ஶ்ரீ:
அடையாளமாதல் - 18
அரசியல் களம் - 15
பொருளியல் சுதந்திரம் உள்ளவர்களுக்கே வசப்படும் வானமல்ல அரசியல் . அதைக்கொண்டு அவர்கள் எவரையும் புறந்தள்ளி முன்னிற்கலாம் தருக்கி நிமிரலாம் ,ஆனால் இயல்பாக கீழிருந்து மேல் வந்தவன் என்றும் தனித்தே தெரிந்தான் .
அது ஒரு நெருப்பு போல எரிந்து கொண்டே இருப்பது . அரசியல் புளிச்சேப்பக்காரர்களுக்கானது அல்ல ஆனால் அது அவர்கள் கைகளில்தான் விழுந்தது கிடக்கிறது . அது முரண்களின் சரடு . நீ என்ன எதிர்வினை புரிந்து அதை முரணியக்கமாக்கினாய் அதை குறை கூற ?.
அரசியலை உற்று நோக்கினால் அதற்கு பாதைகள் இரண்டு பிரிவாக விரியும் .ஒன்று தேர்தலரசியலை நோக்கியது அது நான், தான், தான் மட்டுமே என்பதால் ஆனது . மற்றொன்று கட்சி அரசியலுக்குள் நுழைவது .அது சித்தாந்த ரீதியானது . எங்கும் அரசியல் பிழைத்திருப்பது இதை நம்பியே . ஆனால் அதற்கான நுழைவுரிமை இன்று எந்த மாநிலக்கட்சியும் தருவதில்லை. மாநில மற்றும் அகில இந்திய கட்சிகளில் உள்ள பெரும் வேறுபாடாக இதைப் பார்க்கிறேன் .
அடிமைகளின் கட்சி என பல ஆண்டுகளாக கூப்பாடு போடாத மாநில கட்சியில்லை . இன்று அங்கெல்லாம் "காலில் விழுவர்" அமைப்பாகவே அது காணப்படுகிறது . இதற்கு அகில இந்திய கட்சிகள் பரவாயில்லை என்பதே நிதர்சணம் .
இவர்கள் இரு கூறானவர்கள் எங்கும் எதிலும் இனையாதவர்கள் . தேர்தல் அரசியலை பாதையாக கொண்டவர்கள் அது எங்கு எது சாத்தியபடுமோ அதை நோக்கியே நகரும் போக்குள்ளவர் . எந்த கட்சியின் சித்தாந்திற்குள்ளும் புகாதவர்கள் , அதிகாரம் ஒன்றையே இலக்காக உள்ளவர்கள் , கட்சி இவர்களுக்கு பதவி தரவல்ல ஒரு காரணிமட்டுமே அதற்குமேல் அவர்களுக்கு அது ஒன்றுமில்லை . எல்லாகட்சியிலேயும் நிலை அவ்விதமே
கட்சி அரசியலை பாதையாக கொண்டவர்கள் சித்தாந்த ரீதியில் அதை அனுகுபவர்கள் , தொலைநோக்கு பார்வையும் அதற்கான உழைப்பும் நம்பிக்கைகளின் விசையாலே உந்தப்படுபவர்கள். ஒருங்கிணைக்கும் ஆற்றல் உள்ளவர்கள். தொண்டர் பலத்தினால் தேர்தல் அரசியலுக்குள் நுழைபவர்கள் . ஆனால் தேர்தல் அரசிலை முகாந்திரமாக உள்ளவர்கள் ஒருநாளும் கட்சி அரசியலில் நுழையமாட்டார்கள் அவர்களுக்கு அது சாத்தியமுமில்லை , தேவையற்றதும் கூட.
கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாகவே கட்சி அரசியலாளர்கள் புறந்தள்ளப்பட்டு தேர்தலரசியலாளர்கள் அந்த இடத்தை நிரப்பத் தொடங்கிவிட்டதாலேயே அது இன்று நாம் காணும் அரசியலாக முடைநாற்றமடிக்கத் துவங்கி விட்டது . இது புரிந்து கொள்ளக்கூடியதே கட்சி அரசியலின் வழியாக தேர்தலரசியலில் நுழைந்து முகமிழந்தவர்களும் உண்டு , ஆனால் அவர்களிடம் கட்சி சித்தாந்தம் கொச்சமாவது மிச்சமிருக்கும் . ஆனால் தேர்தலரசியளாலர்களிடம் அதை எதிர் பார்க்கவியலாது.
நடைமுறையில் , கட்சியரசியளார்களின் இடம் தேர்தலரசியளாலர்களிடம் பறிபோய் பல்லாண்டுகளாகி விட்டது . சட்டசபைக்குள் நுழைந்த ஒருவரிடம் கட்சியைபற்றி பேசுவதைக்காட்டிலும் மெண்ணைத்தனம் பிறிதொன்றில்லை . அரசியல் வெளியில் காணும் ஒருவரை அவருடைய அடையாளங்களுடன் சட்டமன்றத்தின் உள்ளேயும் காணலாம் என்பது பிறிதொரு மொண்ணைத்தனம் .
அங்கு கட்சி மட்டுமல்ல முக பாகுபாடுகள் ஏதுமின்றி அனைவரும் ஒன்றென , ஒன்றேய்யான திரளென இருப்பார்கள் .கட்சியரசியில் ஈடுபாடுடைய ஒருவர் சட்டமன்றத்தை வேடிக்கை பார்க்க சென்றார் என்றால் அவருக்கு அது பேரதிர்ச்சி தருவதாக இருக்கும் , சுயலாபத்திற்கு அங்கு அனைத்து வித விழுமியங்கள் விலைபோனதைக் காண நேரும். மரணத்திற்கினையாக திக்பிரம்மை அடைந்தவராக திருப்புவர் பின் எங்கும் எதிலும் முயங்கவியலாதவராகி விடுவர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக