https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 27 ஏப்ரல், 2017

ஸ்வாத்யாயம் - 3


ஸ்வாத்யாயம் - 3


மம லாலப்யமாநஸ்ய புத்ரார்தம் நாஸ்தி வை ஸுகம் 
ததர்தம் ஹயமேதேந யக்ஷ்யாமீதி மதிர்மம 

வால்மீகி ராமாயணம்.







பண்பாடு உடையவன் பிறர் புண்பட்டுவிடுவார்களோ என்ற நிரந்தர அச்சத்துடனேயே ஒரு சொல் எடுத்து வைக்கையில பிறர் எந்த வித நிர்பந்தமும் இன்றி எண்ணியது சொல்மாறாது வைத்துச் செல்கிறார் . அவனது அச்சம் பொருளிழந்து போவதுடன் இதற்கான ஒரு நெறியை கண்டடையும் பொருட்டு சித்தத்தை தடவுதல் அன்றி அவன் ஆற்றக்கூடியது பிறிதொன்றில்லை . அதுவும் சிந்தனை பெருக்கிற்க உதவுவதே

இன்னொருவர் புண்படாதபடி பேசுதல் ஒரு உயர்ந்த பண்பாடே. ஆனால் உண்மையையோ அல்லது நாம் நம்புவதையோ பேசாமல் இருத்தல் அறிந்து கொள்ளுதலில் இருந்து நம்மைத் தேக்கம் கொள்ளச் செய்துவிடும் . இந்த ஜாக்கிரதை உணர்வுடன் பூசப்பட்ட மொழியில் மட்டுப்படுத்திச் சொன்னால் ஒன்று அது வெண்ணை எடுக்கப்பட்ட நீராக சுரத்தற்று இருக்கிறது அல்லது சாரத்தின் ஒரு துளியே கடத்தப்படுகிறது, எனவே தக்க பதில் சாத்தியமாவதில்லை .

எதிர்மறை விமர்சனம் பற்றிக் கேட்கவே வேண்டாம் நம்முடன் உண்டான உறவையே முறித்துக்கொள்வர். அவர்கள் அறிவு ஜீவிகள் . ஊழ் ,நான் உண்மையில் பெரியவன், இந்த எளிய கேலிகள் என் பெருமைக்கு உண்மையில் நிறைசேர்ப்பவை என்ற எண்ணத்திற்கு ஏதாவதொரு கீதா ஸ்லோகம் கிடைக்காமலா போய்விடும் .நாம் ஒரு உப்புச்சப்பற்ற சமூகத்தில் மந்தமாக உழன்று கொண்டிருக்கிறோம்.

மனமும் புண்படாமல், அறிதலில் தேக்கமும் ஏற்படாமல் ஒரு தரமான உரையாடலையோ விவாதத்தையோ எவ்வகையிலும்  சாத்தியப்படுத்துவது இயலாது . முயற்சித்தால் , அதை நேரடி அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்வாரகள். வசையாக, விமர்சனமாக, அல்லது தகவலாக


பி.கு.
நன்றி என் ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்