https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 29 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 43 தனித்து அனுகும் வகை

ஶ்ரீ:




அடையாளமாதல் - 43
தனித்து அனுகும் வகை
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 16
அரசியல் களம் - 16



இதில் ஒரு சுவாரசியமான விஷயம் , ஒவ்வொரு முறையும் பொறுப்புகள் கொடுக்கப்படுகிற சமயங்களில் , சண்முகம் வீடு அதகளப்படும் . சாதாரணத் தொண்டர் கூட்டம் அலையலையாக வத்து உரத்தகுரலில் நியாயம் கேட்டு போடும் கூப்பாடுகளுக்கு பொறுமையிழக்காது அவர் சமாதனங்களை சொல்லிக்கொண்டே இருப்பது யாராலும் இயலாதது . ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து " ஆம் இங்கு அப்படித்தான் . உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் " என தொனிக்காத குரலில் வருவோர் போவோர்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே இருப்பார் . பார்பதற்கு ஆயாசமளிப்பது. அவை நியாயம் கோரி வரும் கூட்டங்கள். அசம்பாவிதங்களும் வன்முறைகளும் நிகழ்வதில்லை . சிலர் திட்டமிட்டு நிகழ்த்திய வன்முறை தனிப்பட்டவைகள்.

ஒரு தொண்டன் கேள்வி கேட்க கிராமத்திலிருந்து கிளம்பி வருகிறான் ,எது அவனை செலுத்துகிறது . போய் நேரில் கேட்க முடியும் என்கிற நம்பிக்கையும் அதற்கான சூழலும் வைத்திருப்பதுதானே காரணம். அது ஒரு தலைவனுக்கான பண்பு , சர்வாதிகாரமாக ஒன்று நிகழ்ந்துவிட்டதாக யாரும் நினைக்காதபடி அந்த பதில்கள் வந்தவண்ணம் இருக்கும் . இது உட்கட்சி ஜனநாயகத்தின் இன்னொரு முகம். இறுதியில் வந்தவர்கள் கோபம் தனிந்து டீ சப்பிட்டு வீடு திரும்பும் சந்தர்பங்களை நிறைய பார்த்திருக்கிறேன் .

கழுத்து நரம்பு புடைக்க கூக்குரலின் ஓசைகளுக்கு செவிகூர்வது சண்முகத்தின் பாணிகளில் ஒன்று . அவரின் சில முடிவுகள் நெறியற்றதாக இருப்பதுண்டு , அப்போது வந்தவரின் கைபிடித்து வேறு உத்தரவாதங்கள் வழங்கப்பட்டு சீர்செய்யப்பட்டுவிடும். இத்தகைய அனுகுமுறையால் பிறிந்து செல்வது முடிந்தவரை தவிற்கபடுகிறது

வந்தவனுடன் அனுக்கம் கூடுவதால் . அவர்களின் மீள் சந்திப்பு நிகழ்ந்தவண்ணமிருக்கும் . இது அவருக்கு அமர்ந்த இடத்திலிருந்தே என்ன நிகழ்கிறது என அறிந்து கொள்ளவும் . பிறர் என்ன மாதிரியாக இனி கட்சியின் வருங்காலம் நிகழும் என பேசப்படுவதையும் . தெரிந்து கொள்ள உதவும்

அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என அவருக்காக ஆயிரம் மூளைகள் யோசனை நிகழ்த்துவதால் , சிறந்ததை தெரிவு செய்தல் மூளையை சூடுபறக்க செய்யும் கணக்கீடுகளை எளிமைபடுத்தும். நிகழரசியலில் இந்த அனுகுமுறை போன்ற செறிவானது பிறிதொன்றில்லை . அது தொடர் வெற்றிகளை தந்துகொண்டேயிருப்பது.


கட்சியரசில் அமைப்பை அவர் அப்படி இரும்பு கோட்டையாக வார்த்தெடுத்திருந்தார் . இதன் அடிப்படையில் "சண்முகம் " என்கிறப் பெயர் எத்தரப்பினர் மனத்திலும் ஒரு நலுங்கலை எப்போதும் கொடுப்பது. கண்டிப்பான தோற்றமும், பேச்சும் நடவடிக்கையும் எவரையும் அவரை  அன்னார்ந்து பார்க்வைத்தது . அறுபது ஆண்டிற்கும் மேலாக புதுவை அரசியலில் அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர் , புதுவையில் இருந்த காலம்வரை வாடகைவீடட்டில் வாழ்ந்து இறுதிகாலத்தை காரைக்காலில் பூர்வீக வீட்டிலேயே கழித்தார் . அவரது எதிரிகள்கூட அவர்மீது கடைசீவரை எந்த குற்றச்சாட்டும் சொல்லவியலாதபடி திருமணமே செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாக வாழ்ந்து மண்மறைந்தவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்