்பினோம்.

அன்றெல்லாம் எதிலும் இலக்கென ஏதுமில்லாமல் அந்ததந்த கணங்களில் வாழ்ந்து நிகழ்வதை ரசித்தும் வருந்தியும் கசந்தும் கடந்தும் சென்று கொண்டிருந்த காலம். ஒன்று மட்டும் அன்று மூளையில் ஏறியது . பல லட்சம் பேருள்ள ஒரு மாநிலத்தின் பிரதிநிதிகளில் ஒருவன் என்பது என்னை எனக்கு அறிமுகப்படுத்தியது அந்த அகில இந்திய மாநாடு .

கணங்களாய் காலத்தில் இருப்பவை , வாழ்வில் சொட்டி அவற்றை நிகழ்வுகளாக சமைத்தபடியே இருக்கிறது. பலருக்கு வாழ்கை சிக்கலில்லாத நேர்கோடென துவக்கமும் முடிவும் கொண்டிருக்கும் சிலரை இரண்டிற்கும் இடையே நிறுத்தி இலக்கை இருபக்கமும் காட்டி குழப்பும்

வாழ்கையென்பது இலக்கை மட்டுமே கொண்ட களமல்ல எப்போதும் அதை நோக்கியே ஓடிக்கொண்டிருப்பதற்கு . இருக்கும் இடத்திலேயே தன்னடையே நிறைவை அளிப்பது . அதில் தன்னை மட்டுமே நினைத்திராது  மற்றவர்களுக்கும் இடமளிப்பது

பிறரை காட்டிலும் என் வாழ்கைப் பாதை மாறுபட்டது என்பதை  தமாமதமாகவே புரிந்து கொண்டேன். ஏறக்குறைய முற்றாக அது நின்ற பிறகே. வாழ்கைச்சுவையை இலக்காக கொண்டது என நினைக்கிறேன் . அதன் பாதையில் சந்தித்த ஊர்களை சில சமயம் கடப்பதுண்டு அவை பெரும் மாறுபாடுகளை அடைந்திருக்கும் . எனவே அவை புதியனவையாக முகம் காட்டி அதற்கான அறைகூவலை எனக்கு விடுப்தால் .


அன்று காலை பாலனிடமிருந்து அவசர கூடுகைக்கான செய்தி ஒன்று வந்தது . நான் அலுவலகம் சென்றடையும் முன்னரே முக்கியஸ்தர்கள் கூடியிருந்தார்கள். செய்தி இளைஞர் காங்கிரசின் உறுப்பினர் திரு.கந்தா அன்று காலை கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். அதற்கு அரசியல் ரீதியான எதிர்வினையாற்றுவது குறித்த கூட்டம் அது . பலர் பல வித கருத்துக்களை சொன்னார்கள் , என்னை பொருத்தவரை அவர் மாற்றனியிராக இருந்தாலும் கொலையுன்டதற்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட காரணிகள் இருந்தாலும் கூட அவர் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவரென்ரே எல்லோரும் அறிந்திருந்தனர். அதன் பொருப்பிள் உள்ளவர்களே அதற்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்பது என் எண்ணமாக இருந்தது , பாலனும் அதே எண்ணத்தில் இருந்தத்தால் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்க வேண்டும் என்றும் அதற்கு மாநில அளவிலான கடையடைப்பு சரியான செய்தியாக அனைவரையும் சென்றடையும் என கனிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்