https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 46 பல வண்ணமுக மனிதர்கள் -1

ஶ்ரீ:



அடையாளமாதல் - 46
பல வண்ணமுக மனிதர்கள் -1
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 19
அரசியல் களம் - 16





கண்ணன் அரசியல் வழிமுறைகள் எனக்கு உடன்பாடானதல்ல இருந்தும் அவர் தலைமையிலான இளைஞர் அமைப்பே மிகச் சரியாக பரிணமித்தது. அதன் தோல்வி ஆச்சர்யபட ஒன்றுமில்லை . அது ஒரு எளிய அரசியல் வளர்சிதைமாற்றக் கோட்பாடில் நிகழ கூடியதே. அது நிகழாது தடுத்து நிறுத்துவதில் அதனுடனான போராட்டத்தில்  "வெற்றியடைய முயல்வதே" அரசியல்

மாபெரும் இயற்கையின் நியதிகளை ஒரு நாளும் எவரும் வெற்றி கொள்ள இயலாது . அதில் முயன்று தோற்றதினாலே அவர்கள் மாபெரும் தலைவர்கள் காந்தி தொடங்கி சண்முகம் வரையில் .என்கிறபோது பிறிதொன்றென ஒன்றில்லை.

கோட்பாடுகளில்லா எதிரனியினர் நிழ்திய உட்கட்சி தாக்குதல் அதன் பாதையை மாற்றியது . புதுவை அரசியலையும் மாற்றி அமைத்தது. பலரை பல இடத்திற்கு பெயர வைத்தது . சிலருக்கு சிலகாலம் வெற்றியெனக் காட்டி மயக்கியது , ஆனால் அவர்களது கனவுகளில் கூட சிலவற்றை நிகழ்த்தாது, கொடுங்கனவுகளை காட்டியவண்ணமிருக்கிறது.

மேலிடப் பொறுப்பாளர் புதுவைக்கு வருவதற்கு முதல்நாள் இரவு . சணமுகத்திற்கு நம்பகமானவர் சொன்ன செய்தி, இளைஞர் காங்கிரசின் தாக்குதல் பற்றிய தகவல் உண்மை என்றும் தாக்குதல் நடைபெறுமிடம் கட்சி அலுவலகமல்ல . புதுவை எல்லையான ஜிப்மர் பகுதி. மேலிடப் பொறுப்பாளர்களுக்கு கொடுக்கபடவிருக்கும் வரவேற்ப்பின் போது , என்றதும் . எதிர் நடவடிக்கைகளில் மாற்றம் செய்யத்துவங்கினார்

இரண்டாம் அடுக்கு காவல்துறைவசம் , எனவே அதிகாலை முதலே அவர்கள் திட்டமிட்ட இடத்தில் பாதுகாப்பை பொறுப்பெடுத்துக்கொள்ள சொல்வது . அதிலொன்றும் சிக்கலில்லை . ஆனால் முதல் அடுக்கு சேவாதளத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது . உடனடி மாற்றம் செய்யவேண்டியது இந்த இடத்தில்தான் .

அதிலும பெரிய சிக்கல் இருப்பதாக தெரிவில்லை  மேலிடப் பொறுப்பாளர்களின் முன்புதான் தாக்குதல் கொடுக்கும் திட்டமென்றால் அவர்கள் அலுவலகம் வந்த பின்னரே அது துவங்கும் . இப்போது கடைசிநேர மாற்றத்தின் படி வரவேற்பிடத்தில் என்றால் . காவல்துறையை பயன்படுத்த முடியாது , சிக்கலாகிவிடும் யார்யாரெல்லம் அடிபடுவார்கள்  என சொல்லுவதற்கில்லை . மேலும் சொந்தக்கட்சிகாரர்கள் தாக்கப்படும் வாய்பை தன்னால் வேடிக்கை பார்கக இயலாது என சண்முகம் கடுமையாக எதிர்த்தார் .

மாற்று திட்டமாக சேவாதளத் தலைவர் முன்வைத்தது . சேவாதளத் தொண்டர்கள் சீருடையுடன் வரவேறப்பில் கலந்து கொள்வது . தாக்குதல் எழுந்தால் முறியடிப்பது . அப்படியின்றி வந்த செய்தி குழப்புவதற்கானது என்றால் கட்சி அலுவலகம்தான் அவர்களின் அடுத்த இலக்கு.

வரவேற்பிற்பு நிகழ குறைந்த பட்சம் இருபது நிமிடமாகும் அந்த இடைப்பட்டதாக உள்ள காலத்தில் வண்டிமூலமாக சேவாதளத் தொண்டர்களை அலுவலகம் கொண்டு சேர்த்து அவரவர்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிலைகொண்டு காத்திருப்பது என முடிவெடுக்கப்பட்டது .

சண்முகத்திற்கும் இது சரியென தோன்றவே அவர் மற்றைய விஷயங்களில் கவணத்தை குவிக்கத் தொடங்கினார் . தன் இருப்பிடம் திரும்பிய சேவாதளத் தலைவர் தொண்டரகளில் முக்கியஸ்தர்களை அழைத்து. புதிய தகவலும் தாக்குதல் திட்டமும் , எதிர்கொள்ளும் முறை மற்றும் தாக்குதலுக்கு யார் எங்கு நிலைகொள்ள வேண்டும் என் முடிவுசெய்யப்பட்டது

அவர்களுக்கு உத்தரவுகள் விசில் மூலம் விடப்படும் . விசில் செய்தி ஒரு முறை ஊதப்பட்டால் தாக்கத் தொடங்கவேண்டும் . நீண்ட விசில் ஊதப்பட்டால் அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் ஏறி அலுவலகம் திரும்ப வேண்டும் என உத்திரவு சொல்லி அனுப்பட்டது









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்