https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 29 நவம்பர், 2019

அடையாளமாதல் - 493 * அதிகாரப் பகிர்வு *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 493

பதிவு : 493 / 680 / தேதி 29 நவம்பர் 2019

* அதிகாரப் பகிர்வு


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 07





கம்யூனிஸ்ட் இயக்கம் பெரும்பாலும் தொழிலாளர் சிக்கல்களை கலைவதில் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருந்தது . பஞ்சாலை தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை விஷயத்தில் போராடி பெரும் வெற்றியை அடைந்திருந்தது . ஜனநாயக அமைப்பில் போராட்டம் எதையும் பெற்றுக் கொடுக்கும் என்கிற நம்பிக்கை துவங்கி இருந்தது . பல சமயம் அவர்களின்  வன்முறைஅவர்கள் மீதான அச்சத்தை அதிகமாக்கி கொண்டிருந்தது . சுப்பையா அரசியல் ரீதியாக வெல்வது தங்களின் நிலத்தை இழப்பதில் சென்று முடியும் என காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் நம்பினார்கள் . பிரதமர் நேரு கம்யூனிசம் நோக்கிய  மன சாய்வுள்ளவராக அறியப்பட்டார் என்பதால், குபேர் போன்றவர்களை ஆதரிப்பது தங்களுக்கு நல்லது என அவர்கள் நினைத்திருக்கலாம் . அல்லது புதுவை ,  இந்திய இணைப்பே கூட நீண்ட நாட்கள் நீடிக்காது என்கிற எண்ணம் இருந்திருக்க வேண்டும் .

இது ஒருவகையான குபேரின் அரசியல் சூழ்தல் பலர் அதற்கு பலியானார்கள் . அதற்கு மற்றோ , அதை தகர்க்கும் போக்கோ ரெட்டியார் போன்றவர்களிடம் இல்லை . குபேரால் இந்திய ஒன்றியத்திடமிருந்து புதுவையை தனித்து வைத்திருக்க இயலும் என பலர் நம்பினார்கள் . அவர்களுக்கு குபேரை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை .தேர்தல் காலத்திலும் கூட காங்கிரஸ் அமைப்பால் ஒன்று திரண்ட கருத்தை உருவாக்க இயலவில்லை . வேட்பாளர்  தேர்வில் ஏக குளறுபடிகள் நிகழ்ந்தன . தேர்தல் நெருங்க குபேர் கட்சிக்கு அப்பாற்பட்ட தனது ஆதரவாளர்களை சுயேட்சையாக  கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து நிறுத்தினார் .தேர்தல் களத்தில் அது கடுமையாக எதிரொலித்தது

உரையாடலில் பெரும் நம்பிக்கையுள்ளவராக சண்முகத்தை  அறிந்திருக்கிறேன் . அது அவரது அடிப்படை ஆதார பலமாக இருந்திருக்க வேண்டும்  பின்னாளில் அதை பெரிய அளவில் வளர்த்துக் கொண்டார் .குபேரையும் சுப்பையாவைப் போலவும் ஜன வசீகரமமோ , ரெட்டியார் போல தோற்ற வசீகரமோ , குடும்ப பின்புலமோ , பொருளியல் பலமோ ஏதுமற்ற தனக்கு தனது அரசியல் பார்வையும் மற்றும் அதன் கூரிய கருத்தும் பிறரிடமிருந்து தன்னை வேறுபடுத்தி காட்டுவதாக இருக்க  வேண்டும்  என தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கலாம் .அரசியலை கணிக்கும் அவரது ஆழுள்ளப் புரிதல் அவரை பெரும் தலைமையாக பின்னர் வெளிப்படுத்தி இருந்தது .மானுட உளவியல் குறித்த தெளிவாக கருத்து அவரிடம் இருந்ததை அறிந்திருக்கிறேன் .

எல்லோரையும் பற்றி தெளிவான உளப்பதிவு அவரிடம் இருந்தது . அனைவருக்குள்ளும் எழும்  பொதுவான தன்னல கணக்கு . நெருக்கடியாக உணரும்  நேரத்தில் எந்த எல்லைக்கும்  செல்லத் தயங்காத மனம் .போன்றவை எளிய குடிமை சமூகத்தின் அடையாளம் , அதுவே அவர்களை  அடையாளமில்லாதவர்களாக ஆக்குகிறது . அது தன்னை ஆதரவற்றவர்கள்  என்கிற தன் உணருதலில் இருந்து எழுவது . அதை போன்ற ஒன்றே அடையாளம் உள்ள ஆளுமை அரசியல் சரிநிலை கருத்தை உருவாக்கி , அதன் வழியாக எதையும் செய்ய துணிவார்கள்  . தனது அரசியல் வீயூகத்தை சண்முகம் அங்கிருந்து பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் . உணர்வு வசப்பட்ட "திரள் அரசியலில்" அவருக்கு எப்போதும் நம்பிக்கை இருந்தது இல்லை .அது எபோது வேண்டுமானாலும் எடுத்த  முடிவை மாற்றிப் கொள்ளும் என அறிந்திருந்தார் .1959 புதுவை வந்த சண்முகம் தனக்கான அரசியலை காரைக்காலில்  துவங்கினார் .அரசியலில் கருத்தியலுக்கு எப்போதும் தனி வடிவம் உண்டு .அரசியலில் கருத்தியலை உரத்து சொல்லுபவர்கள் இரண்டாம் நிலை தலைவர்களால் வெறுக்கப் படுகிறார்கள் . அதற்கு அவர்களே மாற்று கருத்தியல் என்கிற வெறுப்பரசியலை முன்வைப்பவர்கள்

முதல்வராக குபேர் வந்த பிறகு கங்கிரஸ் கட்சி அமைப்பு மேலும் சீர்குலைந்து .  அதை மீளவும் கட்டமைக்கப்பட வேண்டும் என்கிற சூழல் உருவானதும்  . ரெட்டியரை முன்னிறுத்தி அதற்கான வேலைகள் சூடுபிடித்தன . இரண்டாம் நிலை தலைவர்களுடன் நிகழ்த்திய உரையாடல் பலன் கொடுத்தது . சண்முகம் அதில் முக்கிய பங்கு வகித்தார் .அமைப்பு அடிப்படை ஒழுங்கிற்கு திரும்பும் சமிக்ஞை கிடைத்ததும் முதல்வர் மாற்றம் நிகழ வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது .  குபேர்  விழித்துக் கொண்டார் . இருப்பினும் காலம் கடந்து போனதால் மாற்றம் தவிர்க்க இயலாதாகிப்  போனது .1959  குபேரை வீழ்த்தி ரெட்டியார் முதன்மை ஆணையராக பதவியேற்றார் . குபேருக்கு எதிரான மனநிலையையும் சுப்பையா மீதான அச்சமும் விலக்க சண்முகத்தின் பங்கு அதிகம்.  அதற்கு அவரது துவக்ககால அரசியல் பின்னனி முக்கிய பங்கு வகித்தது .

இந்திய விடுதலை தவிர்க இயலாதது என பிரன்ச் அரசாங்கம் புரிந்திருந்தது . 1945 ல் இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற போது  பிரான்ஸ் தனது  சர்வதேச சமன்பாடுகளை மாற்றி அமைத்திருந்தது. கடல் கடந்த  காலனிகள் மீது அதன் ஆர்வம் குறைய ஆரம்பித்தது . உள்ளூர் பிரன்ச் அரசாங்க ஆதரவாளர்கள் தப்பி பிழைக்க விரும்பி பிரன்ச் ஆளுனரிடம் , அவர்களுக்கு உள்ளூர் ஆதரவிருப்பதை அறிவிக்க வெளிப்படையான அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வெற்றி பெற்றனர் . பிரன்ச் அரசாங்கமும் தனது ஆதரவாளர்கள் வெற்றி பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் மறைமுகமாக செய்யத் துவங்கியது . காவல் துறை கட்டவிழ்த்து விடப்பட்டது .

புதுவை மற்றும் காரைக்காலில் வழமையாக யார் யாரெல்லாம் போட்டியிட வேண்டும் என்கிற பட்டியலில் அடங்காத சிலர் வேட்புமனு தாக்கல் செய்தனர் . அவர்களில் நெடுங்காடு சண்முகமும் ஒருவர் . கம்யூனிஸ்ட்கள் அமைப்பாக திரளாத சூழலில் சுயேட்சை அனைவரும் கம்யூனிஸ்ட் ஆதரவாளராக பார்க்கப்பட்டு , ஒடுக்கப்பட்டனர் . கரைக்கால் காவல் உயரதிகாரிகள் முனைப்புடன் லத்தி சுழற்ற , பலர் பின்வாங்கினர் .அதிலிருந்து மாறுபட்டு சண்முகம் வேறு பாதையில் பயணிக்க துவங்கினார் .

நேரடியாக காவல் நிலையம் சென்று தனக்கு எதிரிகளால் ஆப்பத்திருப்பதாக சொல்லி போலிஸ் பாதுகாப்பை கோரினார் . அதிகாரிகள் முதலில் திகைத்தனர் . காரைக்கால் முற்றும்  தமிழகத்தால் சூழப்பட்ட பகுதி. புதுவையிலிருந்து வரும் உதவிகள் கூட அவற்றை கடந்தே வரவேண்டி இருக்கும் . மேலும் மாறி வரவும் அரசியல் சூழலும்  அவர்களுக்கு பல கணக்குகளை சொல்லி இருக்க வேண்டும் .மக்களின் ஆழுள்ளம் மாறி அது ஆட்சி மாறுவதை நோக்கி நகர்கிறது என்பதை எப்போதும் காவல்துறையே  முதலில் கணிக்கிறது .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக