https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 39 சிக்கல் முகம்சூடல் - 3

ஶ்ரீ:


அடையாளமாதல் - 39
சிக்கல் முகம்சூடல் - 3
திரு..சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 14
அரசியல் களம் - 16.மேலிடப் பார்வையாளராக வெங்கட்ராமன் வர இருக்கிற செய்தியே பலருக்கு பலவித கலவையான மனோநிலையை கொடுத்து . சிலர் தமிழ்நாட்டுக்காரர், பேசுமெழியில் சிக்கலிருக்காது என்றனர்  , சிலர் பிராமணர்  ஜாக்கிரதையாக பேச வேண்டும் , சிலர் சண்முகம் ஆள் இவர். ஆகவே அவர்கை ஓங்கும். சிலர் தில்லி மேலிடத்திற்கு அறிவேயில்லை ஓடிப்போய் வந்தவனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும் என கட்சிக்குள் சலசலப்பு.

பரூக் தரப்பு மோப்பம் பிடித்துவிட்டதால் எதிர்வினைக்கான திட்டம் தீட்டப்பட்டது . அதை சமாளிக்க சண்முகம் தரப்பும் வரிந்து நிற்க , கட்சி அரசியல் களம் களைக்கட்ட தொடங்கியது. அரசியல் காய் நகர்த்தளில் சண்முகம் அனுபவம் நிறைந்தவர் . அதில் அவருக்கான பாணி, தனித்துவமானவை

அந்தவழிமுறை தலைமைப் பொறுப்பை ஆளும் அமைப்பிற்கானது அவருக்கு சரியானது , சாதகமானது  . ஆனால் எதிர்தரப்பிற்கு அது ஒத்துவராதது . காரணம் மேலிடத்திலிருந்து வருபவருக்கு இரண்டு வாய்ப்புகள் . ஒன்று;இரு தரப்பையும் உட்காரவைத்து பேச்சுவார்த்தைகளால் முடிவு செய்யலாம் அல்லது தில்லிக்கு எடுத்துச் செல்வது. அப்படி விஷயம் தில்லிக்கு சென்றுவிட்டால் மேலிட பொருப்பாளர் வெங்கட்ராமனுமே ஒரு தரப்பாகத்தான் பார்க்கப்படுவார்.

ஆளும் தரப்பிற்கு இங்கு நடக்கும் பேச்சுவார்த்தையில் தான் உடன்பாடு. எக்காரணம் கொண்டும் தில்லிக்கு செல்வதென்பது கூடாது. எதிர்தரப்பிற்கு எவ்வகையிலாவது இதை தில்லிவரை நகர்த்தி சென்றேயாக வேண்டும் . அங்கு நடக்கும் பேச்சுவார்த்தைகளில் இங்கு பேசுவதுவிட நம்பகத்தன்மை அதிகம் . மேலும் லாபிகள் மூலம் இணையான பேரம்பேசும் நிலையை அடையலாம் அதை  தக்கவைத்துக்கொள்ளலாம் .

சண்முகம் தரப்பினர் சுமூக அரசுசூழ்தல் மூலம் வெற்றிபெற காய்நகர்த்த . பரூக் தரப்பினர்  முதல்நிலையிலேயை வன்முறைமூலம் இங்கு பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லாத சூழலை உருவாக்கிவிட முடிவெடுத்தனர் . அவர்களுக்காக இளைஞர் காங்கிரஸ் அதை முன்னெடுக்கும் . அது தடுக்கமுடியாத அமைப்பு மேலும் சிக்கலெழுந்தால் இந்தியா முழுவதும் நடப்பது இங்கும் நடந்ததாகிவிடும் .பரூக் இதற்கு பதில் சொல்லவேண்டியிராது.

மேற்கு வங்கத்தில் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் "மம்தா பேனர்ஜி" தலைமையில் நடந்த வெறியாட்டம் ,புதுவை இளைஞர் காங்கிரசுக்கு முன்னுதாரமாகியது .


சண்முகம் தரப்பும் தன் பாதுகாப்பு இயக்கமான சேவாதளம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டது அனைத்து தரப்பினரும் அந்த நாளை நோக்கி உச்சகட்டமான பதட்டம் கொள்ளத் துவங்கினர் . காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு பலத்த  இரண்டு கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டது. அலுவலக உளவட்டத்தை சேவாதளமும் . அலுவலக நுழைவுவாயில் மற்றும் தெருமுனைப் பாதுகாப்பு காவல்துறை வசமும் ஒப்படைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக