https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அடையாளமாதல் - 22 (அரசியல் களம் - 15 உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமையும் -5)

ஶ்ரீ:

அடையாளமாதல் - 22
அரசியல் களம் - 15
உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமையும் -5


அன்று மாலையே அது அதிரடி செய்தியாக எங்கும் மின்னியது. முதல் முறையாக கொலையான இடத்தையும் , உடலையும் பார்வையிடச் சென்றது ஒருவகையில் திகிலாக இருந்தது . பல ஊர்களில் இருந்தும் நண்பர்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர் . முதல் முறையாக அதன் தொண்டர் பலத்தை கண்டது அன்றுதான் . இரவு நெடுநேரம் பந்த் தோல்வியடையாதிருக்க என்னவெல்லாம் செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது . காங்கிரஸ் ஒரு பலமான கட்சியாக புதுவையில் இருந்தாலும் . இது இளைஞர் காங்கிரசின் தனிப்பட்ட செல்வாக்கை நிரூபிக்கும் போராட்டம் என்பதால் தீவிர நடவடிக்கை அனைத்து பகுதிகளிலும் எடுக்கப்பட்டது.

அது ஒரு உச்சகட்டமான முயற்சியாக இரவெல்லாம் நீடித்தது . புதுவையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வெவேறு செயளாலர்கள் பொருப்பாளர்களாக நியமிகப்பட்டனர் . அனைத்து பணிகளையும் கண்காணிக்க பாலனும் நானும் தனியாக இரவு ஒன்பது மணிக்கு மேல் புறபட்டோம் . அந்த ஏறபாடுகள் முழுவதும் ரகஸிமானது . பலதரப்பட்ட நண்பர்களை இரவுகளில் அவர்களது பகுதிகளிலே சந்திக்க செல்வது உற்சாகமானது , அதே சமயம் அவர்களுடனான உறவு நமக்கு மிக நெருக்கத்தை ஏற்படுத்துவது. அனைத்து பகுதி நண்பர்களும் எனக்கு தனிப்பட்ட முறையிலே நெருக்கமானது இந்த சந்தர்பத்தில். இரவு பாலனை அவர் வீட்டில் விட்டு நானே வீடு திரும்ப பின்னிரவு இரண்டு மணிக்கு மேலாகிவிட்டது.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்ததும் தேர்தல் முடிவை எதிர்நோக்குவதைப் போல ஒரு பதட்டம் இயல்பாக எழுந்தது . கட்சி அலுவலகத்தை அடைந்தபோது காலை ஆறு மணி . அனைத்து பிரதான சாலைகளும் வெரிச்சோடிக் கிடந்தது . பால் வண்டி வந்துபோன செய்தி சொல்லப்பட்டது . மாலை வராது என்று அவர்களுக்கு அறிவுறுத்ப்பட்டதாக அறிந்தபோது பந்த் வெற்றிபெறும் நம்பிக்கை துளிர்த்தது.

இறந்த தொண்டரின் தகனம் மாலை ஐந்து மணிக்கு . அடுத்த சவால் மாலைவரை .அவரது வீடு இருந்த இடம் மிகப் பதட்டமான பகுதி காலை முதலே காவல்துறை தன் வசம் எடுத்துக் கொண்டது , இருந்தும் அரைமணிக்கொரு சண்டை நடந்து கொண்டேயிருந்தது . அரசியல் கொலை நம்மை பெரிதும் பாதிப்பவை .

நானும் பாலனும் என் வண்டியில் அங்கு சென்ற போது மீண்டும் கலவரம் வெடிப்பதற்கான சூழல் மிக அருகில் இருந்தது . அந்தப் பகுதியில் கடந்த பத்து வருடத்திற்கு மேலாக பல அரசியல் கொலைகள் ஒன்றையடுத்து ஒன்று நிகழ்ந்தவண்ணம் இருந்தது . எப்போதுமே இரு தரப்பினர் வாக்கு வங்கி கணக்கில் ஏற்படும் பாதிப்பை கொலையில் சரி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்

நாங்கள் தேர்தலரசியலை நோக்கி சென்று கொண்டிருந்த நேரம் இது தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் முகமாக முன்னெடுக்கப்பட்டது . தொகுதி அரசியலுக்கும் எங்களுக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை . அவர்கள் பார்வையில் நாங்கள் கோமாளிகளாக கூட தெனபட்டிருக்கலாம்.ஆனால் அணிசார்பாக எடுக்கும் நடவடிக்களுக்கும் கட்சிசார்ந்து இருப்பதற்கும் பெரிய வித்தியசமுண்டு .

இந்த முறை சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் வெற்றி ஒரு காரணமாக சொல்லப்பட்டது . இறந்த தொண்டன் திரு. கண்ணன் அவர்களுக்கு மிக அனுக்கமானவன் , தவிர அவன் எங்கள் அணியைசாரதவன் . அன்று இளைஞர் காங்கிரஸ் இயக்கம் கண்ணனுக்கு எதிராகவும் இருந்தது . தொண்டர் பலத்தை நிலைநாட்ட பாலன் எடுத்த இந்த முடிவு இயக்கத்தில் உள்ள சிலருக்கு விருப்மில்லாது என்றலும் .அரசியல் ரீதியில் இது ஒரு சரியான முடிவுதான்.

யார் என்ன சொன்னாலும் ஒரு உயிரிழப்பு கண்டிக்கத்தக்கது என்பதை குறுகிய அரசியலில் இருந்து வெளிவந்து சொல்வதற்கு ஒரு திராணிவேண்டும் . அந்த வஷயத்தில் எங்கள் நடவடிக்கை சரியனது என்றே இப்போதும் கருதுகிறேன் 

தகனத்திற்கு முன்பாக அசம்பாவிதம் ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு இளைஞர் காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டிவரும் அதற்கான விலையை கொடுக்கும் இடத்தில் அது இல்லை. இருப்பினும் களத்தில் உணர்வுகளே பெறிதும் பேசப்படுகவை . புத்திபூர்வ காய்நகர்த்தல் போன்றவைகளுக்கு களத்தில் இடமில்லை


எங்கிருந்து கத்தி எவர்மேல் பாயும் என்பதை கணிக்கவியலாது மாலை ஐந்து மணிவரை காத்திருப்பது நெருப்பில் நிற்பதாக இருந்தது . திரு.கண்ணன் வரும்போது அவருடைய அனியிலே கூட பிரிவுகள் இருப்பதை காணமுடிந்தது . பாலனிடம் அது பற்றி காதில் ரகசியமாக சொன்னபோது , அதை உண்மையாவென அறிய முயற்சிகள் தொடங்கின . அரைமணிக்குள் அது உண்மை எனத் தெரியவந்ததும் , அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...