https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 1 நவம்பர், 2019

அடையாளமாதல் - 481. * போலி ஆச்சாரம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 481

பதிவு : 481 / 667 / தேதி 01 நவம்பர் 2019

* போலி ஆச்சாரம்


ஆழுள்ளம் ” - 02
தத்துவ தரிசனம் - 02



பூஜை தவிர பிற நேரங்களில் நான் என் இயல்பில் இருக்க விழைகிறேன் . எனக்கு விசிஷ்டாத்வைதம் சொல்லிவைத்த என தந்தை அதன் உயர்ந்த லட்சியமாக பரமபதம்  தவிற பிற எதையும் வேண்டுதல் கூடாது என சொன்னது திகைப்பை கொடுத்திருந்தது . பூஜை என்பதே விழைவும் , வேண்டுதலுக்கும் உட்பட்டது , அது இல்லாத பூஜை ஏன் என நினைத்ததுண்டு . அதன் பிறகு பூஜையின் இறுதியில் வேண்டுகோளை வைப்பது சிறு குற்ற உணர்வுடன் தொடர்ந்தது .

என் இயல்பாக நான் எதை புரிந்து கொண்டிருக்கிறேன் . ஆழுள்ளம் ஏற்காத ஒன்றை என்னால் பின்பற்ற இயலாது . ஆச்சாரங்களை புரிந்திருக்கிறேன் அது வாழ்வியலில் சில இலக்கை நோக்கியவர் பின்பற்ற விழையும் ஒன்று , அந்த ஆச்சாரத்தை மதிக்கிறேன் . ஆச்சாரத்தை பற்றிய மிக ஆழ்ந்த புரிதலை இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் ஆக்கத்தில் அடைந்தேன் . அது பற்றி தர்க ரீதியான அனுகுமுறை அற்புத திறப்பை கொடுத்திருந்தது . அதிலிருந்து என்னால் இயந்த ஒன்றை கண்டடைகிறேன்.

கோயம்புத்தூர் சந்திப்பிற்கு பின் அவருக்கு நான் எழுத்திய கடிதத்திற்கு அவர் தன்னைதூய அத்வைதியாகஜெயமோகன் எனக்கெழுதிய கடித்தத்தில் குறிப்பிட்டிருந்தார். “அத்வைதம்குறித்து முன்பே அறிமுகம் இருந்தாலும் . நவீன காலத்தில்  முதன் முறையாக ஒருவர் தன்னைதூய அத்வைதிஎன சொல்லுகிற போது முதலில் சற்று திகைப்பாக உணர்ந்தேன் . அவரது வாழ்கை முறையை மிக அருகிலிருந்து பார்ப்பது போல அவரது எழுத்துக்களில் இருந்து எழுந்த புரிதல்கள் மூலம் அடைந்தேன் . அவர் சொல்லும் அந்ததூய அத்வைதம்நடிப்பல்ல .

அவரது கருத்தியலும் அவர் வாழ்தல் முறையும் இணைத்தே நான் அவர் தன் வாழ்கையில் பின்பற்றும் அத்வைத கோட்பாடுகளின் நுட்பத்தை  புரிந்து கொள்ள முயல்கிறேன்அவர் தன்னைப்பற்றிச் சொன்னது சரியென நினைத்த சமயத்தில் அவருக்கு சொகுசான வாழ்வியல் முறை, அதிநவீன தங்குமிடங்கள் , ஜீன்ஸ் பேன்ட் அனிந்த அவரை நோக்கிநீங்கள் எந்தமாதிரியான காந்தியவாதிஎன கேள்வி எழுப்பிய போது மழுப்பாத பதில் , “எடுத்தாளப்பட்ட காந்தியம்,நடைமுறை காந்தியம் [Applied Gandhism] என்று சொல்லலாம்என்கிறார் . இது அதன் பிறிதொரு முனை. “அத்வைதியும் , காந்தியவாதியும்” . இந்த இரண்டிற்கும் இடையே அவர் சொல்லும் இடம் இருக்கிறது என நினைக்கிறேன். .

வாசிப்பின் மூலமாக எனக்குள் அதன் வேர்களில் ஏற்பட்ட நுண்ணிய மாற்றம் எப்படி நிகழ்ந்தது என அவதானிக்க முயல்கிறேன். எனக்குள் நிகழ்ந்தது ஒருவித மூளைச் சலவை போன்ற ஒன்றா? , அல்லது எனது விழைவின் படி வாழ்கையை இட்டு நிரப்பிக் கொள்ள எனக்கு கிடைத்த வாய்ப்பைசொஸ்தமாகபயன்படுத்தும் ஒரு தந்திரமா ? என பலமுறை எனக்குள் வினவிக் கொண்டு இருக்கிறேன் . இரண்டும் இல்லை என்றே நினைக்கிறேன் . பிறர் என் ஆழ்மனத்தில் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை என்னால் ஏற்க இயலாது . என் ஆழுள்ளத்தை நான் மிக அனுக்கமாக உணர்ந்திருக்கிறேன் . அவ்வளவு பலகீனமான ஒன்றாக அது எப்போதும் இருந்ததில்லை . இப்போதும் கூட.

என் ஆழ்மனம் உகக்காத ஒன்றிலிருந்துவெளியேறுதல்என் வாழ்கையில் எனக்கு நான் தொடர்ந்து நிழ்த்திக் கொண்ட ஒன்று . அதை கணக்கில்லா முறை எனக்குள் செலுத்தியது என் ஆழுள்ளம் . அதை   பார்த்தவர் அனைவரும் அது என் ஆணவத்தின் உச்சம் என்றனர் . ஆணவம் அடையாளம் இந்த இரண்டிற்குமான வேறுபாடு அறிந்தவர்கள் அப்படி நினைப்பது விந்தை இல்லை . ஆனால் என் அடையாளம் சீண்டப்படுகிறபோது , அதுனுள் இருந்து கொண்டிருக்க என்னால் இயல்வதில்லை .   அதனுடைய ஒரு கூரிய அம்சமே, நான் என் அடையாளத்தை இழக்க துணிந்தது . அடையாளமாதல் என்கிற இந்த பதிவுகளுக்கு இணையாக அடையாளமழித்தல் பதிவுகளாக அவை விரிந்து கொண்டிருக்கிறது . அவை என் வெளியேற்றத்தை மிக விரிவாக நான் எனக்குள் நிகழ்த்தி கொண்டது

நான் பதிய விழைந்த எண்ணங்களில் பாதியை கூட இன்னும் தொடவில்லை என்பது எனக்கு திகைப்பைத் தருவது. இன்று நான் மிக அமைதியாய் வந்து சேர்ந்து அமர்ந்துள்ள ஓரிடம் , அப்படிப்பட்ட பல நூறு விலகல்  மற்றும் வெளியேறியதனூடாகவே நிகழ்ந்தது . ஒவ்வொன்றிலும் ஒரு சிக்கலை சந்திக்க நேரும்போது அதை புரிந்து கொள்ள ஆழ்மனம் எடுத்துக் கொடுக்கும் கருத்தியல் சமாதனங்கள் அன்றாடங்களுடன் மிக இயல்பாக பொருந்து போவதை உணர்ந்திருக்கிறன் . அங்கு என் இயல்பிற்கு மாறாக முரண்பாடுகள் எழும் போது இருத்தலியல் நியாயம் எடுபடுவதில்லை . என்ன தக்க வைத்துக் கொள்ளும் எந்த அரசியலையும் நான் கையாண்டதில்லை . அது எப்படிபட்ட உயர் நிலையாக இருப்பினும் , மனம் உக க்காத போது அதிலிருந்து வெளியேறி இருக்கிறேன் . பின் ஒருபோதும் அதை திரும்பி பார்த்ததில்லை .

ஜெயமோகன் தனக்குள் இருக்கும்  “தூய அத்வைதி மற்றும் காந்தியவாதிபற்றி கருத்துருவின் மத்தியில் அவரது நவீன வாழ்வியலில் இருந்து என் ஆழுள்ளத்தில் மிக அணுக்கமாக உணரப்பட்ட கோட்பாடுகளில் நான் எனக்கானதை , என் ஆச்சாரமாக கொண்டு அதிலிருந்து விரித்து எடுத்துக் கொண்டேன் என்பது மிக ஆச்சர்யமான ஒன்று . அசட்டு ஆச்சாரத்தை பற்றி நிற்பதை என் ஆழுள்ளம் ஒருபோதும் அனுமதித்ததில்லை .போலியான ஆச்சாரங்களை கொண்டிருக்கும் பலரை அறிவேன். அவர்கள்  பிறர் பார்வைக்கு உள்ளாக நேரும் போது மேலும் நடிப்பாக அதை செய்வதும் , தனித்த வாழ்கையில் அதன் எதிர் திசையில் கூச்சமில்லாது செல்லும்  நடவடிக்கையையும் பார்த்திருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்