https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 12 நவம்பர், 2019

அடையாளமாதல் - 486 * தற்புரிதல் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 486

பதிவு : 486 / 672 / தேதி 12 நவம்பர் 2019

* தற்புரிதல் * 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 01





எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் காரைக்கால் நெடுங்காட்டில் சண்முகம் தன்னை தலித்துக்களின் தலைவராக அடையாளப்படுத்திக் கொண்டது ஒருகால் அவர் எண்ணி எண்ணி தன்னை தொகுத்துக் கொண்டதாக கூட இருக்கலாம்  .ஒருவர் தன்னை என்னவாக யூகிக்கிறார் என்பது அரசியலில் அனைவருக்குள்ளும் நிகழ்வதில்லை . அதை தனக்குள் நிகழ்த்திக் கொள்ளும்  ஒருவர் தனியாளுமையாக மிளிர்கிறார்கள் என நினைக்கிறேன்

தமிழ் பேசும் பகுதியான புதுவை பல சந்தர்பங்களில் தமிழக அரசியலோடு இணைத்தே புரிந்து கொள்ளப்பட்டு வந்திருக்கிறது . ஆனால் புதுவை அரசியல் இயங்கு விசை வேறுமாதிரியானது.  காமராஜரை தங்களுக்கான  வழிகாட்டும் தலைவராக தமிழக முக்கிய தலைவர்கள் அவர் கீழே அணித்திரண்ட போது , புதுவையில் சண்முகம் தன்னை காமராஜருக்கு இணையான தலைமையாக புரிந்திருந்தார் . காமராஜரும் அதை அங்கீகரித்தார் என்றே நினைக்கிறேன்.இந்த நிலைபடே  புதுவை  அரசியலில் சண்முகத்திற்கான இடத்தை உருவக்கிக் கொடுத்தது .இங்கு இருந்தே சண்முகத்தின் அரசியல் பாதை தொடங்குகிறது என நினைக்கிறேன்.

புதுவையின் சுதந்திர போராட்ட குழுவின் தயக்கமும் குபேரிடம் கொண்ட அச்சமும்  புதுவை அரசியலில் புதிய முரண்களை உருவாக்கி இருந்தது அதை சரி செய்வதில் இருந்து சண்முகத்தின் தனது அரசியல் கணக்கை துவங்கினார்  .புதுவை காங்கிரஸ் அரசியலில் அசைக்க இயலாத ஆளுமையாக சண்முகம் அரை நூற்றாண்டு திகழ்ந்ததின் பின்னனியை இந்த பதிவு அலசுகிறது .

புதுவை விடுதலை அமைப்பின் பெரும் தடையாக இருந்தவர் குபேர் . இந்திய ஒன்றியத்துடன் புதுவையை இணைக்க விரும்பாதவர்களில் குபேர் முதன்மையானவர் .காங்கிரஸ் கொடியுடன் வீதியில் போராடிய குழுவிடம் இருந்து   கொடியை பிடிங்கி கிழித்தெறிந்து அனைவரையும் மிரட்சியடைய செய்தவர் , புதுவை சுதந்திரமடைந்த பிறகு , அக்கட்சியின்   முதல்வராக வந்தது ஒரு ஆகப்பெரும் முரண்

தனக்கு கொடுக்கப்பட்ட பணியின் சிக்கலை புதுவைக்கு வந்த போது புரிந்திருந்த காமராஜர் , கட்சி ரீதியான போராட்ட அமைப்பு தோல்வியுற்றதால் தனது அரசியல் சூழ்தலால் விடுதலைக்கு எதிரான குபேர் போன்றவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தினார் . அதற்கு காரணம் இரண்டு . ஒன்று அரசியல் சூழதலால் விடுதலைக்கு எதிரானவர்களுடன் காமராஜர் செய்து கொண்ட ஒப்பந்தம் . இரண்டு அசலான போராளிகள் காமராஜரின் செயல் திட்டத்தை நிறைவேற்ற இயலாமை . இதனால் வரலாறு திரிந்து போனது

நேரு புதுவை விடுதலை விழாவிற்கு வருகை தந்த போது காமராஜர் குபேரை  அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார் . புதுவையின் நிஜமான அரசியல் சூழல் நேருவிற்கு விளக்கப்பட்டடிருக்க வாய்பில்லை . அல்லது விளக்கப்படிருந்தாலும் பிரன்ச் அரசாங்கத்துடன் செய்து கொள்ளவிருக்கும் ஒப்பந்தத்திற்கு அவர்களில் ஒருவர் முக்கிய பதவியில் வருவது சிறந்த அரசியல் சூழதலாக வகுகப்பட்டிருக்கலாம் . நேரு குபேர் மீது மதிப்பு கொண்டிருந்தார் .ஊழின் ஆடல் அது என நினைக்கின்றேன். குபேர் காங்கிரஸில் இருந்தவரை நேருவுடனான அவருடைய நட்பு ஆழந்திருந்தது .அதனால் புதவை காங்கிரஸ் கட்சி அமைப்பு செயல்பட இயலாத ஒரு எல்லைக்கு சென்றடைந்தது.

தனக்கு வகுக்கபட்ட செயல்திட்டத்தை நிறைவேற்றிய காமராஜர் , பின்னாளில் அதனால் விளைந்த முரண்பாட்டை களைந்து கொடுக்க உதவிய சண்முகம் முக்கிய ஆளுமையாக உருவெடுத்ததில் ஆச்சர்யமொன்றில்லை .காந்தியின் கொள்கைகளின்  சமரச தொடர்ச்சியாக காமராஜர் தன்னை முன்னிறுத்திக் கொண்டார் .ராஜாஜி , சத்தியமூர்த்தி முரணில் காமராஜர் உருவாகி வந்தார் , அவரது தலைமையில் தமிழக முக்கிய தலைவர்கள் பலர் திரண்டர் .

அதே காலத்தில் புதுவையின் ஒரு பகுதியான காரைக்காலில்  தனது அரசியலை சண்முகம் துவக்கி இருந்தார்.புதுவை விடுதலை போராட்டம் மிக சிக்கலான இழைகளால் ஆனது . ஒரு வகையில் புதுவை விடுதலை போராட்டம் காங்கிரசின் நிலைப்பாட்டை ஒட்டியதாக தோன்றுவது கூட ஒருவித ஜோடனை . புதுவை அரசியலில் விடுதலை போராட்ட வரலாறு  நிலவுடைமை மற்றும் பிரன்ச் ஆட்சியின் அதிகாரம் பெற்றிருந்த சிலரை எதிர்த்து உருவானது

செல்வராஜ் செட்டியார் போன்ற எதிர்நிலை ஆளுமையை வெளிப்படையாக எதிர்த்து உருவானது கம்யூனிஸ்ட் கட்சி  . அப்போது அது சுப்பையாவின் தலைமையில் செயல்பட்ட தலைமறைவு இயக்கம் . வன்முறை அதன் வழிமுறையாக இருந்தது. காங்கிரஸ் அப்போது புதுவையில் முழுமையாக வளர்ந்திராத அமைப்பு .வெங்கிடசுப்ப ரெட்டியார் போன்றவர்கள் பின்னர் காங்கிரஸை ஒட்டிய நிலைபாடு எடுத்தார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்