https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 27 நவம்பர், 2019

அடையாளமாதல் - 492 * ஒருங்கிணைப்பு *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 492

பதிவு : 492 / 679 / தேதி 27 நவம்பர் 2019

*  ஒருங்கிணைப்பு  * 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 06




நண்பர் லெனினுடன் தலைவர் சண்முகம் குறித்த ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க அவருடன் நீண்ட பேட்டிகள் எடுக்கப்பட்டது . என்னிடம் தனிப்பட்டு பல முறை சொன்ன தகவல்களையே அன்றும் சொல்லத்துவங்கினர் . ஆனால் ஒரு கேள்வியுடன் . முதலில் அவர் கேட்ட கேள்வி . இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் நாடு முழுவதும்அதற்கு பாடுபட்ட தலைவர்கள் வசம் நாட்டை ஆளும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டு , போராட்டத்தில் பங்கு கொண்டு வழிநடத்திய தலைவர்கள் அனைவருக்கும் நாட்டை வழி நடத்த பணிக்கப்பட்டனர் . புதுவை தவிர பிற அனைத்து மாநிலத்திலும் அது நடைமுறை படுத்தப்பட்டது . ஏன் புதுவையில் அது நிகழவில்லை ?என கேட்டுக் கொணடால் புதுவை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களுக்கு இட்டுச் சென்று பல புதிய தகவல்களை கொடுக்கும்” என்றார் .

அந்த கேள்வி ஆச்சர்யத்தை கொடுத்தது .ஆம் அது ஏன் புதுவையில் நிகழவில்லை என்று கேட்டதற்கு   சண்முகம் சொன்னார் . 1954 ல் காரைக்காலில் நிகழ்ந்த தனிப்பட்ட சிறு பூசல் புதுவை விடுதலை வரலாற்றில் புதிய பக்கத்தை திறந்தது . காரைக்கால் பிராம்ணர் ஒருவரின் சிகை அறுக்கப்பட்ட நிகழ்வு இந்து நாளிதழில் பெரிய செய்தியாக வந்திருந்தது . (அப்போதெல்லாம் திராவிட கழகத்தினர் அதை செய்வதில்லை போலும் )அதை செய்தவர் ஒரு போக்கிரி இந்திய இணைப்பை எதிர்பவரின் கையாள் என்பதால் அது பிரன்ச் அரசாங்கம் தன் மக்களை காப்பாற்ற மறுக்கிறது  என்கிற செய்தி இத்துடன் தொடர்பு படுத்தப்பட்டது .

அதற்கு பல மாதங்களுக்கு முன்பாக புதுவையை ஒட்டிய தமிழக பகுதிகள் சீல் வைக்கப்பட்டு  காவல் முனைப்பு செய்யப்பட்டிருந்தது .காரைகால் செய்தி  இந்திய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டது .இந்து நாளிதழில் வெளிவந்த செய்தி ஆவணமாக்கப்பட்டு தில்லி மற்றும் புதுவை பிரன்ச் அதிகாரிகளுக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பபட்டது .இது பிரன்ச் அரசாங்கம் எதிர்பார்த்த ஒன்று என்பதால், அவர்களும் நிலமையை புரிந்து கொண்டு வெளியேற முடிவெடுத்தார்கள்  . புதுவை இந்திய இணைப்பு வேகமெடுத்தது.

புதுவையில் ஒருங்கிணைந்த விடுதலை போராட்டமாக அது இருந்ததில்லை என்பதுடன் சிதறி கிடந்தது  . யேனத்தில் ஏறக்குறைய யாருமில்லை . இன்றளவும் அது சுயேட்சை உறுப்பினர்களையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்து புதுவை சட்டமன்றத்திற்கு  அனுப்புகிறது . ஆகவே அங்கு ராணுவ காவல்படை வசம் யேனம் ஒப்படைக்கப்பட்டது .சந்நிரநாகூர் மேற்கு வங்கத்திற்கு அருகில் இருக்கும் புதுவை பகுதி .அதன் வழியாகவே அரவிந்தர் புதுவையை அறிந்திருந்தார் .அதன் இணைப்பு பற்றி எந்த குறிப்பும் இல்லை என்றாலும், நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு சந்திரநாகூர் மேற்கு வங்கத்துடன் இணைக்கப்பட்டது .

மஹே இந்திய ஆதரவாளர்கள் என்கிற அடைப்புக் குறிப்பில் அது ஒப்படைக்க பட்டதை கருத்தில்  கொள்ள வேண்டும் . புதுவை மற்றும் காரைக்கால் மட்டுமே நடைமுறையில் உள்ள ஒப்படைப்பின் படி நிகழ்த்தப்பட்டது .

1995 ஜனவரி 13 ஆம் தேதி முதன்மை ஆணையராக பக்கிரிசாமிபிள்ளை நியமிக்கபட்டு 1956 ஏப்ரல் மாதத்தில் அவர் மரணமடைய எதுவார் குபேர் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார் . அப்போது புதுவை காங்கிரசை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் முனுமுனுக்கத் துவங்கினாலும் குபேரை வெளிப்படையாக எதிர்க்கத் துணியவில்லை.

அதற்கு பல காரணங்கள் இருந்தது .காங்கிரஸ் உட்கட்சியில் நிர்வாகிகள் குபேரின் ஆதரவாளர்களாக அவருக்கு கட்டுப்பட்டு இருந்தனர் அல்லது அவரை அஞ்சினர் . காரணம் சரியான வழிகாட்டி இல்லாதது .ரெட்டியார் அவர்களை வழிநடத்த தவறினார் என்றே சண்முகம் குற்றம் சுமத்தினார்.

புதுவையில் சுதந்திர போராட்டம் ஓரளவிற்கு ஒருங்கிணைப்புடன் நிகழ்ந்தது கம்யூனிஸ்ட்கள் வழியாக .இருப்பினும் அவர்கள் வன்முறையை கையிலெடுத்ததும் வெளிப்படையான அரசியலில் இருந்து விலகி இருந்தனர் .பின்னர் பொதுத் தேர்தல் சமயத்தில் , புதுவை விடுதலைக்கு பின்னர் தேர்தலரசியலில் ஈடுபடத் துவங்கி ஜனநாயகப் பாதைக்கு திரும்பினார்கள் . இருப்பினும் 1985 வரையிலும் கூட அதன் வன்முறை அரசியல் விலகவில்லை . அரசியல் முன்விரோதம் காரணமாக கம்யூனிஸ்ட் தொண்டர் கருணாஜோதி படுகொலைக்கு பிறகு அவர்களின் வன்முறை சாய்வு முடிவுற்றது .சுப்பையாவிற்கு உதிரியான பொது குடிமை சமூகத்தின் ஆதரவிருந்தது . ஆலை தொழிலாளர்கள் மத்தியிலும் சுப்பையா கணிசமான செல்வாக்குள்ள தலைவராக இருந்தார்

அன்றைய காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பெரும் நிலக்கிழார்கள். அவர்களுக்கு மிக சமீபத்தில் நிகழ்ந்த ரஷ்ய புரட்சியும் மற்றும் ஆட்சி மாற்றமும் திகைப்பையும் அச்சத்தையும் கொடுத்தது . சுப்பையாவின் வலதுசாரி இயக்கம் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தது அந்த அச்சத்தை அதிகப்படுத்தி இருந்தது.கம்யூனிச இயக்கங்களால் தங்கள் நிலம் பறிக்கபடும் என அஞ்சினர் . எக்காரணம் கொண்டும் சுப்பையா அரசியல் ரீதியான வெற்றியை அடையக்கூடாது என நினைத்தனர் .

குபேர் இந்த அச்சத்தை பயனபடுத்திக் கொண்டார் .தன்னால் மட்டுமே கம்யூனிஸ்ட்களை ஒடுக்க இயலும் என்கிற நிலமையை முன்வைத்தார் . அவர்களுக்கிடையேயான பகை பல ஆண்டுகளாக தொடர்வதால் காங்கிரஸ் அமைப்பு நிர்வாகிகள் எப்போதும் குபேர் ஆதரவு நிலையையே எடுத்தனர் .


லிங்க் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்