https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 25 நவம்பர், 2019

அடையாளமாதல் - 491 * நிஜமான நிழல் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 491

பதிவு : 491 / 678 / தேதி 25 நவம்பர் 2019

* நிஜமான நிழல்  * 


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 06




காலம் ,அரசியலில் குறித்த தனது அனைத்து பாதைகளை திறந்து வைத்து அதன் முடிவுகளை நோக்கி அனைவரையும் கொண்டு செல்கிறது என்றாலும், தனிமனித ஆளுமை என்கிற பிறிதொரு கூற்றுடன் , சூழல் என்கிற ஒன்றும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என நினைக்கிறேன்.அவற்றிலும் ஒன்று: காலம்” பிறிதொன்று: தன்னாழுள்ளப் புரிதலுள்ள ஆளுமை” . அரசியலில் ஒரு ஆளுமையை உருவாக்குவது  இவை ஒன்றோடொன்று ஊடுபாயும் போது நிகழ்வது  . 

தன்னாழுள்ளப் புரிதல்” என்கிற ஒன்று மட்டுமே அரசியலில் பெரும் ஆளுமைகளை கட்டமைத்து உருவாக்குகிறது என நினைக்கிறேன், துரதிஷ்டவசமாக அவர்கள் அனைவரையும்  சரித்திரம் நினைவுகூர்ந்து தன்னுள், பதிந்து வைக்காத போதும் , அவர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் தங்களின் செயல்பாடுகளால் மனநிறைவுற்று மன்மறைகிறார்கள்.

அனேகமாக சண்முகம் குறித்த அரசியல் ஆவணம் இது மட்டுமே என நினைக்கிறேன். எனது நண்பர் மார்க்சியவாதி லெனின்  ஒருமுறை என்னிடம் புதுவையின் நீண்ட அரசியல் வரலாற்றில் சண்முகத்தின் ஆளுமையை வெளிப்படுத்தும் ஆவணப் படம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றார் . அதற்கான முயற்சிகளை துவங்கி பின் பல்வேறு அரசியல் சூழல்களினால் கைவிடப்பட்டன.

சண்முகத்திற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்கிற புரிதல்,  புதுவை அரசியலில் அன்று நிலவிய  வெறுமை” காரணமாக இருந்திருக்க வேண்டும் . ஆனால் அந்த வெறுமை சண்முகத்திற்கு மட்டுமன்றி அனைவரின் பொதுவில் இருந்தாலும் தனது ஆழுள்ளத்தால் தன்னை புரிந்திருந்த அவருக்கு மட்டுமே அது எதிர்காலம் என பிரிந்து நின்றது . பிற அனைத்து தலைவர்களும் பின்னாளில் அதில் விளைந்த பலனை மட்டும் பங்கு கொண்டார்கள் .

1954 ல் புதுவை மற்றும் அதன் பிற பகுதிகளும் தனித்தனியாக  பிரன்ச் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டது . ஜூன் 13 ஆம் நாள் யேனம்” இந்திய இராணுவ காவல் துறை வசமும் ,   ஜூலை  15 ஆம் நாள் மஹே” இந்திய ஆதரவு குழுவிடமும் மற்ற பிற அனைத்து பகுதிகளும் (பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால்) நவம்பர் முதல் தேதியில் இந்திய நடைமுறைக்கு (இந்திய டிபெக்டோவிற்கு) மாற்றப்பட்டது . ( சட்டம் உருவாகி இல்லாததால் இங்கு சட்டப்படி என்கிற சொல்லை உபயோகப் படுத்த முடியாது) . 1962 ஆகஸ்ட்16 ஆம் நாள் பிரன்ச் ஒப்பந்தம் (டி ஜூயூர்) மூலம் புதுவை இந்திய ஒன்றியத்திடம் ஒப்படைக்கப்பட்டது . 1963 ஜனவரி 7 ஆம் நாள் புதுவை யூனியன் பிரதேசமானது

1954 முதல் 1963 ஆகஸ்ட் மாதம் வரை முதன்மை ஆணையர்கள் என்றும் பின்னர் துணைநிலை ஆளுனர்களை கொண்டு மத்திய அரசு புதுவையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது 

1955 ஜனவரி 13 ஆம் நாள் முதல் 1959 ஆகஸ்ட் மாதம் வரை முதன்மை கவுன்சிலர்கள் புதுவையை ஆண்டனர் . காரைக்கால் பக்கிரிசாமி பிள்ளை முதல் கவுன்சிலராக நியமிக்கப்பட்டார் . அவர் மரணமடைய பின்னர் எதுவார் குபேர் 1956 ஏப்ரல் 20 ஆம் நாள் பதவியேற்றுக் கொண்டார் . 1959 ஆகஸ்ட் மாதம் முதல் 1963 வரை  வெங்கட சுப்பா ரெட்டியார் அந்த பதவியில்  இருந்தார்.

புதுவை இந்திய இணைப்பிற்கு பிறகு அதன் நிர்வாக போக்கை நிர்ணயிக்கும் இடத்திலிருந்தவர் காமராஜர் என்றாலும் அவரை மீறி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குபேர் ஒரு தவிற்க முடியாத சக்தியாக இருந்ததற்கு பிரதமர் நேரு முக்கிய காரணமாக இருந்தார். நேருவால் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு காலாதீதமானது என்பதால் அதை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்தாக வேண்டிய சூழல் எழுந்ததும் தனது அரசியல் சூழ்தல் மூலம் அதை தீர்த்து வைத்தலும் , அவரது ஆழுள்ளம் அதை ஏற்கவில்லை என்பதை பின்னர் அவர் சண்முகத்துடன் இணைந்து  அவற்றை சரிசெய்ய முயன்றதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது .

புதுவை காங்கிரஸ் அமைப்பைக் கொண்டு தனது செயல்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனதால் அவர் சண்முகத்தின் எண்ணத்திற்கு  உடன்பட்டு அவர்  நினைத்ததை செயல்படுத்தினார்.புதுவை அரசியலில் சண்முகத்துடன் அவர் இணைந்து செயல்பட்டதற்கு சண்முகம் மட்டும் காரணமில்லை . அடிப்படையில் இந்தியாவை ஆண்ட பிற நாட்டவர்  மீதான அவரது மனவிலக்கம் குபேரின் மீதும் இருந்தது முக்கியமான காரணம் . அதற்கு காரணங்கள் இரண்டு , ஒன்று : குபேர் இந்திய புதுவையின் இந்திய இணைப்பை எதிர்த்தார் என்பது , இரண்டு : பிரன்ச் அரசாங்கத்திற்கு அனுக்கமாக கடைசிவரை இருந்ததார் . மூன்று அவர் பிறப்பில் பிரன்ச் பிரதிநிதி அவருக்கு இந்திய அரசியலில் இடமில்லை என நினைத்தார்

லிங்க் :-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்