https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 10 நவம்பர், 2019

அடையாளமாதல் - 485 * செயல் தடை *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 485

பதிவு : 485 / 671 / தேதி 10 நவம்பர் 2019

* செயல் தடை


ஆழுள்ளம் ” - 02
தத்துவ தரிசனம் - 06




கட்சி அரசியலில் ஒன்றுக்கு மேற்பட்ட தலைவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய இரு நிலை செயல்பாடுகளை உளவியலால் பகுத்து கொள்ள முடியுமானால் அதில் சிக்கல் இல்லாமல்  நிலைபெறலாம்.அது மூன்றாவது பார்வையை கொடுக்க வல்லது . அத்தகைய புரிதலை தில்லி அரசியல் களம் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது என நினைக்கிறேன் . நாட்டின் அனைத்து வித மாநில  தலைவர்களும் தங்களின் முடிவுகளைப் பொருத்தவரை அகில இந்திய அமைப்பின் போக்கும் , மாநில கட்சிகளின் நிலைபாடும்  பெரிய வேறுபாடு கொண்டவை  என நான் இப்போதும் நினைக்கிறேன்.மாநிலத் தலைமைகள்  தங்களின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவரும் தங்களின்  அரசியல் சரி நிலைகளை ஒத்தே தங்களை அனுசரித்து தங்கள்  நிலைகளை வகுத்துக் கொள்ள வேண்டியவர்களே என்கிற போக்கே  காணப்படுகிறது .

அகில இந்திய மற்றும் மாநில கட்சி அமைப்பில் இந்த வேறுபாடு முதன்மையானது என நினைக்கிறேன்.அகில இந்திய அரசியல்  தலைவர்களாக தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள விழைபவர்கள் தங்களின்  தன்னறம்” என்கிற ஒன்றை சிறிதளவாவது பேண இயலுகிறது .

அகில இந்திய அரசியல் கட்சிகளின் நடைமுறை ஆரம்ப கால இதற்கு வேறுபட்டிருந்தது  . இன்றும் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு அரசியலில் ஒரு சிறு சதவிகித நிர்வாகம் சுதந்திரமானது .சுய கௌரவமுள்ள ஒருவர் முனைந்தால் அதை மேலும்  வென்றெடுக்க முடியும் என்றே நினைக்கிறேன்சில அகில இந்திய தலைவர்கள்  ,தங்களை முற்றாக தலைமைக்கு தங்களை ஒப்புக் கொடுத்து பிழைத்திருக்க விரும்புபவர்கள் அவர்கள் பெரும்பாலும் , அமைப்பு மனிதர்களாக இருப்பதில்லை அரசியல் தனியர்கள் . இவர்கள் எப்போதும் கட்சிக்கும் அமைப்பிற்கும் ஆபத்தானவரகள் .

ஒவ்வொரு மாநில கட்சி அமைப்பும் அதன் பொறுப்பாளர்களால் ஆளப்படுவது . அவர்கள் ஏதாவது ஒரு கோட்பாட்டினால் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட தங்களின்  கள காய்களின் ஒழுங்கு மற்றும் வகைமை படுத்தப்பட்டு ஆளப்படுகிறது .அவை தொண்டர் தலைவர் , தலைவர் தலைவர் , மேலிட ஏவலர்,  போன்றவை .மேலிட ஏவலர் பெரும்பாலும் தனியர்கள் .கட்சியில் இவர்களின் செல்வாக்கு ஓங்கி நிற்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் . அகில இந்திய அரசியலில் குழப்பமும் , அதன் விளைவாக தேர்தல் தோல்வியும் நிகழ்கிறது .

அகில இந்திய விவகாரங்கள் மட்டுமே தில்லி தலைமையின் முடிகளுக்கு விடப்படும் , மாநில பொறுப்பாளர்களை கடந்து அகில இந்திய தலைமையை சந்திப்பது சில ஆளுமையுள்ள மாநில தலைவர்களுக்கே சாத்தியப்படுவது . மாநில பொறுப்பாளர்கள் அந்தந்த மாநில தலைமைக்கு உதவவேண்டியவர்கள் . சில பொறுப்பாளர்கள் அதி தீவிர நோக்கு உள்ளவர்களாக இருப்பார்கள்  , அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயல்வதும், அதில் சிக்காமல் மேலிட தொடர்பால் தங்களது எண்ணத்தை முடிக்கும் மாநில தலைமைகளுடன்  பொறுப்பாளர்களுக்கு எப்போதும் ஏழாம் பொருத்தம் . அதனால் மாநில தலைமைக்கு எதிரான பிற குறுங்குழுவினர்களுக்கு அவர்கள் ஆதரவளிப்பதன் வழியாக மாநில தலைவர்களை கட்டுப்படுத்தி முயல்வார்கள் .  

மேலிடத் தலைமை உட்கட்சி அரசியலை புரிந்து கொள்ள இரண்டாம் நிலைத் தலைவர்களை பல வகைமைகளில் பிரித்தும் , சேர்த்தும் புரிந்து கொள்ள முயல்கிறது . அதையொட்டியே அரசியல் நிலைகொள்கிறது . அதன்  எல்லைகளும் அதன் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு சிறகும்,  தளைகளும் அதை ஒட்டியே உருப்பெற்றிருக்கும் .அதை அவர்களும் , அவர்களால் பிறரும் அதை ஒருபோதும்  கடக்க இயலாது .

தனது ஆரம்ப கால அரசியலில் சண்முகம் தன்னியல்பால் தன்னை  தொண்டர் தலைவர் என்கிற வகைமைக்குள் வைத்திருந்தார் .பிற்காலத்தில் தலைவர் தலைவர் என இரட்டை அடையாளத்துடன் நிற்க முயன்ற போதுதான் அவரின் அரசியல் வளர்ச்சி கண்டது என்றாலும் , அதை நிலைகொள்ளச் செய்வது பிறரின் எண்ணமும் துணைப்பது   .ஆரம்ப கால அரசியலில் எந்த பின்புலமும் இல்லாததால்  அவர் தன்னை தொண்டர்களின் தலைவராக உருவகித்திருக்க வேண்டும் .அது அவரின் இயல்பாக இருந்தது .அந்த காரணத்தினால் அன்றிருந்த பலம் மிக்க மாநில தலைவர்கள் அவரை தலைவர்களின் தலைவராக அங்கீகரிக்க விரும்பவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்