https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 15 நவம்பர், 2019

அடையாளமாதல் - 487 * மக்களியக்கமும் தலைமையும் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 487

பதிவு : 487 / 673 / தேதி 15 நவம்பர் 2019

* மக்களியக்கமும் தலைமையும் * 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 02




பிரன்ச் அரசாங்கத்தின் ஆதரவு உள்ளூர் பிரமுகர்களின் விதி மீறல்களுக்கு எதிராக உருவான இயக்கம் , பின்னர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கமாக உருமாற்றம் பெற்றிருக்க வேண்டும்  . சாமான்ய மக்களை இந்த சிக்கல் சென்று தொட்டிருக்க வாய்பபில்லை அதனால் ஏகோபித்த எதிர் உருவாகி இருக்கவில்லை . சிலர் அதில் சிக்கி இருக்கவேண்டும் . அவர்களுக்கான மீட்சியாக அரசியல் உருவானது . 

அந்த சூழலில் புதுவையில் அரசியல் படுகொலை சர்வ சாதாரனமானதாக இருந்தது .செல்வராஜ் செட்டியார் படுகொலைக்கு பிறகு சுப்பையா தலைமறைவானார் .  பிரன்ச் அரசாங்க அதிகாரத்தில் உருவெடுத்த எதுவார் குபேர் புதிய கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு வென்றதாக அறிவிக்கப்பட்டார் .தேர்தல் காலங்களில் வாக்கு பெட்டி கைப்பற்றப்படுவது ஒரு அரசியல் ஒழுங்காக புரிந்து” கொள்ளப்பட்டிருந்தது .அந்த சூழலின் பின்புலத்தில்  சுப்பையா X குபேர் முரண்பாடு உச்சகட்ட வன்முறையை தொட்டது.

காந்தியை புதுவைக்கு அழைத்து வந்தவர் சுப்பையா . பிற அனைத்து இந்தியப் பகுதிகளில் இருந்த உள்நாட்டு சிக்கல் புதுவையிலும் இருந்தது . காந்தியின் வருகை புதுவை மக்கள் மத்தியில் உருவாகும்  கிளர்ச்சி  புதிய அரசியல் நகர்விற்கு வழிவகுக்கும் என சுப்பையா நினைத்திருக்கலாம். அப்போதைய சூழலில் காந்தியின் அகிம்சா கொள்கை காங்கிரஸின் ஒரு பிரிவினருக்கு உகப்பளிக்கவில்லை . காங்கிரஸை நோக்கி வந்தவர்கள் அதன் பின்னர்  காங்கிரசிலிருந்து  பிரிந்து தனி அமைப்பாக செயல்படத் துவங்கினர் .இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட்  இயக்கம் உருவான போது புதுவையில் அது சுப்பையா தலைமையில் திரண்டது .

நாடு சுதந்திரமடைந்த பின்னர் சர்வதேச அரசியலை கருத்தில் கொண்டு பிரதமர் நேரு , மற்றும் வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் புதுவை விடுதலைக்கு நேரம் பார்த்து காத்திருந்தனர் . ஆந்திராவில் நிஜாம் அரசை ராணுவம் கொண்டு வீழ்த்தியது  போல புதுவையில் செய்ய இயலாது . உள்ளூரில் பிரன்ச் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் திரும்பும் வரை காத்திருப்பது என முடிவெடுத்திருந்தனர் . புதுவையை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் பொறுப்பு , பக்தவத்சலம் மற்றும் காமராஜர் வசம் பிரதமர் நேருவால் ஒப்படைக்கப்பட்டது .

புதுவை பகுதியில் இருந்து அதை துவக்குவது இயலாது என காமராஜர் கண்டுகொண்டிருக்க வேண்டும் . காரைக்காலில் துவங்க முடிவெடுத்தார் .விடுதலை போராட்டம் மக்கள் எழுச்சி என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றதுபோராட்டமும் , புரட்சியும் எளிய மனிதர்களுக்கானதல்ல . அவர்களின் உணர்வை தூண்டுவது மிக எளிதில் நிகழ்ந்தாலும் அது  மிக அரிய சந்தர்ப்பத்தில் மட்டுமே திறந்து நிகழ்வது . ஆனால் அது உச்சம் தொட்ட  நாளில் இருந்து வடியத்துவங்கி விடும் . மக்கள் தங்கள் அன்றாடங்களை நோக்கி சென்று விடுவார்கள் . நீண்ட கால போராட்டத்தை அத்தகைய முயற்சிகள் நீர்த்துப் போகச் செய்துவிடும் .காந்தியைத் தவிர அதை பிறர் அத்தனை நுட்பமாக அறிந்திருக்கவில்லை என நினைக்கிறேன். அல்லது மனசோர்வினால் பிறர் அதிலிருந்து மிக சடுதியில் விலகிவிடுகிறார்கள் .

காரைக்காலை  மையப்படுத்திய சண்முகம் காமராஜரின் பார்வைக்கு முதலில் வந்தவரில்லை . அவர் தனது தனி ஆவர்த்தனத்தை அப்போது துவக்கி இருந்தார் . இந்திய விடுதலை நிகழ்ந்த பிறகு நீண்ட நாள் புதுவை பிரன்ச் அரசின் அதிகாரத்தில் இருக்க வாய்ப்பில்லை என உணர்ந்திருந்தார் . பிரன்ச் அரசாங்கம் அதை நன்கு உணர்ந்திருந்தது . மக்களாட்சி என்கிற பாவனையில் எதுவார் குபேர் தலைமையில் அது மறைமுக அதிகாரத்தில் இருக்க நினைத்திருக்கலாம் .காரணம் குபேர் பிரன்ச் இந்திய தம்பதிகளின் மகனாக பிறந்தவர் என்பதால்  அவர் பிரன்ச் அரசாங்கத்தின் நம்பிக்கைக்கு உகந்தவராக இருந்தார் 

குபேர்   தனக்கென எதற்கும் துணிந்த குறுங்குழு ஒன்னறை வளர்த்து வைத்திருந்தார் . அதன் வன்முறைக்கு புதுவை அரசியலாளர்கள் அஞ்சினர் . பொது மக்கள் அவரை புரிந்திருந்தாலும் அவரது வன்முறை மக்கள் அளவில் சென்று தொடாதவாறு இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அரசியல், எதிரிகளை கையாளும் , அவரது அணுகுமுறை அனைவரும் அறிந்த  ரகசியம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்