https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 21 நவம்பர், 2019

அடையாளமாதல் - 489 * பிறவிக் கணக்கு *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 489

பதிவு : 489 / 676 / தேதி 21 நவம்பர் 2019

* பிறவிக் கணக்கு


ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 04





பலரால் துரதிஷ்டவசமான வீடு என அஞ்சப்பட்ட அந்த வீட்டில் இருந்தவரை  புதுவை அரசியலில்  சண்முகத்தின்  இடம் அசைக்க முடியாத  சுமார் நாற்பதாண்டு கால வரலாறு கொண்டது , பின்னர் அந்த வீட்டு விட்டு அதே கடற்கரை சாலையில் பிறிதொரு வீட்டிற்கு அவர் குடியேறியபோது அரசியலில் அவருக்கான இடம்  காணாமலானது விசித்திரமான முரண்.   புதுவையின் முதல்வராக அவர் இருந்த காலத்தில் அந்த வீட்டை விட்டு அவர் வெளியேறியது எனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக இருந்தது .அந்த வீடு அவரது நீண்ட அரசியல் வரலாற்றை பிரதிபலிப்பது . அவரை பிரமாண்டமானவராக காட்டிய பல கூறுகள் அந்த வீட்டிலிருந்துதான் துவங்கி இருக்க வேண்டும்.அந்த வீடே கூட ஒரு பிரமாண்டத்தின் அடையாளம்தான் . ஏன் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என அவரிடம் கேட்ட போது அவர் சொன்ன விசித்திரமான காரணமே அவற்றை இந்தப் பதிவில்  கொண்டுவரக்  காரணமாயிற்று .

அவர் அந்த வீடு தனக்கு எவ்வித நிம்மதியையும் அளிக்காததைப் பற்றி , காரணமே சொல்லமுடியாதபடி  கை நழுவி போன பல  பதவிகள் குறித்து மற்றும் தன்னை தவிர பிற எவராலும் அங்கு குடியிருந்திருக்க முடியாததைப் பற்றி  சொன்னார்  . பல அப்பாவிகள் கொலையுண்ட வீடு .அந்த வீட்டை மையப்படுத்தி சர்வாதிகரமிக்க பிரமுகர்கள் தங்களின் விழைவுகளை சாமான்யர்களின் மீது தினப்பதும் அதற்காக பலிகொள்ள தயங்காதது  பற்றி நிறைய தகவல்களை சொன்னார் . அவை மிரட்சியை அளிப்பவைகாலம் எப்போதும் சாமான்யர்களிடம் கொடூரமாக நடந்து கொள்கிறதோ  என பல சந்தர்ப்பங்களில் நினைப்பதுண்டு .

பின்னாளில் சென்னை புகழ் பெற்ற டாக்டர் கெ .எம்  செரியன் தனது மருத்துவமனையை அந்த வீட்டில் துவங்க நினைத்து அது முடியாமலாகி . இன்று அங்கு ஆயுர்வேத ஆலோசனை மையம் செயல்படுகிறது . அந்த வீட்டின் முன்புறம் மாற்றி அமைக்கப்பட்ட பிறகும் அன்று நிலவிய அமானுஷ்ய சூழல்  இன்றளவும் விலகவில்லை என்றே நினைக்கிறேன் .எனது இரவு நடை எப்போதும்  கடற்கரை சாலையில்தான். இப்போதும் அந்த வீட்டை கடக்கும் ஒவ்வொரு முறையும் அந்த வீட்டில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சண்முகம் சொன்ன நினைவில் எழும் அப்போதெல்லாம் அவை புதுவையின் இருண்ட , மறந்து போன வாழ்க்கையின் மிச்சம் அங்கு இன்னமும் தேங்கியிருப்பது போல தோன்றுவதுண்டு

குபேர்  எனது முது தந்தைக்கு நெருங்கிய நண்பர் .எனது முது தந்தை இறந்த போது நிகழ்ந்த நீர்க்கடன் செலுத்துகைக்கு வந்திருந்த போதுதான்  நான் அவரை முதலும் கடைசியுமாக பார்த்தது .அப்போது எனக்கு ஆறு வயதிருக்கிலாம் .அவர் எனது கவனத்தை கவர்ந்த காரணம் அவர் வந்த போது சிறுவர் நிறைய பேர் அவரை பிரியமுடன் பப்பா , பப்பா” என அழைத்தபடி சூழ்ந்து கொண்டனர் . அனைவருக்கும் கொடுக்க விந்தையாக தனது சட்டை கீழ் பாக்கெட்டில் நிறைய சில்லறை காசுகள் வைத்திருந்தார் , அனைவருக்கும் கொடுத்து முடித்த பிறகு வீட்டிற்குள் வந்ததை நினைவுறுகிறேன் .பொது மக்கள் மத்தியில் அவருக்கிருந்த நல்லெண்ணமாக அதை புரிந்து கொள்ள முயல்கிறேன்  .

புதுவை அரசியல் மற்றும் தனிப்பட்ட முறை என இரண்டுவிதமான அனுகுமுறையை அவர் வளர்த்தெடுந்திருக்க வேண்டும் . காமராஜர் நினைத்த படி புதுவையில் செயல்பட இயலாமல் போனதற்கு குபேரின் இந்த இரட்டை நிலைப்பாடு காரணம் என நினைக்கிறேன் .இது ஒரு சிக்கலான உளவியல் . புதுவை மக்களுடன் இணைந்து விடுதலை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய புதுவை தலைவர்களில் சுப்பையா வன்முறையை கையில் எடுத்ததும் . வெங்கடசுப்பா ரெட்டியார் போன்றவரகள் புதுவையில் புற நகரிலிருந்து கொண்டு போராடிக் கொண்டிருந்தனர் .இந்த சூழல் காமராஜருக்கு எண்ணியபடி போராட்டத்தை முன்னெடுக்க தனக்கான தடைகளாக பார்க்கப்பட்டிருக்கலாம் .

காமராஜரின் புதுவையை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க ஆதரவளித்த காரைக்கால் பக்கிரிசாமி பிள்ளை பின்னர் புதுவை முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டார். புதுவையில் அசலான போராட்டத்தை நடத்திச் சென்ற வெங்கட சுப்பா ரெட்டியார் முதல்வராக முடியாமல் போனதற்கும் , இரண்டாம் நிரையில் சென்று நின்றதற்கும் பின்னால் காமராஜரின் கோபம் அல்லது வருத்தம் குறித்து பேசுவது இந்த பதிவின் நோக்கம் .

காரைக்காலில் இருந்து கொண்டு காமராஜர் நினைத்ததை செய்து முடிக்க இயலவில்லை .சிறு சிறு சம்பவங்கள் விடுதலை போராட தீயை ஊதி பெருக்க இயலவில்லை .காரைக்காலை ஒட்டிய தமிழகப் பகுதியகளில இருந்து கொண்டு புதுவை இணைப்பிற்கு திட்டமிட்ட காமராஜரின் எண்ணம் நிறைவேறவில்லை .

புதுவை முற்றும் தமிழகத்தால் சூழ்ப்பட்ட பகுதி .புதுவைச் சேர்ந்த பிரன்ச் அரசாங்க ஆதரவு பெற்ற தலைவர்கள் அனைவரும் புதுவையை விட்டு வெளியே செல்ல இயலாத சூழல் உருவாக்கப்பட்டு புதுவை முற்றாக சுற்றி வலைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது . அதன் பிறகே புதுவை பிரன்ச் ஆசி பெற்ற தலைவர்கள் காங்கிரசின் செயல் திட்டத்திற்கு உடன்பட வேண்டிய நிர்பந்தத்திற்கான சூழல் உருவானது .அதன் பின்னனயில் புதுவை விடுதலை செயல்படுத்தப்பட்டு , புதிய மந்திரிசபை உருவாக்கப்பட்டது. குபேர் போன்றவர்கள் காங்கிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றனர் . பின்னர் பக்கிரிசாமி பிள்ளை குறுகிய காலத்தில் மரணமடைய குபேர் புதுவை முதல்வராக பதவியேற்றார் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்