https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 5 நவம்பர், 2019

அடையாளமாதல் - 483 *அறிதலின் சுதந்திரம் *

ஶ்ரீ:


அடையாளமாதல் - 483

பதிவு : 483 / 669 / தேதி 05 நவம்பர் 2019

*அறிதலின் சுதந்திரம் 


ஆழுள்ளம் ” - 02
தத்துவ தரிசனம் - 04




எழுத்தாளர் ஜெயமோகனை அவதானிக்க துவங்கியது அவருடைய உலகில் பிரவேசிக்கும் யக்தி நான் எண்ணும் பலனை கொடுக்கும் என நம்புகிறேன்  .  ஒவ்வொரு பதிவையையும் ஆழ்ந்து வசிக்கும் பொது கிடைக்கும் புரிதல்கள் , திறப்புக்கள் அளப்பரியவை . பிறரின் ஆக்கங்களை வாசிப்பதை முற்றாக நிறுத்தினேன் . கடந்த நான்கு வருடங்களாக பிற நூல்களை வாசிப்பதில்லை . முதலில் அது தவறோ என நினைத்ததுண்டு . அது சரியென்றது சில நாட்களுக்கு முன்பாக அவரது தளத்தில் வந்த பதில் எனது எண்ணத்தை இன்னும் தெளிவுறச்செய்தது . அதுஒரே ஆசிரியரை வாசித்தல்மற்றும்இருத்தலின் ஐயம்என்கிற தலைப்பில் வந்த கேள்வி பதில் பகுதி . அவை தனித்தனியாக பதியப்பட்டு இருந்தாலும், இரண்டின் சாராம்சம் ஒன்றே .

அதில் அவர்ஒரே ஆசிரியரை நெடுநாட்கள் கூர்ந்து வாசிப்பவர் மட்டுமே அந்த ஆசிரியரை உண்மையாக அறிகிறார்கள்என்றும், “ஒரே ஆசிரியரில் மூழ்கி அவரை முற்றறிவதன் மூலமே இலக்கியத்தையே நாம் அறியமுடியும்என்பதையும் உணர்ந்திருக்கிறேன் . அதன் விரிவாக இலக்கியத்தின் உள்ஆளாழ்ந்த கருத்து மட்டுமின்றி , சமகால இலக்கியத்தின் போக்கையும் அறிந்து கொள்ள முடிகிறது என நினைக்கிறேன்.

ஓரு வலிமையான ஆசிரியர் உண்மையில் அந்தப் பொதுச்செல்வாக்கிலிருந்து வெளியே இழுக்கிறார். ஆகவேதான் அவரை அத்தனைநாள் வாசிக்கிறோம். பொதுச்செல்வாக்கு என்பது அத்தனை எளிமையானது அல்ல. அது எளியது, ஆனால் மிகமிக ஆற்றல்கொண்டது. ஏனென்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாகி வந்து பல்லாயிரம்பேரால் சொல்லப்பட்டு பலநூறு அமைப்புகளால் வலியுறுத்தப்பட்டு கருத்துக்களாகவும் நம்பிக்கைகளாகவும் நம்மைச்சூழ்ந்திருப்பது அது”. 

நம் ஆழுள்ளத்தில் படிமங்களாக திகழ்வதுஎன்கிறார் .மேலும் தத்துவஞானி ஒருவரின் [கவனிக்க ஒருவரின்] உலகுக்குள் நுழைந்து அவருடனான ஆழ்ந்த உரையாடலினூடாகக் கண்டடைவதுஎன்கிற கருத்தை மிக அனுக்கமாக உணர்ந்தது மட்டுமின்றி , அந்த உணர்வுகள் எப்படிபட்டவையாக இருந்தது , அதிலிருந்து கொண்டு என் பயணம் எதை நோக்கியதாக இருந்தது என்றும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன் .

அவற்றுடன் அவரது சிறுவயது நிகழ்வுகளை குறிக்கும்புறப்பாடுபதிவும்  இணைத்த பிறகு எனக்கு அவரைப் பற்றிய சித்திரம் முழுமை பெற்றது  . அதிலிருந்து நான் என்னப் பெற்றுக்கொண்டேனோ அதையேதான் அவரது மற்ற ஆக்கங்களிலும் விரிவாக கண்டடைந்தேன். அது மீள மீள இந்து மெய்ஞான மரபை வெவ்வேறு வடிவத்தில் , மொழியிலில் கருத்தியலில்  வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது . அவை அனைத்தும் அவரது மையக் கருவுடன் சென்று இணையும் ஒரு தொடர் முயற்சியாக எனக்கு தோன்றியபடி இருந்தது .

வெண்முரசின்  நிறைந்துள்ள மீறல் கூறுமுறை, பழைய முற்போக்கு பாணியை இன்னும் அழுத்தமாக முன்வைக்கப் படுவதாக முதலில் உணர்ந்த போது  அது என்னை சீண்டப்படுவதாக நினைத்தது  ஒரு சூழல் . எனக்கு அது விஷ்ணுபுரம் வாசிக்கும் போது உக்கிரமாக ஏற்பட்டது . மரபை ஏற்கும்  ஒருவரை  அது வலிந்து வெளியேற்றுவது . சில வார மனவிலகளுக்கு பிறகு , அதன் அறைகூவலை ஏற்று மீளவும் அதை வாசிப்பதை துணைத்தது அவரது எழுத்துக்களே

அது உக்கிரமான புறந்தள்ளி விளையாடும் ஒரு விளையாட்டுப் போலச் சொல்படுபவை. கருத்துக்களை விடுத்து எழுத்தாளரை நோக்கி வரச் செய்யும் ஒரு இரக்கமற்ற விளையாட்டு . அதை ஜெயமோகனின் ஆணவம் போன்றது ஆனால் அது அவரது அடையாளத்தை உருவாக்குவது, நிறுவுவது  . மீறல் பாணி எழுத்துக்களை முன்வைக்கும் இந்த மனநிலை மனிதர்தான் மதம் , மொழி, மரபு மற்றும் பண்பாட்டில் மீதான நம்பிக்கை கொள்பவர் . இந்த நாட்டை சுற்றி இன்னும் பார்த்தீராத பயணி . இயற்கை காதலன் . மரபை விதந்தோதுபவர் . பக்தியை கைகொள்ளாதவர் . அதே சமயம் நம்பிக்கையுள்ளவர்களை உடைக்க முயலாதவர்

மதம் பற்றிய தெளிவான புரிதல் . மொழி , கலாச்சார, பண்பாட்டை அத்துடன் இணைத்து பார்ககும் பார்வை .அதற்கு கடுமையாக உழைப்பவர், தன் கருத்தை வாசகனாக உழைத்து அதை அடையட்டும் என்கிற மனோபாவம் . சிறந்த உடையாடலுக்கு உகந்தவர் . மேடை பேச்சில் எப்போதும் தயங்கி தன் கருத்தை முன்வைப்பவர். இந்த புரியாத பல எதிரும் புதிராக ஊடுபாவும் அடையாளமுள்ள மனிதர்
ஜெயமோகன் தனித்தவர் . அவர்மட்டும்தான? என்றால் இல்லை அனைவருமே தனித்துவம் மிக்க தனித்தவர்களே . சிலருக்கு தங்களை புரிந்திருக்கிறது . பலருக்கு புரியவில்லை . அந்த சிலரை நோக்கி ஆழ்மனத்துடன் பேச முயற்சிக்கும் மனிதராக நான் அவரை புரிந்து கொண்டிருக்கிறேன்

நான் முன்வைத்தது நான் புரிந்து கொண்ட ஒருவர் . இவை எதுவுமே அவரல்லாவைகளாகவும் இருக்கலாம் . ஆனால் நான் இப்படி பார்பதால் , உணர்வதால் மட்டுமே எனக்கு ஏற்படும் புரிதல்கள் என்னை சரியான திசையை நோக்கி உந்துகிறது என தீர்க்க மாக உணர்கிறேன் என்றால் அது ஒரு ஆகச்சிறந்த எழுத்தாளனின் வெற்றி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக