https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 3 நவம்பர், 2019

அடையாளமாதல் - 482 * வகை விளையாட்டு *


ஶ்ரீ:


அடையாளமாதல் - 482

பதிவு : 482 / 668 / தேதி 03 நவம்பர் 2019

* வகை விளையாட்டு


ஆழுள்ளம் ” - 02
தத்துவ தரிசனம் - 03




ஆழுள்ளத்தை நெருங்க மொழியாளுமை சிறந்த கருவியாக உணர்ந்தபோது , ஜெயமோகனின் ஆக்கங்களை வாசிப்பதும் அதன் சொல்லாட்சி எனக்குள் நிகழ்த்தும் புரிதலினூடாக என் மொழியை செம்மையாக்க முயற்சித்த அதே வேளை அது நான் அவருடன் தினமும் உரையாடும் உணர்வினை உருவாக்கிக் கொடுத்தது  . அவரது ஆழுள்ளமும் தொழில்நுட்பமான எழுத்து முறையும் அந்த ஆச்சர்யத்தை நிகழ்த்தி இருந்தது . அதன் மூலம் அவரது உலகை நெருங்கும் உணர்வையும் அதிலிருந்து உவகையும் அடைந்திருக்கிறேன்

சில மாதங்களுக்கு முன்பாக அவருக்கு எழுதிய கடித்தத்தில் நான் உணரும் எனது அகப் பயணத்தை பற்றியும் அதிலிருந்து நான் பெற்ற உணர்வினை குறிப்பிட்டிருந்தேன் . அவரும் தனது பதிலில்உங்கள் பயணத்தைப்பற்றிய சித்திரம் எனக்கு அணுக்கமானதாக இருந்தது. நான் வாசித்ததும் இப்படித்தான் என்றுதான் சொல்லவேண்டும். முரண்படுதல், குழம்புதல், மேலும் சற்று முன்னகர்தல் என்றுதான் நானும் சென்றுகொண்டிருக்கிறேன். நீங்கள் உடன்வரும் உணர்வு எனக்கு ஏற்படுகிறது , என சொன்னபோது நான் அதை ஆச்சர்யமாக உணரவில்லை

இது சட்டென நிகழ்ந்ததில்லை . என் நினைவு தெரிந்த நாள் முதல் நான் அப்படித்தான் இருந்திருக்கிறேன் . நான் மிக மிக அனுக்கமாக உணரும் எவரிடத்தும் அதை உணர்ந்திருக்கிறேன் . தலைவர் சண்முகத்திடம்தான் அதை முதலில் வெளிப்படையாக அறிந்தேன்  . பல சிக்கல்களில் அவரிடம் எந்த உரையாடலும் இல்லாமல் அவர் இதில் இப்படித்தான் முடிவெடுப்பார் என உணர்ந்ததும் அதை செய்ய துவங்கிவிடுவேன் . அது ஒருநாளும் பிழையாக ஆனதில்லை.அவ்விதம் உணர்வதற்கு சரியான விளக்கம் நான் ஜெயமோகனிடமிருந்து பெற்றுக் கொண்டேன் .

இன்று எதை குறித்து சிந்திக்கிறேனோ , எதை எனது வலைப்பூ தளத்தில் பதிவிட முயலகிறேனோ அதை குறித்த அவரது கூரிய கருத்துக்களை சில நாட்களுக்குள் அவரது வலைத்தளப் பகுதியில் சிறு செய்தி அல்லது துணுக்கை கண்டடைந்து விடுவேன் . அதை எனது பதிவினூடாக வெளியிட்டிருக்கிறன்

வெண்முரசில் என் ஆழுள்ளம் ஏற்க மறுக்கும் ஒரு கூற்று நிகழும் போது முன்பு போல அலைகழியாது அமைதியாக , அது சம்பந்தபட்ட பிறிதொரு பதிவை நோக்கி காத்திருக்க முடிந்தது. சில நாட்கள் கழித்து அதற்கு உகந்த பிறிதொரு கூற்றை அடையும் போது அவரை இன்னும் அனுக்கமாக உணரச்செய்வது .

ஆன்மீகத்திலிருந்து மெய்மையின் தேடலுக்கான கருவி தத்துவ கோட்பாடுகள் என வரையறுத்துக் கொண்டால் அது  இந்து ஞான மரபிற்கு இட்டுச் செல்லும் பாதையாக இருக்கக்கூடும் . காரணம்தத்துவம் என்பது அனைத்து அறிவுத் துறைகளிலும் உள்ள தருக்கங்களின் தொகுப்பு.” தரிசனங்களின் தொகுப்புதான், மெய்ஞான மரபு என்பதும் ஜெயமோகனின் அறுதியான கருத்துகள் . என்கிறார்இந்து ஞான மரபின் ஆறுதரிசனங்கள் நூலின் தனது அணிந்துரையில் திரு. சோதிப்பிரகாசம்

மனத்தின் விடுதலையைத் தரிசனம் என்பதா? அல்லது தருக்கம் என்பதா? இந்தக் கேள்விக்கு ஜெயமோகன்தாம் விடை கூறிடவேண்டும். எனகிறார் . எனக்குதரிசனம்என்றே தோன்றுகிறது . மனதின் விடுதலையை எதைக் கொண்டு நிர்ணயம் செய்வது என்பது கேள்வியாகும் போது , அது உலகியலில் இருந்து மேம்பட்ட இடத்தை நோக்கியதாக இல்லாமல் போனால் , இன்று அர்த்தமாகி நாளை அதன் சாரமிழந்து போகும் உலகியலில் அதற்கு பொருளில்லை என்றே உணர்கிறேன் . மார்க்சீயர்களுக்கு அதை தாண்டும் ஓடம் கிடைக்கப்போவதில்லை.

எனக்குள் மிக அனுக்கமாக உணரும் ஜெயமோகனையும் அவரது எழுத்தையும் கொண்டு அவரது உலகில் பிரவேசிக்கும் ஒரு யுக்தி அவரது எழுத்துக்களின் கருத்தை அடைவது , அவரை அடைவது என இரண்டாக பிரித்து கொண்டபோது அவரது கருத்தியல்களால் நான் சீண்டப்படாமல் அதை கொண்டு அவரை நெருங்க முயன்று கொண்டிருந்தேன் 

இந்த சிந்தனை எழுந்து வந்தபோது அவரது கோட்டோவியம் போன்ற அவரை பற்றிய கருத்தியல் . அதை  எனக்கு முதலில் உருவாக்கிக் கொடுத்தது அவரது கேள்வி பதில் பகுதி . காரணம் அவரது பிற ஆக்கங்களில் அவர் நிகழ்த்தும் தன்னை மறைந்தும் , மறுத்தும் வேறுவிதமாக புரிந்து கொள்ள வைக்கும்  ஒரு வகை விளையாட்டிற்கு அங்கு இடமில்லை . கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லியாக வேண்டி கட்டாயமுள்ளது . அங்கு அவரது மையக் கருத்தியல் எந்த ஜோடனையற்று நின்று கொண்டிருப்பது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக