https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 8 நவம்பர், 2019

அடையாளமாதல் - 484 * புரிதலும் திறப்பும் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 484

பதிவு : 484 / 670 / தேதி 08 நவம்பர் 2019

* புரிதலும் திறப்பும்


ஆழுள்ளம் ” - 02
தத்துவ தரிசனம் - 05
வரிசைக்கிரமமாக அனுபவங்களையும் அதிலிருந்து கிடைத்த புரிதல்களை சொல்லிச் சென்றாலும், அவை ஊடாக கவளபாய்வதை தவிர்க்க முடிவதில்லை.அடுத்தடுத்த உளப்பதிவுகளை இடும் போது , நான் நினைத்த விஷயங்களுக்கு மத்தியில் அந்த நிமிட உணர்வே முக்கியத்துவம் வாய்ந்ததாக தோன்றி அவை பதிவுகளின்  ஒழுக்கை  மடைமாற்றி விடுகிறன்றன

இந்தப் பதிவுகளின் நோக்கம் பற்றி பல முறை சொன்னதுதான் என்றாலும் , அதன் முக்கிய காரணமாக நான் நினைப்பது எனக்கு அகமும் புறமுமாக நிகழ்ந்த நிகழ்வுகளில் இருந்து நான் அடைந்த புரிதலும் அதிலிருந்த கிளைத்த திறப்புகள் . அவற்றிலிருந்து என் வாழ்வியலுக்கான மெய்மையை கண்டடைவது .  அனுபவங்களில் இருந்து கிடைத்த செய்திகள் மனதிற்குள் சிதறிக் கிடக்கின்றன '  .அவற்றை மெய்மை என்கிற சரடில் கோர்க்க , அவைகளை இந்த வலைதளத்தில் எழுதி பார்க்க முயல்கிறேன் . அதிலிருந்து கிடைக்கும்  தகவல்கள் என் மெய்மைக்கான திறவுகோளாகும் வாய்ப்பை நெருங்க முயல்கிறேன்

வாசிப்பும் , அதை ஒட்டிய சிந்தனையும் மெய்மைக்கு ஆதாரமானவை  , ஆரம்பம் முதலாக பல நூல்களில் இருந்து அவற்றை திரட்ட முயல்வது என்வரையில் இயாலாதது என புரிந்திருக்கிறேன் . தகவல் திரட்டு ஒரு குழப்பத்தில் இருந்து பிறிதொன்றுக்குள் நுழைவது .என் அகத்திற்கு  அது எப்போதும் உகப்பதில்லை . கருத்துக்களை தேடி அலைவதை விடுத்து அதற்காக அலைபவருக்குள் நிகழ்வதை அவதானிப்பது ஆகச் சிறந்தது என நினைக்கிறேன். அதுவும் எழுதி குவிப்பவர் அமைவது நல்லூழ்  . அது தினம் அவருடன் உரையாட , அவருக்குள் நிகழ்வதை அவர் எழத்தில் சொன்னதை  புரிந்து கொள்வதை விட சொல்ல விழைந்தவைகளில்  இருந்து புரிந்து கொள்வது எனக்கு எப்போதும் விருப்பமானது .அது ஒருவரை தொடர்ந்து பின் செல்வதால் நிகழ்வது .அதன் பொருட்டு ஜெயமோகனை பின்தொடர முடிவெடுத்தேன் 

பின்தொடருதலின் ஆகப் பெரும் சிக்கல் இரண்டு , ஒன்று : நம் எண்ணத்தை அவற்றில் ஏற்றி புரிந்து கொள்வது . இரண்டு அவற்றில் சொன்னவற்றை ஏற்று நமக்குள் உடனடி மாற்றங்களை செய்து கொள்வது இரண்டும் ஒரே முனைக்கு இட்டுச்செல்வது. ஒரு புள்ளியில் கை உதறி விலகுவதில் சென்று முடிவது . தனக்கென சொந்தக் கருத்தே இல்லாத போது  நிகழ்வது  . நான் இவ்விரண்டையும் செய்ய எனது அனுபவம் அனுமதிப்பதில்லை .

எழுத்தாளர் ஜெயமோகன் தனது தேடலின் உச்சத்தில் இருந்து கொண்டிருப்பவர் .தேடல் வாசிப்பு , அலைகழிப்பு , குழம்பி முட்டி சிக்கிக்கொண்டு அதிலிருந்து வெளியேறி பிறிதொன்றை அறிந்து கொள்வது  என தொடர் நிகழ்வினை முதல் நிலை தேடலில் உள்ளவர்களின் சிக்கல் .அதிலிருந்து இரண்டம் நிலையில் உள்ள எனக்கானதை நான் பெற்றுக் கொள்ள முயல்கிறேன் .

அவரது கருத்தியல்களில் இருந்து கிடைக்கும் செய்தி அதிலிருக்கும் புரிதல் மற்றும் திறப்புக்களை பரபரபின்றி உள்வாங்க கற்றுக் கொள்ள இரண்டாண்டுகள் ஆயிற்று . இப்போது சீண்டலுக்கு உள்ளாவதில்லை . அதிலிருந்து எனக்கென்ன கிடைக்கிறது என ஆராய்வது எனக்கு உகந்ததாக இருக்கிறது.

**
சண்முகம் தலைமையில் பெற்ற அரசியல் புரிதல்கள் அவற்றை ஒட்டி நடந்து முடிந்த நிகழ்வுகள் ஒரு தளத்தில் நிகழ்ந்தது என்றால் , நாராயணசாமியுடன் முரண்பட்டு அடைந்த புரிதல் , பின் அவற்றை ஒட்டி நிகழ்த்திய நிகழவினூடாக நான் பெற்ற புரிதல்கள் என அவை , இரண்டு தளத்தில் ஏக காலத்தில் நிகழ்ந்தவைகள் . அவை  ஒரே பொருளின் இரண்டு காலத்தைச் சேர்ந்த வெவ்வேறு தோற்றத்தைப் போல இரண்டு தலைமையுடனும் ஒரே காலத்தில் செயல்பட்டதை இப்போது நினைவு கூறுகிறேன் .

சண்முகத்துடனான அந்த உரையாடல் நிகழ்ந்து முடியும் வரை முதன்மை காவல் துறை அதிகாரி ஶ்ரீகாந்த் எனக்கு பின்னால் அமர்ந்திருந்தார் என்பதை அந்த உரையாடலின் இறுதியில்தான் அறிந்தேன் . அறிந்து கொண்ட அந்தக்கணம் எனது உரையாடல் முடிந்து போனது .அன்று எனக்கு தலைவர் சண்முகத்துடன் நிகழ்ந்த விவாதம் அவரது அரசியல் பிறழ்வுகளை குறித்தது .அந்த விவாதத்தை  அவரே துவக்கி வைத்தார்

எப்போதும் அவருக்கு எதிர்வாதம் வைப்பதை விரும்பாத நான் அதை அன்றும் தவிற்கவே விரும்பினேன் .ஆனால் என்னை உள்ளிழுத்தவர் தலைவர் சண்முகம் . அவரின் அரசியல் நிலைபாடுகளின் பிறழ்வுகளை முன்வைத்து அவரிடம் விவாதித்தது  நான் மட்டுமல்ல . பலரும் எனக்கு முன்பாக அதை செய்திருக்கிறார்கள் . அவர்கள் அனைவரும் இறுதியில் அவரிடம் தோற்று ,அவரது தரப்பை ஏற்று விலகியவர்களே என்பதை எப்போதும் பார்த்தவன் என்கிற அடிப்படையில் அவரிடம் ஒருபோதும் விவாதிப்பதில்லை என்கிற முடிவை அடைந்திருந்தேன் .ஆனால் அன்று அதை என்னால் தவிற்க  முடியவில்லை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

  கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...