https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 27 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 35 சிக்கலும் தீர்வும் எழுச்சியும் - 4

ஶ்ரீ:


அடையாளமாதல் - 35
சிக்கலும் தீர்வும் எழுச்சியும் - 4
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 10
அரசியல் களம் - 16.தில்லியில் வெங்கட்ராமனை சந்தித்த சண்முகம் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மிக எளிமையானது. அதன் பலன் வெங்கட்ராமனுக்கு என்பதால் அவர் அதற்கு உடனே ஒப்புக் கொண்டதுடன் தான் இதற்கு என்றும் நன்றியுடன் இருப்தாக கூறினார் .

இந்திராகாந்தியை சந்தித்த சண்முகம் தன் திட்டத்தை செயல்படுத்த துவங்கினார். இத்தகைய திட்டமிடல் அவரின் சிறப்பம்சங்களில் ஒன்று. அது யாருக்கு சொல்லப்படுகிறதோ அது அவர் நலன்சார்ந்து எடுக்கப்பட்டதாக இருக்கும் . அதற்கு பிரதிபலனாக பயனடைந்தவர் சண்முகம் என்ன கேட்டாலும் செய்து தரும் மனநிலைக்கு வந்துவிடுவார்கள்.இதில் அவருக்கு இரட்டை லாபம் அத்துடன் . அவருக்கான செயல்திட்டம் அதனூடாக தானாகவே செயல்பாட்டிற்கு வந்துவிடும்.

இதில் சண்முகத்தின் பாணி வெளிப்படையாக இருக்கும் , அதில் மிக நேர்மையாக நடந்துகொள்வார் என்பதால் அவருக்கு அனைத்து கதவுகளும் எப்பொழுதும் திறக்கும்.

இந்திரகாந்தியிடம் சண்முகம் சொன்னது , திமுக கூட்டணி உடன்பாட்டிற்கு வரும் , ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது அதிமுக அரசு நீக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே. தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் மாநில கட்சிதலைவர்களால்  திமுக தலைமையை கையாள முடியாது. அவரை கையாளுவதற்கு பழைய தலைவர்களை உள்ளே கொண்டுவர வேண்டும் . வெங்கட்ராமன் போன்றவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சென்றால் நல்ல பலன் விளையும். கூட்டணி முடிவானால் வெங்கட்ராமனையே தமிழ்நாட்டிற்கும் புதுவைக்கும் மேலிட பார்வையாளராக நியமித்தால் குளறுபடியில்லாது செய்து முடிக்கலாம், என்று .

இந்திராகாந்தி கேட்ட ஓரே கேள்வி வெங்கட்ராமனை கொண்டுவர இயலுமா என்று . சண்முகம் ஒரு வார கால அவகாசம் கேட்டார் .ஆனால் மூன்றாம் நாளே வெங்கட்ராமனை இந்திராகாந்தி முன்பாக கொண்டு நிறுத்தினார் .

அன்று காலை வெங்கட்ராமன் வீட்டிற்கு  சண்முகம் சென்றபோது  அவர் உற்சாகமில்லாதது எழுந்து வந்தார் . தன்னுடைய அரசியல் வாழ்வு முடிவுற்றதாக அவர் நினைத்திருந்தார் . சண்முகம் சொன்ன "இந்திராகாந்தி அவரை சந்திக்க விரும்புகிறார் " என்கிற செய்தி அவரை துள்ளியெழ வைத்ததுடன் , மிக நெகிழ்ச்சியுடன் சண்முகத்தின் கரங்களை பற்றிக்கொண்டார்.

ஆனால் சிக்கல் . இன்னும் ஒருமணி நேரத்திற்குள் சந்தித்து விட வேண்டும் . இந்திராகாந்தி பதினைந்து நாள் மத்தியபிரதேச மாநில  சுற்றுபயணமாக செல்லவிருக்கிறார். அதற்கு முன் அவர்களது சந்திப்பு நிகழ்ந்துவிட வேண்டும் . இருவருக்கும் தெரியும் அரசியலில் பதினைந்து நாளென்பது மிக நீண்ட காலம் என்று.

வெங்கட்ராமன் வண்டி வெளியில் சென்றிருந்தது , திரும்ப இரண்டு மணிநேரமாகும் . இருவரும் அவசரமாக வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள் . அதற்குள்ளாக வாசலில் வந்த ஆட்டோவை சண்முகம் கை நீட்டி நிறுத்தினார். இருவரும் இந்திராகாந்தி வீட்டைநோக்கி புறப்பட்டனர் .அந்த ஆட்டோ பயணம் வெங்கட்ராமனை இந்தியாவின் நிதி அமைச்சர் தொடங்கி இந்திய குடியரசு தலைவர் வரை இட்டுச்சென்றது . சண்முகத்தை புதுவையின் அடுத்து முப்பத்தைந்து வருட காலம் சக்திமிக்க அரசியல்வாதியாக நிலைநிறுத்தியது.


இந்திய குடியரசு தலைவரான பின்னரும் அவர் சொன்னபடி சண்முகத்திற்கு தன் நன்றிக்கடனை செலுத்தியபடி இருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

  கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...