https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 17 நவம்பர், 2019

அடையாளமாதல் - 488 *அமானுஷ்யம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 488

பதிவு : 488 / 674 / தேதி 17 நவம்பர் 2019

*அமானுஷ்யம் 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 03

அரசியல் எதிரிகள் மற்றும் பொது மக்களை கையாள்கிற விஷயத்தில்  குபேரின் அனுகுமுறை வேறுபடுத்தப்பட்டு மிக மிக கவனமாக கையாளப்பட்ட ஒன்றாக இருக்கலாம் , அல்லது அவரது அடிப்படை குணமாகக்கூட அது இருந்திருக்க வேண்டும் .எனது முதுதந்தையிடம் பணிபுரிந்த ஆடியபாதம் எனது மிக சிறிய வயதில் குபேர் பற்றிய சிறு சிறு தகவல்களை நிறைய சொன்னவர் . அதனால்  எதற்கு உபயோகம் என நான் அப்போது நினைத்ததுண்டு  , ஆனால் இந்தப் பதிவிடுகையில் அவை மீள மீள என் நினைவில் எழுவதை தவிற்க இயலவில்லை .ஒரு சாமான்யனின் பார்வையாக , எண்ணமாக , அவர்களின் அனுபவமாக அவை விரிகின்றன.

செல்வராஜ் செட்டியார் கொலையானது ஒரு எளிய ஆலைத் தொழிலாளி கையால் . கொலையாளி கம்யூனிஸ்ட் அமைப்பின் உறுப்பினர் .செட்டியார் தனது வீட்டு மாடிப்படியில் இருந்து இறங்கி வந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார் . அன்றைய சாமான்ய மக்கள் மத்தியில் கொலையாளி வீரனைப்போல பார்க்கப்பட்டிருக்கிறார்

அவருடைய புகைப்படத்தை எனது முதுதந்தையின் பர்ஸில் பார்த்ததாக ஆடியபாதம் என்னிடம் சொன்னபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது .எனது முதுதந்தையை அரசியல் ஆர்வலராக நான் அறிந்திருக்கவில்லை .தனது பிள்ளைகளில் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தொடர்பில் இருந்ததபோது அவரை கடுமையாக கண்டித்ததாக அறிகிறேன் . செல்வராஜ் செட்டியார் பற்றியும் அவர்  கொலையான பின்னனி என்னவாக இருக்கக்கூடும் என்பது பற்றியும் நிறைய யோசித்ததுண்டு .

அரசியல் ஆர்வமற்ற எனது முதுதந்தை என்ன எண்ணத்தில் அந்தப்  படத்தை தனது பர்ஸில் வைத்திந்திருப்பார். செல்வராஜ் செட்டியார் எப்படிபட்ட எதிர் ஆளுமையாக இருந்திருக்க கூடும் என .நிச்சயம் இன்றைய திரையுலக கதைகளில் வரும் ஜமீன்தார் கதாபாத்திரத்திற்கு சற்றும் குறைவுறாத மனிதராக அவர் இருந்திருக்க கூடும்

ஒவ்வொரு நாளும் எனது இரவு நடையின் போது கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது சிலையையும் அது சுற்றியுள்ள பாழடைந்து போன பூங்காவும் அவரது நினைவை தூண்டுபவையாக இருப்பதுண்டு . இன்று அது திறக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது . சிலை - அது அனைவருக்கும் பொதுவான ஒரு எண்ணத்தை கொடுப்பது .அவரை பற்றி மிக தீர்ககமாக தெரிந்தவர்களுக்கு அந்த சிலை சொல்லும் செய்தி என்னவாக இருக்கக்கூடும்.

செல்வராஜ் செட்டியாரின் வீடு பின்னாளில் சண்முகத்தின் இருப்பிடமானது .அங்கு வாடகைக்கு அவர் குடியிருந்தார் . அவர் அங்கு குடியிருந்தது குறித்து நிறைய அரசியல் விமரசனங்கள் எழுந்தத்துண்டு . முதல் முறையாக அந்த வீட்டிற்குள் நுழையும் போது எனது மனப்பதிவை இப்போது நினைத்துப் பார்க்கிறேன் .ஆழ்ந்த அமைதியுடன் ஒருவித ஆமானுஷ்யம் நிறைந்ததாக எனக்கு தோன்றியதுண்டு அந்த வீட்டின் முன் பகுதி மட்டுமே சண்முகத்தால் உபயோகப்படுத்தப்பட்டது .செல்வராஜ் செட்டியார் பற்றிய சைய்திகள் மனதில் நிழலாடும் போது , அவையெல்லாம் மிகை கற்பனை என ஒதுக்கி வைத்து விடுவேன்  , அதனுடைய ஒரு கூறை தலைவர் சண்முகம் சொல்லும் வரை .

அற்புதமான பிரன்ச் கலாச்சார பின்னனியில் கட்டப்பட்ட பெரும் செல்வந்தரின் வீட்டிற்கே உரிய அனைத்தும் நிரம்பிய ஒன்று..மிக உயராமாக தூக்கி கட்டப்பட்ட அறைகளை கொண்டதாக இன்றைய நவீன இரும்பு கிரில்களில் செய்ய இயலாத  வார்படமாக உருக்கி ஊற்றப்பட்ட கிரில்களை கொண்ட உயரமான ஜன்னல்கள் .அவற்றில் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட பல வித வண்ணக் கண்ணாடிகள் பொறுத்தப்பட்டிருந்தது . விஸ்தாரமான மரப்பொருட்கள் .இருபதுக்கு இருபது அடி அளவுகளை கொண்ட அறைகள் என மிக வரிவாக வடிவமைக்கப்பட்ட வீடு..உள்ளூர் பிரமுகர்கள் வரும் பிரதான வாசல் , தொழிலாளிகள் நுழைய பின் வாசல் என அந்தக்காலத்தில் அவ்வீடு ஒரு மிராசின் ராஜ்யம்போல இருந்திருக்க வேண்டும் . அவர் வீட்டிற்கு முன்னால்வரை வந்து போகும் ரயில்வண்டி என செல்வாக்குடன் இருந்ததற்கான அடையாளம் இன்றும் மிச்சமுள்ளது .

புதுவையில் பிரதான ராயல் நிலையத்திலிருந்து பிரயத்யேகமான இருப்புப்பாதை நீட்சி அவரது வீடு வரை அமைக்கப்பட்டிருந்தது . முன்புறமுள்ள எந்த ஆடம்பரமும் இன்றி பின்புறம் காணப்படுகிறது . அவர் கொலையுண்ட அந்த ஒங்கி நெட்டுக் குத்தாக உயரந்து செல்லும் படிகெட்டு . அவரது தனிப்பட்ட படுக்கை அறைக்கு நோக்கி செல்லும் அந்த படிக்கட்டு இன்றும் ஏதோ சொல்ல வருவதாக தோன்றியதுண்டு .

அந்த வீடு தலைவர் சண்மகத்தின் தேவைக்கு மிக அதிகமான ஒன்று .நிறைய அறைகளையும் நடைபாதைகளையும் , விருந்து விழாக்கலில் பயன்படுத்த படும் நடன அறைகளுமென அது விரிந்து கிடந்தது . அவரால் கடற்கரையை ஒட்டி முன் பகுதி மட்டு ஆளப்பட்டது பின் கட்டு அடுத்து தெரு வரையில் நீடிப்பது . ஒருசில முறை பின்கட்டிற்கு சென்று நானும் பிற நண்பர்களும் என்ன காரணத்தினாலோ அங்கிருந்து பீதியிடன் வெளியேறி இருக்கின்றோம் . இன்று ஆயுர்வேத சாலை ஒன்று செயல் படுகிறது . மொத்த முப்புறமும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தாலும் , சொல்லவியலாத ஆமானஷ்ய நிழல் அதன் மீது கவிழ்ந்தே இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக